writ petition against Tata Indicom Broadband
கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு, அரசாங்கம் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கச் சொல்ல, இணையச் சேவை வழங்கிகள், அப்படிச் செய்யத் 'தெரவுசு' பற்றாமல், மொத்த வலைப்பதிவுகளையும் போட்டுத்தள்ளியது. ( இந்தப் பதிவின் கடந்த மூன்று இடுகைகளைப் படித்தால் விளங்கும்) பிரச்சனை பெரிதானதும், அரசே, " சில இணையத்தளங்களை மட்டும் தான் நாங்கள் தடை செய்யச் சொன்னோம், மொத்தமாக அல்ல" என்று சொல்லி, தடையை நீக்கவேண்டும் என்று இணையச் சேவை வழங்கிகளுக்குச் சொன்னாலும், அவர்கள் இன்னமும் தடையை நீக்கவில்லை. தற்போது, சில நகரங்களில், சில இணைய வழங்கிச் சேவைகள் தடையை நீக்கி இருக்கிறார்கள். எந்த எந்தச் சேவைகள், எந்த எந்த நகரங்களில், தடையை நீக்கியிருக்கிறார்கள் என்பது பற்றி குழப்பமான நிலைமை நீடிக்கிறது.
சென்னையிலும் கூட, ஏர்டெல் அகலப்பாட்டை, தடையை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. நான் உபயோகிக்கும், டாடா இண்டிகாம் இணையச் சேவை, இன்னும் ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கவில்லை. எப்போது நீக்கும் என்ப்று தெரியவில்லை. கேட்டாலும் முறையாக பதில் கிடைப்பதில்லை. ஆகவே, தடையை நீக்கக் கோரி, ரிட் மனு ஒன்றை, வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்ய இருக்கிறேன்.
இந்தக் கோரிக்கை, ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கக் கோருவதோடு மட்டுமல்லாமல், இப்படிப் பட்ட நிறுவனங்கள், இணையச் சேவை செய்யத் லாயக்கு அற்றவை என்பதால், அவர்களுடைய லைசன்ஸை ரத்து செய்யச் சொல்லியும், கேட்க இருக்கிறேன்.
டாடா இண்டிகாம் சேவையை உபயொகம் செய்து, அதனால், வலைப்பதிவுகளைப் படிக்க முடியாமல் அவதிப்ப்படும் யாரும் என்னுடன், சக விண்ணப்பதாரராக இணைந்து கொள்ளலாம். அதிகமான பேர் இதிலே, இணைந்தால், கோரிக்கைக்கு வலு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இதற்கு ஆகும் செலவின் கனமும் குறையும்.
ஆர்வமுடையவர்கள் தொடர்பு கொள்ளவும். வேறு ஏதாவது ஆலோசனை இருந்தாலும் சொல்லவும்.
( பிகு : கடந்த இருவாரங்களாக, சில புதிய மாற்றங்களினால், நான் இணையத்தில் உலவும் நேர குறைந்திருக்கிறது. ஆகவே, இந்த இடுகைக்கான பின்னூட்டங்களை, நாளைக் காலை வந்துதான், படிக்க முடியும்)

Comments
அன்புடன்,
மா சிவகுமார்
I wish you good luck, even though I am skeptical of anything big to happen.
I was a Tata Indicom fixed wireless customer a few months ago. I had to snap thier service after about 20 talks to their customer service gods over the internet facility through this phone, and happily settled with the proven 'local' BSNL service that is far superior to even my AIRTEL cell phone service. Who said privatisation is good? It is not valid here. We live in such a place.
-Kasi
(an Ex-Tata employee)
என் நண்பன் ஒருவன் டாடா இன்டிகாம் அகலப்பட்டை சேவையால் பதிக்கப்பட்டான்..ஆனால் பிரச்சினை வேறு...
அவன் மனைவி US போனதால் videochat செய்ய டாடா இன்டிகாம் அகலப்பட்டை apply செய்தான் முன்பணம் கட்டி.. 10 நாளில் இணைப்பு தரப்படும் என கூரியவர்கள் ஒரு மாதத்திறு மேலாகியும் தராததாலும் சரியான பதில் இல்லாததாலும் அதனை cancel செய்து விட்டான்..அத்ற்கு பின்னும் ஒரு 20 - 30 தோலைபேசி அழைப்புக்கு பிறகும் பணம் திரும்பி வரவில்லை...இப்பொது லீகல் நோட்டிஸ் அனுப்பியுள்ளான்...:-(
I wish you all the vest best in your fight against TataIndicom.
If possible, Please let me know how we can be help to you.
Thanks
Jayaraman V
Slightly offtopic.
If you want to byepass Tata Indicom's stupidity, just change the DNS server address in your machine to another provider's. It is not strictly ethical or advised, but for the short term you can manage, if you want to byepass.
Ma Sivakumar
just FYI.
http://www.desipundit.com/2006/08/02/blogs-ban-back-again/