Dot.commers
இங்கே வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? வேலைதான். பிப்ரவரி முதல் வாரம் வரை, இப்படி இழுபறியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. சென்ற வாரம் முழுக்க, தாய்வீட்டிலும் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியவில்லை,. அதுக்கும் வேலைப் பளு தான் காரணம்.
ந்யூஸ் பேப்பரில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை வாசித்தேன். டாட்.காம் பற்றிய ஒரு கட்டுரை. கிட்டதட்ட extinct என்று நினைத்திருந்த டாட்.காம்கள், மீண்டும் எப்போது முழுக்க பக்க கட்டுரை அந்தஸ்தை அடைந்தது என்று ஆர்வமாகப் படிக்க விஷயம் விளங்கியது.
கொஞ்சம் விவரமாகச் சொல்கிறேன்.
1996களில் இருந்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை, கலக்கிக் கொண்டிருந்த இந்த டாட்காம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. என்ன, அந்த புரிதலின் அளவு வெவ்வேறாக இருக்கும். ஆனால், ஏதாவது ஒன்று தெரிந்திருக்கும். " நம்ம ஷோபனாவுக்கு பாத்திருக்க மாப்பிள்ளை, அமெரிக்காவுலே ஒரு டாட்.காமிலே வேலை செய்யறானாம் " என்று பங்கஜம் மாமி வந்து சகஜமாக உரையாடும் அளவுக்கு. ( அந்த மாப்பிள்ளை, பின்னால், பழைய வேலைக்கே திரும்பி, சென்னையில் இப்போது ஒரு செல்போன் நிறுவனத்தில், டாட்காமை விட அதிகமான சம்பளம் வாங்கிக் கொண்டு சுகபோக சுகவாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பது தனிக்கதை.)
இந்த அலை அடித்த போதும், அலை ஓய்ந்த போதும், ஒரு செய்தியாளன் என்கிற முறையிலே, பக்கத்தில் இருந்து அந்த வினோதங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு பிரபல நிறுவன முதலீட்டாளர் ( venture capitalist ) எப்படி வேலை செய்கிறார் என்பதையும் , ஒரு பகல் முழுக்க பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். ( பெயரைச் சொல்லலாமா என்று தெரியவில்லை). பிரகு அந்த நிறுவனத்தை, ஐசிஐசிஐ வங்கி வாங்கிவிட்டது. வணிக இதழ்கள் படம் பிடித்துக் காட்டும் rosy picture உக்கும் நடைமுறையில் இருப்பதற்கும் தொடர்பே இல்லையே என்று வியப்பாக இருக்கும். ஐந்து வருடங்கள் கழித்து இதை ப்ளாகில் எழுதப் போகிறேன் என்று அப்போதே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நோண்டி இருப்பேன் :-)
அந்த பத்திரிக்கை மேட்டருக்கு வருகிறேன்.
டாட்காம் அலை அடித்த காலத்தில், அதிலே புகுந்து புறப்பட்டு, வேலைக்காகாமல், புறமுதுகிட்டு திரும்ப வந்தவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு interesting report.
ஒரு ஏழெட்டு டாட்காமர்களிடம் , ஏன் தோல்வி அடைந்தது? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? திரும்பவும் அலை அடித்தால் அதிலே குதிப்பீர்களா? என்று ஒரு நாலைந்து கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்தான் அந்த அந்த ரிபோர்ட்டின் சாரம்சமே.
net2tavel.com இன் மனிஷ் சந்திரா, ராஜீவ் விஜ், e-gurukool.com இன் விவேக் அகர்வால், jobsahead.com இன் குருக்ரிபால் சிங், indiaworld.com இன் ராஜேஷ்ஜெயின், indya.com இன் சுனில் லுல்லா மற்றும் அலோக் சேத்தி என்று ஒரு ஏழெட்டு பேரின் குட்டி நேர்காணல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அவற்றில் இரண்டை மட்டும் தமிழ் படுத்தி இங்கே தருகிறேன்.
ராஜேஷ் ஜெயின்
யார் இவர்?
இவரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவருடைய netcore solutions என்ற நிறுவனம், இந்தியவை மையமாகக் கொண்ட பல சானல்களை கொண்ட indiaworld.com என்ற போர்ட்டலை, 1999 இல், sify க்கு விற்றது. எத்தனை விலைக்குத் தெரியுமா? அதிகமில்லை. 499 கோடி ரூபாய்களுக்கு. ( இந்த வர்த்தகப் பரிமாற்றத்தை sify's biggest corporate blunder என்று பின் வர்ணித்தவர்கள் உண்டு, அதாவது டாட்காம் வெடிப்புக்குப் பின்)
இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
போர்ட்டலை விற்ற பின், அவருடைய ஆர்வம் , தன் நெட்கோர் நிறுவனத்துக்கு திரும்பி விட்டது. பல ஐடி நிறுவனங்கள் போலவே, சமத்தாக, தானுண்டு, தன் கிளையண்டுகள் உண்டு என்று
வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?
1. நீண்ட காலத்துக்கான திட்டம் ஒழுங்காக இல்லை என்றால் பிரச்சினை.
2. மின் வர்த்தகம், நூறு மீட்டர் ஓட்டம் இல்லை. அது மாரத்தான்.
3. நீண்ட கால கனவுகள் வைத்திருந்தாலும், உடனடியாக் கொஞ்சம் கொஞ்சமாக
வாவது லாபம் பார்க்க முயற்சி செய்ய வேண்டும்.
4. இந்தத் தொழிலில் இறங்குவது கிட்டதட்ட வாழ்வா சாவா பிரச்சினை. ரெண்டு
அல்லது மூணு தப்புகள் வரை அனுமதி உண்டு. அதற்குப்புறம் தப்பு செய்ய
நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
திரும்பவும் இதிலே குதிப்பீர்களா? : ஓ நிச்சயமாக.
0
விவேக் அகர்வால் - www.egurucool.com
யார் இவர்?
IIM-C இல் இருந்து வெளியே வந்து நேராக, மின் வணிகத்திலே குதித்தவர். கல்வி தொடர்பான, ஈகுருகூலை, விசிக்கள் உதவியுடன் தொடங்கி, பின் தாக்குப் பிடிக்க
முடியாமல், என்ஐஐடிக்கு, ரூபாய், 14 கோடி ரூபாய்க்கு விற்று விட்டார்.
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
கன்ஸல்டன்ஸி நடத்துகிறார்.
கற்றுக் கொண்ட பாடங்கள்.
1. முதலீடுக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடாது. நல்ல ஐடியா என்றால்
பணம் தன்னால் வரும்.
2. VC ( venture capitalist) என்கிற நிறுவன முதலீட்டாளர்கள், இருபுறமும்
கூரான கத்தி மாதிரி. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மீண்டும் இதிலே குதிப்பீர்களா? Yes of course.

Comments