1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ?
2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்?
3. எல்லாரும் சடுதியில் முடித்து விட்டுப் போக, எனக்கு முன்னால் நிற்கிறவன் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம்
'உச்சா' போவது ஏன்?
4. நாளை மற்றுமொறு நாளே என்ற குட்டி புஸ்தகத்தை நாற்பது நாளாகப் படித்தும் இன்னும் முடிக்க
முடியாமல் இருப்பது ஏன்?
5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்?
6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்?
7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்?
8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்?
9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்?
...
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ரெய்ட் நடந்த போது, போர்னோகிரா·பி படங்களை, கணிணியில் பார்த்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அவர்கள் நால்வரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இது இன்று ஹிந்துவில் வந்திருக்கும் செய்தி . போர்னோகிரா·பி பார்ப்பது, படிப்பது போன்றவை, அண்ணா பல்கலைக்கழக விடுதியின் விதிமுறைகளுக்கு உட்படாததாக இருக்கலாம். ஆனால், அந்தத் தவறுக்கு சஸ்பெண்ட் செய்வது, அந்த மாணவர்களின் வாழ்க்கையில் எத்தனை மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சரியாக உணரவில்லை. தமிழகத்தைப் பொறுத்த மட்டில், அண்ணா பல்கலைக்கழகம், ஒரு முதன்மையாக கல்வி கேந்திரம். தொழில்நுட்பக் கல்வியை எடுத்துப் படிக்க நினைக்கிற பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது கிண்டி செல்கிற பாதையைத்தான். அப்படிப்பட்ட ஒரு கல்விக்கூடத்திலே சேர, சிரமப்பட்டுப் படித்து,இரவு பகல் பாராது உழைத்து, நுழைவுத்தேர்விலே தேர்ச்சி பெற்று, வருங்காலத்தில் ஒரு பொறியாளராகலாம் என்று எண்ணத்துடன் இருக்கும் இருபதின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர்களை, ஆபாசப்படம் பார்த்த காரணத்துக்காக, தற்காலி...
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு இணையத்தளத்துக்காக எழுதிய கட்டுரையை ( எந்தவிதத் திருத்தமும் இல்லாமல் அப்படியே) இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் , சுஜாதா சார்... அன்புடன் பிரகாஷ் **************************** சிகரம் தொட்ட.... ஒரு எழுத்தாளன் பற்றிய ஒரு வாழ்க்கை சித்திரம் என்றால், அவர் இன்னாருக்கும் இன்னாருக்கும் மகனாக பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், எழுதினார் என்ற ஒரு சம்பிரதாயத்தை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அவர் பிறந்த வருஷம், எழுதிய வருஷம், விருது பெற்ற தேதி என்ற மொண்ணை எண்களை முன்னிலைப்படுத்துவது, ஒரு தேவையற்ற செயல். மேலும், அவர் முதல் முதலாக பார்த்த ஏர்போர்ட் கிரவுண்ட் இஞ்சினியர் வேலை, பின்னர் யுபிஎஸ்சி பாஸ் பண்ணி பாரத் எலக்ட்ரானிக்ஸில் விஞ்ஞானியாக சேர்ந்து பெரிய பதவியில் ரிடையர் ஆனது, பல முக்கியமான மின்னணு சாதனங்களில் அவரது பங்கு, போன்ற தகவல்கள் அவரது படைப்புலகம் பற்றிய கட்டுரைக்கு எவ்வளவு தூரம் வலு சேர்க்கும் என்று தெரியவில்லை. ஒன்று வேணுமானால் சொல்லலாம். சம்பாதனைக்கு பங்கம் ஏதும் இல்லாத கவர்மெண்ட் வேலையால், அவருக்கு எழுதி...
Comments