writ petition against Tata Indicom Broadband
கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு, அரசாங்கம் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கச் சொல்ல, இணையச் சேவை வழங்கிகள், அப்படிச் செய்யத் 'தெரவுசு' பற்றாமல், மொத்த வலைப்பதிவுகளையும் போட்டுத்தள்ளியது. ( இந்தப் பதிவின் கடந்த மூன்று இடுகைகளைப் படித்தால் விளங்கும்) பிரச்சனை பெரிதானதும், அரசே, " சில இணையத்தளங்களை மட்டும் தான் நாங்கள் தடை செய்யச் சொன்னோம், மொத்தமாக அல்ல" என்று சொல்லி, தடையை நீக்கவேண்டும் என்று இணையச் சேவை வழங்கிகளுக்குச் சொன்னாலும், அவர்கள் இன்னமும் தடையை நீக்கவில்லை. தற்போது, சில நகரங்களில், சில இணைய வழங்கிச் சேவைகள் தடையை நீக்கி இருக்கிறார்கள். எந்த எந்தச் சேவைகள், எந்த எந்த நகரங்களில், தடையை நீக்கியிருக்கிறார்கள் என்பது பற்றி குழப்பமான நிலைமை நீடிக்கிறது. சென்னையிலும் கூட, ஏர்டெல் அகலப்பாட்டை, தடையை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. நான் உபயோகிக்கும், டாடா இண்டிகாம் இணையச் சேவை, இன்னும் ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கவில்லை. எப்போது நீக்கும் என்ப்று தெரியவில்லை. கேட்டாலும் முறையாக பதில் கிடைப்பதில்லை. ஆகவே, தடையை நீக்கக் கோரி, ரிட் மனு ஒன்றை, வழக்கறிஞர் மூலமாக தாக்கல் ...