பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க்கடை - BlogCamp
conference என்றால் என்ன என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த unconference என்பது கொஞ்சம் குன்ஸாகத்தான் இருந்தது. என்னதான் நடக்கும் போய்ப் பார்க்கலாமே என்றும், பிராந்திய மொழி வலைப்பதிவுகள் பற்றி ஏதாவது பேச்சு நடந்தால், உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பலாம் என்று நினைத்து இரண்டு நாள் நடந்த இந்த அ-கருத்தரங்கத்தில், இரண்டாம் நாள் கலந்து கொண்டேன்.
* Blogcamp.in என்றால் என்ன?
* யார் இதை நடத்தினார்கள்?
* யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் ?
* என்ன என்ன பேசினார்கள் ?
* யார் யார் இதற்கு வர்த்தக ரீதியில் ஆதரவு தந்தார்கள் ?
* நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி வலைப்பதிவாளர்களின் கருத்து என்ன?
* கலந்து கொண்டவர்கள் எடுத்த புகைப்படங்கள் ?
இந்தச் சுட்டிகளைச் சொடுக்கி, படித்து விட்டு கீழ்க்கண்ட பதிவைப் படிப்பது நலம். இல்லாவிட்டால், மணிரத்னம் படத்தை ரிவர்ஸில் பார்ப்பது போல ஒரே 'கேராக' இருக்கும். சிரமமாக இருக்கும் என்று தோன்றினால், பவித்ரா தாக்கல் செய்திருக்கும் அறிக்கையையாவது படித்து விடுவது உசிதம்.
கலந்துகொண்டதில் முதலில் ஒரு விஷயம் தெளிவானது. கோட், சூட், டை க்கு பதிலாக, ஜீன்ஸ் டிஷர்ட் போட்டுக் கொண்டு கருத்தரங்கம் நடத்தினால், அது அ-கருத்தரங்கம். மற்றபடிக்கு, ஒரு கருத்தரங்கத்துக்கு உண்டான அத்தனை விஷயமும் - மடிக்கணிணி, அகலப்பாட்டை, குளிரூட்டப்பட்ட உள்ளரங்கு, ஒலிப்பதிவு/வலைபரப்பு செய்ய காட்பரீ எக்ளேர்ஸ் சைசில் மின்னணுக் கருவிகள், ஐபின் சானலில் இருந்து கொண்டை மைக்குடன் செய்தியாளர், சுடச் சுட காஃபீ - அனைத்தும் இருந்தது. ஆனால், ஒரு அ-கருத்தரங்கத்துக்கு உண்டான முக்கிய மேட்டர், informal discussion, மட்டும் லேது
தொடங்கிய நாளில் இருந்து, திரை விழும் வரை கையிலே லாப்டாப் வைத்திருந்தவர்கள் அனைவரும் live blogging செய்தார்கள். ஆகவே அது பற்றி நான் ஏதும் எழுதப் போவதில்லை. குறிப்பிட வேண்டிய விஷயங்கள் மட்டும் இங்கே , சுருக்கமாக....
- வலைப்பதிவாளர் அ-கருத்தரங்கத்தை முன்மொழிந்து, வரைவு செய்து, தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, பெத்த பெருசுகளாகன யாஹூ உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதரவைத் திரட்டி, வெற்றிகரமான நடத்திக் காட்டிய சென்னை வாழ் ஆங்கில வலைப்பதிவாளர் கிருபா வின் energy level. வெல் டன்.
- சுனில் கவாஸ்கரின் உயரம். இத்தனை குள்ளம் என்று சத்தியமாகத் தெரியாது.
- ஷரத் ஹக்ஸரின் புகைப்படங்கள். ஒரு புகைப்பட வலைப்பதிவு ஆரம்பிக்கப் போகிறாராம்.
- கிரண் என்கிற Jace இன் உரையாடல்கள்.
- நானும் பவித்ராவும் கலந்து கொண்ட க்விஸ்ஸில், முதல் ரவுண்டிலேயே ஊத்திக் கொண்டது.
- ஐசிஐசிஐ பற்றி, ஒருமுறை கிருபா வலைப்பதிவு செய்ய, வங்கியிலிருந்து பிரச்சனை கிளப்பினார்களாம். அதை ஒட்டி விவாதம் எழுந்து, கொஞ்சம் பொறி பறந்தது. வெட்டு குத்து லெவலுக்கு ( சும்மா ஜோக்குங்க.... ) போகும் என்று ஆவலுடன் காத்திருந்த போது, மகராசி தீனா மேத்தா வந்து ஆஃப் செய்தார்.
- ஐபிஎன் இல் இருந்து வந்த செய்தியாளர், இண்டு இடுக்கெல்லாம் புகுந்து மடிக்கணிணியை வைத்து தட்டிக் கொண்டிருப்பவர்களிடம் செய்தி சேகரித்தது.
- நந்து சுந்தரத்தின் ( டெக்கான் க்ரானிக்கிள் செய்தியாளர் மற்றும், இந்த அ-கருத்தரங்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவர் ) உரை அர்த்தம் பொதிந்ததாகவும், ஆழமாகவும் இருந்தது. இருந்தாலும் அவர் அந்த உரையை எழுதி வைத்து வாசித்ததால், பலரும் அதை கவனிக்கவில்லை.
- அங்கிருந்தவர்களின் எண்ணிக்கையைவிட அங்கிருந்த டிஜிடல் புகைப்படக்கருவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று நினைக்கிறேன்.
- பிராந்திய மொழி வலைப்பதிவுகள் பற்றி வங்காள மொழி வலைப்பதிவாளர் அபர்ணாவின் பேச்சு. அங்கேயும் யூனிகோட் பிரச்சனை இருக்கிறதாம்.
- விக்கியுடன், நானும் பவித்ராவும் சேர்ந்து செய்த பாட்காஸ்ட்.
குவிஸ்ஸில் கோட்டை விட்ட சோகத்தோடு வெளியே வந்து வீட்டுக்குச் செல்லும் போது, தமிழில் இப்படி ஒரு அ-கருத்தரங்கம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.
*டமார்*
சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவின் டயர் பஞ்சர்.
இதிலேர்ந்து தெரிஞ்சுக்கறது என்னன்னா......
ஒரு புண்ணாக்கும் இல்லே, நீங்களா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்க வேண்டாம்....
Tags : blogcamp, blogcamp.in
Comments
***
//தமிழில் இப்படி ஒரு அ-கருத்தரங்கம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.//
ரொம்ப யோசிக்காதீங்க, கூடிய சீக்கிரம் (2100 க்குள்ளே) நடத்திடுவோம் :-)))
***
ரொம்ப நாளா ஒன்னும் எழுதவேயில்லயா, தமிழ்மணத்தில பேரையே காணும் ??
;-)
சிற்றறிக்கைக்கு நன்றி பிரகாஷ்
ஏதாவது குழப்புனேளா,இல்லையா?
//*டமார்*//
அது...
சோம்பேறிங்கறது உங்க புனைபெயர். ஆனால் அது என்னோட கேரக்டர் :). அதான் இப்படி ஆடிக்கொண்ணு, அமாவாசைக்கு ஒண்ணு
முன்னாடியே இத சொல்லியிருந்தீங்கன்னா அது என்ன அ-கருத்தரங்கம் (அட !!) குழம்பி போய் கேட்டவங்க கிட்ட தெளிவா சொல்லியிருப்பேன்
// தமிழில் இப்படி ஒரு அ-கருத்தரங்கம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.
*டமார்*
அக்மார்க் ரகம் :)
Vignesh
நல்ல காலமா அவங்களுக்காகவும் இந்தப் பதிவைப் போட்டீங்களே!
நம்ம பவித்ரா தான் பவித்ரமா போட்டுத் தாக்குவாங்களே
நன்றி ப்ரகாசாரே
யாரோ யாரோ அறிவாரோ...
க்ருபா