அன்பே சிவம்
விமர்சனங்கள் படித்திருக்கிறேன், துண்டு துண்டாக சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், இந்தப் படத்தை முழுசாக, இதுக்கு முன்னாலே பார்த்ததில்லை. நேற்றைக்கு சூரிய தொலைக்காட்சி உபயத்திலே பார்த்தேன். அருமையான திரைப்படம். வாழ்க்கையிலே, தினப்படி அவசரங்களிலே, நான் தொலைத்த அழகான தருணங்கள் பல உண்டு. அதிலே, அன்பே சிவம் பார்க்க விட்ட சந்தர்ப்பத்தையும் அவசியம் சேர்த்துக்கலாம்னு தோணுது. மிக நுட்பமான காட்சிகள், மாதவனுக்கான tailor made role, வீதி நாடகக் காட்சிகள் ( நிஜத்திலேர்ந்து ரொம்ப விலகியிருந்தாலும் ), கூர்மையான வசனங்கள், உறுத்தாத இசை என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது. வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட இருவரை, முக்கால் வாசிப் படம் முழுக்க, ஒன்றாக உலவவிட்டு, வசனங்களாலேயே படத்தை நகர்த்தி, இடையில், ப்ளாஷ் பாக் மூலம் கமல்ஹாசனின் பழைய வாழ்க்கையை சொல்லி, அவருடைய வாழ்க்கையில் வரும் பாலாவை ( கிரண்) மாதவனுக்கு முடிச்சுப் போட்டு அருமையாக திரைக்கதை எழுதியிருக்கிறார். இறுதிக் காட்சியில், மாதவனுக்கு எழுதுகிற கடிதத்தில், நாயகியை பாலசரஸ்வதி என்று குறிப்பிடுவதும், ந.சிவம் என்று கையெழுத்திடுவ...