குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை
தயாநிதி மாறனின் இலவச அல்வா - இலவச சிடி குளறுபடிகள் - ஓர் ரிப்போர்ட் - யுவான் சுவாங் கம்ப்யூட்டர் மயமாகி வரும் இந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால்தான் கம்ப்யூட்டரை இயக்க முடியும் என்று பலரும் நினைத்து வருகின்றார்கள். இந்த நிலைமையை மாற்றி தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கம்ப்யூட்டரை முழுமையாகப் பயன்படுத்த வகைசெய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் என்றவுடனே எதிலும் கலக்கும் அரசியல் இதிலும் கலந்துவிட்டிருக்கிறது.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற கோலாகலமான விழா ஒன்றில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் அடங்கிய சிடி (CD) ஒன்றை வெளியிட்டார். வழக்கம்போல இந்த விழாவிலும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், மந்திரிகள், நிறுவனங்கள் என்று யாரும் அழைக்கப்படவில்லை. கலைஞர் கருணாநிதி, அமைச்சர் தயாநிதி மாறன், காங்கிரஸ்காரர்கள் மட்டும்தான் இருந்தனர். சிடியை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் தயாநிதி மாறன், இந்த சிடியின் மூலம் ஆங்கிலமல்லாத பிறமொழிகளில் கம்ப்யூட்டரை இயக்கக் கூடிய புரட்சி ஒன்று வந்துவிட்டது என்று பேசினார்....