Happy Birthday தலைவரே

என் வயசிலே இருக்கிற அனேகம் பேருக்கு இந்தச் சிக்கல் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அதாவது படிக்கற வயசிலே, ' நீ யார் ஆளு? கமல்-ஆ? ரஜினி யா?' ங்கற கேள்விக்கு வர குழப்பம் தான் அது.

ஒழுக்கமாப் படிச்சு, 98 சதவீதம் மார்க் எடுத்து, ரஷ்யன் சர்க்கஸ் இல்லாட்டி காந்தி படம் மட்டுமே பார்த்து, காலையிலே வயலின் க்ளாஸுக்கும், சாயங்கால மத்யமா வகுப்புக்கும் போய்ட்டு வந்து, அது மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கிற அந்த ஒரு சதவீத 'பழத்தை' விட்றுங்க, மீதம் இருக்கிற ஆவரேஜ் பசங்க நெறையப் பேர் வாழ்க்கையிலே இந்தக் கேள்வி விளையாடி இருக்கு..என் வாழ்க்கையிலும் தான். அது ஆச்சு கனகாலம். எங்க எங்கயோ சுத்தினாலும் கடேசியிலே, ஒரு வலைப்பதிவு துவங்கி, கரக்டா திசம்பர் 12 ஆம் தேதி தலைவருக்கு வாழ்த்துச் சொல்றதுலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு...

என்னோட தலையெழுத்து என்னன்னா, நான், ரஜினிகாந்த் ஒரு சாதாரண நடிகர்தான்னும், அவருக்கு இருக்கிற பேருக்கும் புகழுக்கும் அவர் தகுதியானவர் இல்லேன்னும், நம்பும்படியா எழுத/சொல்லக்கூடிய ஆட்களுக்கு மத்தியிலே இருக்கற மாதிரி ஆயிடுச்சு. ரஜினிகாந்த் ஒரு அசாதாரணமான பர்சனாலிட்டிங்கறதை அழுத்தமாக ஆணித்தரமாகச் சொல்லக் கூடிய வொகபிலரி என்கிட்டே இல்லேங்கறதுதான் காரணம் என்பது கொஞ்சம் லேட்டாத்தான் விளங்குது.

அமோல் பாலேகரை விடவும், அசால்ட்டா கலக்கின அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் தான் பெஸ்ட் என்று சொல்லும் போது முகம் சுளிப்பவர்களையும் , சமூகத்திலே அடித்தள மக்கள்லேர்ந்து, எலீட் கும்பல் வரைக்கும், பலரும் ரஜினிகாந்த் மீது அபிமானம் வெச்சிருக்காங்கன்னா, அதுக்கு ஏதோ ஒரு காரணம் - நமக்குப் பிடிபடலைன்னாக்கூட - இருக்கும் நம்ப மறுக்கிறவங்களையும், பிடிபடவில்லை என்பதாலேயே அதை ஒரு சமூகக் கோளாறு என்று முடிவுகட்டும் கோஷ்டியையும், ரஜினி காந்த் நடிச்சதிலேயே உருப்படியானது கே.பாலசந்தர் இயக்கிய ஆரம்ப காலப் படங்கள் தான், பிற்காலத்திய மசாலாப் படங்கள் தான் அவரைக் கெடுத்து விட்டன என்று சொல்பவர்களையும், ஈரோ ஒர்ஷிப் பற்றி லெக்சர் கொடுப்பவர்களையும் அறிவுப்பூர்வமான தளத்தில் நின்று எதிர் கொள்வது எப்படி என்று யாராச்சும் சொல்லித் தந்தா தேவலை.

சரி, இருக்கிற வேலையிலே அதை கத்துக்கிட்டு, என்ன செய்யப் போறேன்? பதிலா சிம்பிளா ஒரு பதிவு எழுதலாம். ஜஸ்ட் ஒரே வரி.

இன்னாது?

ஹாப்பி பர்த்டே தலைவரே... கலக்கோ கலக்குன்னு கலக்குங்க...

* Image Courtesy : www.rajinikant.com

Comments

Anonymous said…
பிரகாஷ்ஜீ...

அதுக்குள்ள ஒரு வருசம் ஓடிப் போயிருச்சா?! போன முறை இதேநாள் தலைவர் பிறந்த நாளுக்கு நீங்க என்னை சிறப்பிச்சதா நினைவு! :)))
//ஹாப்பி பர்த்டே தலைவரே... கலக்கோ கலக்குன்னு கலக்குங்க...
//

Repeatei!
ஜோ/Joe said…
சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் ஆக்டரின் ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Unknown said…
பிரகாஷ்.. நல்லதொரு நினைவு திருப்பல் பதிவு..

எது எப்படியோ உங்களோடச் சேர்ந்து நானும் சொல்லிக்கிறேன்

கலக்கோ கலக்குன்னு கலக்குங்க தலைவா...

ஹேப்பி பர்த்டே தலைவரே!!!

இங்கே நம்ம போஸ்ட்டரையும் பாருங்க...
http://chennaicutchery.blogspot.com/2006/12/happy-birthday.html
தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அருமையான பதிவு..

//அறிவுப்பூர்வமான தளத்தில் நின்று எதிர் கொள்வது எப்படி என்று யாராச்சும் சொல்லித் தந்தா தேவலை.//

அதெல்லாம் கவலபடாத தல.. அவுங்க கத்திக்கிட்டேதான் இருப்பாங்க.. அதுக்கு காரணம் எரிச்சல்தான்.. நாட்டுக்கு நல்லது செய்யப்போறோம்னு சொல்லி அரசியல் கட்சி ஆரம்பிச்சி உலகத்துல இருக்கர எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்யுற ஆளுங்கள மாதிரி இல்ல நம்ம தலைவர்.. அவரளவில அவர் சரியாத்தான் இருக்கார்..தன் கடமையை மிகச்சரியாக செய்கிறார். மக்கள் ரசிக்கும்படி படம் தருகிறார்..அதுதான் ஒரு நடிகனின் தலையாய கடமை. தன்னை வைத்து படம் எடுப்பவர்களுக்கு நல்ல லாபத்தை தருகிறார். கடல் கடந்தும் ரசிகர்களை சம்பாதிக்கிறார். இது தவிர வேறென்ன வேண்டும்????
இளவஞ்சி : ஒரு வருஷம் ஓடினதே தெரியலை ... :-) அப்றம் எங்க சார் ஆளையே காணோம்?

சிபி, ஜோ : நன்றி :-)

தேவ் : பார்த்தேன். கலக்கியிருக்கீங்க..

ம.ஓசை : சரியாச் சொன்னீங்க. வந்ததுக்கு நன்றி.
Premalatha said…
சால்பாஸ் - ஹிந்தி பார்த்திருக்கீங்களா? என்னோட fav of ரஜினி படம். எத்தன தடவ வேணா பார்ப்பேன். அலுக்கவே அலுக்காது.

அனேகமா "ரஜினி ஆளா, கமல் ஆளா"-ன்னு கேட்டு பிரிச்சுட்டதாலதான் நான் அதிகமா ரஜினிய கண்டுக்காமலே இருந்திட்டேன்னு நினைக்கிறேன். அவரப் பத்தி ஆரய்ச்சி பண்ணி புத்தகம் போடுங்களேன். நல்ல முயற்சியாக இருக்கும்.
rajkumar said…
நண்பரே,

நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்பாதாவதுதான் படிக்கிறேன். பிளாக் பக்கம் வந்ததே உங்க மாதிரி ஆட்களின் வித்தியாச எழுத்தை படிக்கத்தான்.

ரஜினியைப் போல் உங்கள் எழுத்திலும் ஓர் ஈர்ப்பு.

அன்புடன்

ராஜ்குமார்

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I