அன்பே சிவம்
விமர்சனங்கள் படித்திருக்கிறேன், துண்டு துண்டாக சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், இந்தப் படத்தை முழுசாக, இதுக்கு முன்னாலே பார்த்ததில்லை. நேற்றைக்கு சூரிய தொலைக்காட்சி உபயத்திலே பார்த்தேன். அருமையான திரைப்படம்.
வாழ்க்கையிலே, தினப்படி அவசரங்களிலே, நான் தொலைத்த அழகான தருணங்கள் பல உண்டு. அதிலே, அன்பே சிவம் பார்க்க விட்ட சந்தர்ப்பத்தையும் அவசியம் சேர்த்துக்கலாம்னு தோணுது. மிக நுட்பமான காட்சிகள், மாதவனுக்கான tailor made role, வீதி நாடகக் காட்சிகள் ( நிஜத்திலேர்ந்து ரொம்ப விலகியிருந்தாலும் ), கூர்மையான வசனங்கள், உறுத்தாத இசை என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது.
வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட இருவரை, முக்கால் வாசிப் படம் முழுக்க, ஒன்றாக உலவவிட்டு, வசனங்களாலேயே படத்தை நகர்த்தி, இடையில், ப்ளாஷ் பாக் மூலம் கமல்ஹாசனின் பழைய வாழ்க்கையை சொல்லி, அவருடைய வாழ்க்கையில் வரும் பாலாவை ( கிரண்) மாதவனுக்கு முடிச்சுப் போட்டு அருமையாக திரைக்கதை எழுதியிருக்கிறார். இறுதிக் காட்சியில், மாதவனுக்கு எழுதுகிற கடிதத்தில், நாயகியை பாலசரஸ்வதி என்று குறிப்பிடுவதும், ந.சிவம் என்று கையெழுத்திடுவதும் மிக நுட்பமான காட்சி என்று தோன்றியது.
கம்யூனிசம், காபிடலிஸம் பற்றி, கமல் மாதவனுக்கு இடையில் நடக்கிற வாக்குவாதங்கள் குழந்தைத் தனமாக இருந்தன என்றாலும், வசனங்களின் கூர்மை, அந்தக் குறையை மறக்கச் செய்துவிடுகின்றன.
கமலஹாசன் நடிச்சு எனக்குப் புடிச்ச படங்கள் மிகச் சிலவே. இனி, அதிலே அன்பே சிவமும் ஒன்று.
ஆமா, இந்தப் படம் ஏன் ஓடலை?
கட்சி மாறிட்டேனா என்று கேட்கிறவர்களுக்கு, " ஆமாம், மாறிட்டேன், சிவாஜி வர வரைக்கும்"
Comments
//ஆமா, இந்தப் படம் ஏன் ஓடலை?//
Huu..You answerd already and asking question to others.
Don't fail to watch craps like 'Chandramuki'in theatre,but wait for 'Anbesivam' to show in TV,and asking others question why didn't run well at theatre.huh
முதல் பின்னூட்டத்திலயே இப்படியெல்லாம் ஆப்படிக்கக் கூடாது.
கட்சிமாறினவங்களையெல்லாம் இப்படியா வரவேற்பாங்க?
;-)
- சிவாஜி வந்து ஓடி முடிஞ்சதும் மறுபடியும் (இப்போ சந்திரமுகிக்குப் பிறகு வந்த மாதிரியே)திரும்பி வந்து " ஆ..ஹே!ராம் என்ன நல்ல படம்"னு சொல்லப் போறீங்க பாருங்க!
எனக்கும் நேற்றுதான் இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஏற்கனவே கேள்விபட்டதை வைத்து எதிர்பார்த்த அளவு இல்லை. முதலாளி-தொழிலாளி மோதல்-காதல், காதலியை நண்பனுக்கு தியாகம் செய்தல் என்ற இரண்டு வழக்கமான கதைகளைப் பிணத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதை நகர்த்தும் உத்தி (ஒரிசாவிலிருந்து விமானம், பஸ், ரயில், கார், ஆட்டோ மூலமாக) புதிதாக இருந்தாலும் ஒரு ஆள் ஒன்பது பேரை அடித்து வீழ்த்துவது மசாலா உத்திகளையும் மாற்றி இருக்கலாம்.
கொசுறு: 36 இன்ச் பெல்பாட்டம் காலத்தில் எங்களுக்கும் ஸ்டைல் மன்னரா-காதல் இளவரசரா என்று பெரிய குழப்பம் இருந்தது (திமுககாரர்களுக்கு வைகோவா, கலைஞரா என்பது மாதிரி). 'சந்திரமுகி' இன்னும் பார்க்கவில்லை தெலுங்கில் பார்க்க வாய்ப்பு கிடைத்தும். மணிச்சித்திரத்தாழு கிடைத்தால் பார்க்கவேண்டும்.
வசந்தா நீ வாழ்க
தருமி : ஹேராம்? நடக்காது. நான் அரங்கத்திலேயே பார்த்துட்டேன். நல்லா பெங்காலி கத்துகிட்டேன். அதுக்கு மேலே சொல்ல ஒண்ணுமில்லை.
முத்து : படிச்சேன். வலது சாரி, இடது சாரி ன்னு சொல்லியிருக்கீங்க. அதிகம் விளங்கலை. நான் தமிழ்ப்படங்களில் தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் தேடறதில்லை. நான் படம் பார்க்கிறது வேற காரணங்களுக்காக...
சு.மூ : நான் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் தான் பார்த்தேன். நீங்க சொல்ற குறைகளை படத்திலே கவனித்தாலும், ரசிக்கறதுக்கு குறுக்கே வந்து தொந்தரவு செய்யலை. எனக்கு இந்த அம்சம் ரொம்ப முக்கியம். தினசரி, வடிவேலு, கவுண்டமணி வகையறாக்களை குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு பார்க்கறதுக்கும் இதுதான் காரணம். அன்பே சிவத்தின் நிறைகுறைகளை, வசந்தனுடைய பழைய பதிவில் இப்பத்தான் வாசிச்சேன். உங்க கருத்துடன் ஒத்துப் போகும்னு நினைக்கிறேன்.
மணிசித்திரதாழ் பாக்கணுமா? பிரச்சனையே இல்லியே, நிறைய இணையக்கடைகளில் கிடைக்கிறதே? இல்லேன்னா, மெட்ராஸ் வரப்ப சொல்லுங்க, போட்டுக் காட்டறேன்.
ஓ, இது அந்தப் படத்தின் உல்டாவா?
The name of the movie is Planes, Trains and automobiles. Kamal might deny it is not the same:)
அன்பே சிவம் மட்டுமல்ல, நானறிந்தவரை,இந்திரன் சந்திரனில் இருந்தே கமலின் பல படங்கள் 'உல்டா'தான் :-). ஆனால் அதைத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப கமல் தருவதற்காய் இன்னொருமுறை பார்க்கலாம். அதுபோல மூலங்களையும் தயங்காமல் குறிப்பிடலாம். Rain Coat போன்ற படங்களைக் கூட மாப்பாசானின் கதையின் தழுவல் என்று போடுகின்றமாதியாகவேனும் :-).
உங்க offerக்கு நன்றி :-)சென்னை வரும்போது சொல்றேன்.
பத்மா,
தகவலுக்கு நன்றி. இந்த வாகன உத்தியைத் தான் படத்தின் சிறப்பம்சம் என்று நினைத்திருந்தேன். இப்படி பொட்டுன்னு போட்டு உடைச்சிட்டிங்களே :-(
டிஜே
//அன்பே சிவம் மட்டுமல்ல, நானறிந்தவரை,இந்திரன் சந்திரனில் இருந்தே கமலின் பல படங்கள் 'உல்டா'தான் :-).//
இந்திரன் சந்திரனா (நான் பார்த்ததில்லை)? இந்த மாதிரி வேலைகள் 'ராஜ பார்வை'யிலேயே ஆரம்பித்துவிட்டது. கமல் வெளிநாட்டுப் படங்களிலிருந்து சுட்டு 'புதுமையாக' படம் பண்ணுவார். மற்றவர்கள் தமிழ்ப் படங்களிலிருந்து சுட்டு இன்னொரு தமிழ் படம் வழங்குவார்கள். அதுதான் அறிவுஜீவிக் கலைஞனுக்கும், சாதாரணக் கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம்.
ஜான் கேண்டி, & ஸ்டீவ் மார்ட்ன் ஆகியோரால் நடிக்கப்பட்டவை, முற்றிலும் மாற்றமானவை. கமல் மாதிரி பொதுவுடமையாளர் கிடையாது ஸ்டீவ். நல்ல பதவி வகிக்கிற ஒரு நிறுவன மேலலுவலர். கிருத்துமஸ் க்காக வீட்டிற்கு போக முடியாமல்,பனிப்புயலால் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டு கேண்டியை சந்திக்கிற பாத்திரம். 2 பேரும் சேர்ந்து வாடகைக்கார் எடுத்துக் கொண்டு ஊர் போக பார்ப்பார்கள், கிழக்கே போகும் நெடுஞ்சாலையில் மேற்கே தவறாக ஓட்டிக் கொண்டு மற்றும் பல கூத்துக்களை அடித்துக் கொண்டு !
ஒரு வழியாக ஊர் போனபிறகுதான் கேண்டிக்கு குடும்பம் என்று என யாருமில்லை என்பது தெரியவரும். அதுவரை கேண்டியை அற்பமாக நினைத்து வந்த ஸ்டீவ் மனமிளகி அவரை ஜீசஸின் பிறந்தநாளை தன் குடும்பத்தோடு கொண்டாட அழைப்பார்.
கதை முடிவு என்பதாக ஞாபகம். ஆனால் நிச்சயமாக கதையின் முதுகெலும்பு PL TR AU லிருந்து இறக்குமதி பண்ணியதுதான்.
இறக்குமதி என்றவுடன் மற்றொரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. வெள்ளிக்கிழமை மத்தியானம் கேட்ட (உ) ஸ்பேனிஷ் பாட்டு ஒன்று, விருமாண்டி படத்தில் வரும்," ஆத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்தில" ங்கற பாட்டோட அச்சு. யார் பாடினா பாட்டை என்பதை அறிவிக்கவில்லை டீஜே.
ஒரு நல்ல கலைஞனுக்கு ரசிகர்கள் செய்யும் துரோகமே, அவனுடைய நல்ல படங்களை அங்கீகரிக்காமல் விடுவதுதான். கமலுக்கு அத்தகைய துரோகத்தை நாம் செய்து விட்டோம்.
போருளீட்டிம் முனைப்பில் நாம் இழக்கின்ற மனித நேயத்தை சுள் என உரைக்க வைத்த படம். நான்காவது முறையாக நேற்று பார்த்தேன்.
அன்புடன்
ராஜ்குமார்
ஐய்ய! சோக்காக்கும்!எரிச்சல் தான் வருது.
ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்... சோடா ப்ளீஸ்!
Comment courtesy - "Rajini" Ramki
Vasan,
I suppose you meant John and not Steve. Because, Kamal is the equivalent of John Candy; saying which I should admit that (though the political leanings were present only in Anbe Sivam) there were some similarities between the characters too (or at least the incidents that happen between the 2 protagonists).
A very good flick, nevertheless!
இது தவறு என்று நினைக்கிறேன்.
அந்த சின்னப்பையன் இறந்த போது கமலும் மாதவனும் கடவுளைப் பற்றிப் பேசுவார்களே, அது போன்ற சிந்தனையை, வசனத்தைப் பார்த்த பின்புமா இது போலப் பேசுகிறீர்கள்.
இந்தப் படத்தை ஒரு பொழுது போக்குப் படமாகப் பார்க்காதீர்கள். கமல்ஹாசனின் நடிப்பைப் பார்க்க வாருங்கள். வசனங்களைப் பார்க்க வாருங்கள்.
நான் முழுக்க முழுக்க 'ரஜினி' ரசிகன் என்பதையும் கூடவே ஒத்துக் கொள்கிறேன்.
கமலின் இது போன்ற படங்கள் ஓடாததற்கு ரசிகர்கள் காரணமல்ல.
கமல்தான் காரணம்!
அந்தப் படத்தில் மிகவும் எரிச்சலூட்டிய விஷயம், கமலின் மேக்-அப் தான்!
அந்த ஒரு கெட்-அப் இல்லாமல் கூட இந்தக் கதையைச் சொல்லியிருக்க முடியும்.
தான் நினைப்பதுதான் சரி என்ற கமலின் பிடிவாதமே, படத்தின் தோல்விக்குக் காரணம்.
நண்பர் 'ஜோ' சொன்னது போல, தன்னால் நடிக்க முடியும் என்று முதல் 50 படங்களில் காடிய பின்னர், ரசிகர்களையும் கொஞ்சம் மதிக்கக் கற்று கொண்டால், அவரின் எல்லாப் படங்களும் ஓடும்.
ஒரு நல்ல கருத்தினைக் கூற வரும் போது, ரசிகர்களின் கவனத்தைத் திசை திருப்பும் வண்ணம், படத்தைக் கொடுத்தால், யார் குடும்பத்தைக் கூட்டி வந்து பார்ப்பார்கள்?
வேண்டுமானால், அந்தக் காலம் போல, ஒலிநாடாக்கள் மூலம் இந்தப் படத்தை ஓட்டியிருக்கலாம்.
ஆம், கண்ணை மூடிக்கொண்டு, இதன் ஒலி வடிவத்தைக் கேட்டுப் பாருங்கள்!
நான் சொல்வது புரியும்.
என் வீட்டில், தொலைப்பெட்டியோடு, என் டூ-இநொன்னையும்' இணைத்து, இது போன்ற படங்களின் ஒலினாடாகாளை சேமித்து, கேட்பது உண்டு!
நானும் ரொம்பப் பேசிவிட்டேனோ?
'ரஜினி' ரசிகன் என்றாலே அப்படித்தான் போலிருக்கிறது!
இல்லையா, திரு.'ஜோ'!!!!?
:-)
sk,
நான் எங்கே இப்படி சொல்லியிருக்கிறேன்? ரசிகர்களை மதிப்பது என்றால் என்ன?என்னை மதிப்பவர்கள் படத்தைத் தான் நான் பார்ப்பேன் என்று எந்த சபதமும் எனக்கு இல்லை .இருந்தாலும் ,கமல் என்ற கலைஞன் என் ரசனையை மதித்து ,அதற்கேற்ற படைப்புகளை கொடுப்பதாகவே (மற்றெல்லா நடிகர்களையும் விட) நான் கருதுகிறேன்.