நேர்முகமும் எதிர்முகமும்
திண்ணையில் வெளியான கட்டுரை .படிப்பதற்கு போரடிக்கும் என்று தோன்றினால் , இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு, தமிழ்மணத்தை f5 செய்யலாம். என் உலகத்தை மேலும் இனிமையானதாக மாற்றும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.
நேர்முகம்
புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் சென்னை வெய்யிலைப் போன்றது . போன வருடத்தை விட இந்த வருடம் ஜாஸ்தி என்று எல்லா வருடமும் சொல்கிறார்கள். நுழைந்ததும் வரவேற்கும் டெல்லி அப்பளம் பேல்பூரி சமோசா இத்தியாதிகளிடம் இருந்து தப்பித்து உள்ளே நுழைந்தால், உடனே வெளியே ஓடிப்போய்விடலாமா என்றுதான் முதலில் தோன்கிறது. அத்தனை நெரிசல். வேறு எங்காவது, நல்ல இடவசதி உள்ள இடமாக மாற்றக்கூடாதா என்று பதிப்பக நண்பர்களிடம் புலம்பினால், அந்த அதிகாரம், பதிப்பாளர் சங்கமான பிபாஷாபாசுவிடம் ( அல்லது அதைப் போலவே ஒலிக்கும் ஒன்றிடம்) இருக்கிறதாம். சங்கத்தின் தலைவர் பெயர் முத்துக்குமாரசாமி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் துணை இதழ் சொன்னது. அவரது மின்னஞ்சல் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். அடுத்த வருடமாவது, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டருக்கு மாற்றக்கோரி, கையெழுத்து வேட்டை நடத்தி, அவருக்கு அனு...