கேட்டது, படித்தது, எழுதியது

கேட்டது : சப்தஸ்வரங்கள். ஏவி.ரமணன் நடத்தின வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவர் கழண்டு கொண்ட பிறகு பார்க்காமல் இருந்த நிகழ்ச்சி. எந்த விதமான மாற்றமும் இல்லாமல், ஒரு விருந்தினர், மூன்று பங்கேற்பாளர்கள், மூன்று சுற்றுக்கள் என்று அந்தகாலத்து சென்னைத் தொலைகாட்சியின் உலாவரும் ஒளிக்கதிர் போல ஒரே பேட்டர்னில் வந்து கொண்டிருந்தாலும், விடாமல் பார்ப்பதற்கு ஒரு காரணம், சில பங்கேற்பாளர்களின் அபூர்வமான குரலினிமையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் சில அபூர்வமான பாடல்களும். இடப்பக்க ஜிமிக்கி வலப்பக்கம் வரும் படி தலையை ஆட்டி ஆட்டி, குட்டி ·ப்ராக்கில் வந்து பாடிக் கொண்டிருந்த அதே சின்னப் பெண் மதுமிதா தான், ' கனாக்காணும் காலங்கள்' பாடினார் என்று கேள்விப்பட்ட போது வியப்பாகத்தான் இருக்கிறது. ரமணன் விலகிய பிறகு சற்று சுரத்து குறைந்திருந்த அந்நிகழ்ச்சி, இரு வாரங்களுக்கு முன்பு சூடு பிடித்தது. கல்லூரியில் இருந்து வந்த இரு குழுக்களுக்கு இடையே போட்டி. ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்களும் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்களும் (இந்தக் கல்லூரி எங்கே இருக்கிறது? கோவை? பொள்ளாச்சி? ) ஒரு முழுமையான ஆர்கெஸ்ட்ரா சகிதம் வந்து கலக்கினார்கள். எலக்ட்ரானிக் ஜிகிடி வேலை எல்லாம் இல்லாமல், ஒரிஜினல் வாத்தியங்களை, ஒரிஜினலாகவே வாசித்துக் கலக்கிய ஹிந்துஸ்தான் மாணவர்கள், தேர்ந்தெடுத்த முதல் பாட்டு, ஹே ராம் படத்திலிருந்து , ராம்..ராம் என்ற பாட்டு. சத்தியமாக அவர்கள் காதுக்கு கேட்காது என்று தெரிந்திருந்தும், உட்கார்ந்த இடத்தில் இருந்தே வெல்டன் என்று கூவினேன்.

கடந்த வாரம் முழுக்க திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொன்று, " கௌரி மனோகரியைக் கண்டேன்.." என்ற பாடல். இப்பாடலைக் கேட்பதுதான் சுகம். ஜில்பாத் தலையுடன் வரும் விஷ்ணுவர்த்தன் கோமாளி போல இருப்பார் என்றாலும், கூட வரும் சுமித்ரா, பாடலைக் ரசித்து கேட்க விடமாட்டார். distraction :-) . இணையத்தில் இந்தப் பாடல் இருக்கிறதா?

2. இது என்ன ஸ்டேஷன் என்று கேட்டார்,
இரவுப் பயணம் முடிவை நோக்கிய அதிகாலையில்
'கிருஷ்ணராஜபுரம்' என்றேன் வெளியே பார்த்து
'இங்கே என்ன ·பேமஸ் ? " என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.

இன்னொரு முறை கேட்டார்
என்னவாக இருக்கும்,
மலைக்கோயிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியனா...
என்னவாக இருக்கும்?
இறங்கி உள்ளே போய்
ஊர்க்காரன் எவனையாவது
பிடித்துக் கேட்கலாம்.
ஆனால் ஒன்றுமே ·பேமஸ் இல்லாவிட்டால்,
அவமானத்தில் அவன்
மனம் உடைந்து விடக் கூடும்
இல்லாவிட்டால் சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரணா சந்தையைப் பற்றி உற்சாகமாகவும்
ஒரு மணிநேரம் பேசவும் கூடும்,
என்னை பிடித்து வைத்துக் கொண்டு.
ரயிலோ இரண்டு நிமிஷம் தான் நிற்கும்.
அட வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே!
உனக்கெல்லாம் ஸ்டேஷன் ஒரு கேடா?
( முகுந்த் நாகராஜன், காலச்சுவடு, மார்ச் 2005)

3. திண்ணைக் கட்டுரை : வாய்ப்பு கிடைக்கும் போது, அகப்பட்டவர்களிடம் பேசி, வாயைக் கிண்டி, அதை எழுதுவது என்ற கெட்ட பழக்கத்தை விட்டு, இந்தக் காரணத்துக்காகவே சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செய்தால் என்ன என்று தோன்றியது. தருமிகளுக்குக் கேட்கத்தான் தெரியும். பதில் சொல்ல சொக்கநாதன் இருந்தால் தான் திருவிளையாடல் சிறக்கும். முதன் முறையாக ஒரு திரைப்பட நிறுவனத்துக்குள் நுழைந்து, இயக்குனர் வசந்த்துடன் உரையாடியது ஒரு நல்ல அனுபவம். எழுத வேண்டும் என்று மனசுக்குள் அடிக்கோடிட்டு இருந்த ஒரு விஷயத்தை, பேட்டி முடியும் தருவாயில், ஆ·ப் தி ரெக்கார்ட் என்று சொன்னதைத் தவிர குறை வேறு ஒன்றும் இல்லை.

Comments

ROSAVASANTH said…
//இணையத்தில் இந்தப் பாடல் இருக்கிறதா?//

http://www.dhool.com/sotd2/572.html
குமரகுரு கல்லூரி பொள்ளாச்சியில் தற்காலிகமாகத் துவங்கப்பட்டு கோவைக்கு இடம் மாற்றப்பட்டது.

-சத்யராஜ்குமார்
ram.v said…
you call this poem.baba kalachuvadu can publish kaivessama kai veesu instead of publishing this nonsense.
நன்றி ரோசாவசந்த், சத்யராஜ்குமார் & ராம்.வி ( நான் அதை கவிதைன்னு சொல்லவேயில்லீங்களே ராம்வி?. படிச்சப்போ எனக்குப் பிடிச்சிருந்தது. அவ்வளவுதான் :-) )
subbu said…
Hi Prakash

I
subbu said…
I have the mp3 version of this song. I can mail you, if you wish.
//I have the mp3 version of this song. I can mail you, if you wish//

thanks subbu. i got the mp3 yesterday from another friend.
Boston Bala said…
அது என்னதுங்க 'அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதில்'? சிந்துபைரவி ஜனகராஜ் போல் மண்டை காய்ந்து கிடக்கிறேன்... ப்ளீஸ்....

என்னுடைய சில ஊகங்கள்:
1. ஷாம் அடிபட்டாரா?
2. 'ஏ.நீ ரொ.அ.இ.' ஏன் தோல்வியடைந்தது?
3. 'அண்ணாமலை'யில் அப்படி சொல்லித்தான் வாய்ப்பை இழந்தாரா?

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை