Mani Ratnam's Guru - Review
[ ஸ்பாய்லர் உண்டு ]
நிஜ வாழ்க்கை நாயகர்கள் மீது மணிரத்னத்துக்கு இருக்கும் பிரேமை அலாதியானது. வேலுநாயக்கர், ஆனந்தன், தமிழ்ச்செல்வன் என்று நிழல் உலகத்தில், வரதராஜ முதலியார்,எம்ஜி.ஆர்.கருணாநிதி போன்ற்வர்களுக்கு அச்சு அசலான பிரதியை உருவாக்குவதில் மணிரத்னம் சில சமயங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். குரு படத்தில், அவர் முயன்றிருப்பது, இந்திய வர்த்தக உலகத்தில் கொடிகட்டிப் பறந்து மறைந்த தீரஜ்லால் ஹீராலால் அம்பானியின் செலூலாய்ட் பிரதியை.
கட்டுபடுத்தப்பட்ட பொருளாதாரத்தில் வர்த்தகத்தைத் துவக்கி, வெற்றிகரமாக நடத்தி, பின்னர் தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திலும், வெற்றி வாகை சூடியவர் அம்பானி. அவர், 'நல்லவை' என்று அகராதி குறிப்பிடும் அர்த்தத்துக்கு ஈடான கொள்கைகளை வைத்திருந்தவர் இல்லை என்றாலும், அதே அகராதி, 'சாமர்த்தியம்' என்று குறிப்பிடும் அர்த்ததுக்கு ஈடாக குணங்களைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட, நல்லவரா கெட்டவரா என்று எளிதிலே கணிக்க முடியாத அம்பானியை, கதையை வைத்து கதை பின்னுவது, அப்படி ஒன்றும் கம்பசூத்திரமல்ல, மணிரத்னத்துக்கு,
நிஜத்திலே, ஏடன் செல்லும் அம்பானியை, திரையில் துருக்கிக்கு அனுப்புகிறார். நிஜத்தில் கோகிலா பென் இங்கே சுஜாதா. அங்கே திருபாய். இங்கே குருபாய். பெட்ரோல் பங்கில் வேலைசெய்து, சம்பாதித்து, பணம் சேர்த்து இந்தியா வந்து சில்லறை விற்பனை , பிறகு ஏற்றுமதி இறக்குமதி, பின்னர் தொழிற்சாலை, என்று நிஜத்தில் அம்பானி வாழ்க்கை வரலாறு மொத்தமும் திரையில் காட்சிகளாக விரிகிறது.
பாம்பே டையிங் 'வாடியா' குடும்பத்துடனான பிரச்சனை, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையுடனான விவகாரங்கள், ஸ்டாக் மார்க்கெட் சர்ச்சை, அரசியல்வாதிகளுடனான நெளிவு சுளிவுகள், மும்பை ஸ்டேடியத்தில் நடந்த annual general meeting, விசாரணைக் கமிஷன், உடல்நலக்குறைவு. என்று அம்பானியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும், வருகின்றன, சில சமயம் விரிவாக, சில சமயம் மேலெழுந்தவாரியாக.
ஏதாவது பிரச்சனை கிளம்பப் போகிறது என்று நினைத்தோ என்னமோ, அனில் மற்றும் முகேஷ் அம்பானியை பெண் கதாபாத்திரமாக்கி, அமுக்கி விட்டார்.
பெரிய சக்திவேலிடம், சின்ன சக்திவேல், ' நீங்க நல்லவரா கெட்டவரா' என்று கேட்டது போல, குருகாந்த் தேசாயை, நல்லவரா கெட்டவரா என்று யாரையாவது கேட்க வைக்காமல்,விசாரணைக் கமிஷனில்,மனைவியை வைத்து பதில் சொல்ல வைப்பதில் ஒரு விதமான சாமர்த்தியம் தெரிகிறது. குஜராத்திகளின் வர்த்தகக் திறமை, உலகறிந்த விஷயம்.
இந்தப் படத்தை தன் தோளிலே வைத்து முழுக்க முழுக்கச் சுமப்பவர் குருகாந்த் தேசாய் பாத்திரத்தில் முழுமையாக வாழ்ந்து காட்டியிருக்கும் அபிஷேக் பச்சன் தான். மணிரத்னத்தின் படங்களைப் பார்ப்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள் கூட, அபிஷேக்கின் நடிப்பை பார்க்க வேண்டும். கிராமத்தில் இருந்து வந்து, டை கட்டத் தெரியாமல், ஆங்கிலம் பேசத் தெரியாமல், லாபம் பண்ணுவதையே குறியாகக் கொண்டு, அவ்வபோது உணர்ச்சி வசப்படும் கதாபாத்திரத்தில் மிக அழகாகச் செய்திருக்கிறார். பிற்கால நடுத்தர வயது கதாபாத்திரத்துக்கு, ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருந்தாலும், இளவயதுத் தோற்றத்தில் படு கேவலமாக இருக்கிறார்.
மற்றபடி, காட்சியமைப்பு, ஒளிப்பதிவும், அவ்வப்போது வந்து விழுகிற ஒன்லைனர்களும், வழக்கம் போலவே மணிரத்னம் ஸ்டைல். பத்திரிக்கை ஓனராக வரும், மிதுன் சக்கரவர்த்தியும், புலனாய்வு ரிப்போர்ட்டராக வரும் மாதவனும், அவருக்கு ஜோடியாக வரும் வித்யா பாலனும் , பிற கதாபாத்திரங்கள் இல்லாத குறையைப் போக்குகிறார்கள்.
அம்பானியின் வாழ்க்கை வரலாறு பற்றி ஓரளவாவது தெரிந்திருந்தால், படம் சுவாரசியமாக இருக்கும். ( படத்தின் கதாபாத்திரங்கள், நிஜத்தில் யார் என்று ஊகிப்பது ஒரு தனி கிக் ). இல்லாமல், ஸ்டாக் மார்க்கெட், இம்போர்ட் சப்சிடி, மெஷினரி எக்ஸ்போர்ட், பர்மிட் ராஜ் போன்றவை பற்றி அறியாதவர்கள்,
' என்னாத்த படம் எடுக்கிறாம்பா.. ஒண்ணுமே பிரியலே போ"
என்று திட்டிக் கொண்டே வருவார்கள் என்பது மட்டும் உறுதி.
என் ரேட்டிங்க : 6/10
[image courtesy : nowrunning.com]

Comments
நீங்க வலைப்பதிவுகள் பக்கம் அவ்வளவா வரதில்லைன்னு, 'பல்லவியும் சரணமும்' பதிவுகளை நிப்பாட்டிட்டேன் ;-)
பார்க்கக் கூடிய படமாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.
நன்றி.
ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே!
அவ்வளவு மோசமா?
:))
வேலு நாயக்கருக்கும் வர்தாபாய்க்கும் எந்த சம்பந்தமுமில்லை. வேலு நாயக்கர், மரியோ புசோவின் டான் கார்லியோனின் இந்திய வடிவம்!
எஸ்.கே : நன்றி. இந்தப் படத்துக்கு பாட்டே தேவையில்லை. இருந்தாலும், நாலு பாட்டு. எனக்குப் பிடிக்கவில்லை. பின்னணி இசை நன்றாக இருந்தது. ஆனால் எழுதும் போது நினைவுக்கு வரவில்லை
அதில் வைரமுத்து பெயர் போட்டிருக்கிறார்கள்.தமிழிலும் டப் பண்ணி வெளியிடுகிறார்கள?அல்லது மூலத்திலும் வைரமுத்தா?
அதே அதே..."இருவர்" படத்தில் இது செமை கிக்.
அது சரி...ஸ்பெஷல் ஷோவா..?? நடத்துங்க ராசா..யாரு இன்விடேஷன். வாத்தியாரா..??
any controversial scene in the movie?....because its a biography and the director is maniratnam
how abt the photography...i think its the first maniratnam film to be shot at foriegn location excluding srilanka for kannathil muthamittal
stock market,import subsidy,machinery export,permit raj...shabba...ippave kanna kattudhe
Couple of கேள்விகள்
1. தமிழ்ல பார்த்தீங்களா, ஹிந்தியா??
2. தமிழ்னா, டப்பிங் எப்படி, சூர்யா வாய்ஸ் Okவா, வைரமுத்து lyrics??
3. ஹிந்தினா என்னை மாதிரி ஏக் காடி மே ஏக் கிசான் பார்ட்டிகளுக்கு subtitle இல்லாம புரியுமா?? (இல்லாட்டியும் மணிரத்னம் பட dialogues ... ;) )
-- Vicky
தீவு : நான் தமிழில் தான் பார்த்தேன். இந்தியா தமிழா என்று தெரியாமல் போனேன். தமிழ் என்றதும் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனால், நன்றாக இருக்கவே குறை தெரியவில்லை. தமிழ்ல எழுதினா போதாதா, வைரம், இந்தியில் வேறு எழுத வேண்டுமா?
தமிழன் : 250 டாலர் குடுத்து பார்க்கிற அளவுக்கு சரக்கில்லை. நிதானமாகவே போகலாம். முதல் பாதியில் ஐஸை பார்த்தால் நொந்து நூலாகிவிடுவீர்கள். பிற்பாதியில் கொஞ்சம் பரவாயில்லை.
ஒளிப்பதிவு , ராஜீவ் மேனன் தானே? அதனால் வழக்கம் போலவே சூப்பராக இருந்தது.
பிரேமலதா : இதெல்லாம் சகஜமுங்க அம்மணீ :-)
எங்க ஊர் தொலைக்காட்சியின் இணையத்தளத்துச் செய்தி:
Some fans paid $500 for tickets to the gala screening of "Guru," in a rare film event for Canada's South Asian community.
Others came out just to catch a glimpse of the film's stars: Abishek Bachchan and Aishwarya Rai, a couple both on and off the screen.
"She so beautiful!" one fan said of Rai, who also models for L'Oreal cosmetics.
Another fan, who gave her name as Shelina, told The Canadian Press she hoped a rumour the couple would announce their engagement during the visit was untrue.
"So many people don't want that to happen," she said. "Everybody wants Abhishek to stay single, right? Because you can still fantasize."
Mayor David Miller said the screening shows that Bollywood is increasingly looking at the North American market, especially multicultural cities like Toronto.
Last year, Bollywood films earned an estimated $40 million in Canada.
"To have the premiere of this film is terrific, shows respect for the South Asian community here, and honours Toronto's stature in the film world," he told CTV News.
The producers of "Guru" picked Toronto for the screening after another Bollwood film, "Never Say Goodbye," attracted massive crowds at the Toronto International Film Festival.
In fact, that film drew a bigger crowd than the gala screening for Brad Pitt's film "Babel."
On Thursday, fans lined up at Toronto's Elgin Theatre for hours before Bachchan or Rai appeared, hoping to be in front as the celebrity couple walked past.
"Bollywood films do play here, but this is an even bigger deal because this is a world premiere," said film critic Richard Crouse.
"Guru" is based on the real story of Gurukan Desai (played by Bachchan), who rose from his poverty in the 1950s to become one of India's leading textile merchants - although the film takes various liberties.
The film-version of Desai's life portrays him taking unethical steps to achieve his success, while Rai plays his wife, Sujatha.
And like all Bollwood films, it has plenty of humour, singing and dancing.
யாராவது யூட்யூப்ல வர்ரதுக்கு முன்னாடியே வீடியோ பார்க்கணும்னு நினைச்சா..
சுட்டி
-மதி
சுட்டி
-மதி