Posts

Showing posts from September, 2004

புரியுதா இல்லையா

[ கல்கியில் வந்த என் கட்டுரை ] புரியுதா இல்லையா - இகாரஸ் பிரகாஷ் சி ல தினங்களுக்கு முன்பு, நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி ஒருத்தர் எழுதிய படைப்பைவாங்கிய போது, கூடவே ஒரு இலவச இணைப்பும் கிடைத்தது. அந்த இலவச இணைப்பு, நீங்கள் நினைக்கிறார் போல ஊதுவத்தியோ, ஊறுகாய் பாக்கெட்டோ, ஜோதிகா ப்ளோ அப்போ அல்ல.ஒரு நாலு பக்க பாம்ப்லட். ஒரிஜினல் பிரதியைப் படித்துப் புரிந்து கொள்ளுவதற்கான விளக்க உரை போல இருந்தது. தேவுடா . இதல்லாம் வேலைக்காகாது என்று ,. வாங்கிய அந்த நூலை ஈசானிய மூலையில் சார்த்திவிட்டு, போகோ சானல் பக்கம் திரும்பிவிட்டேன் தான் என்றாலும், தமிழில் எழுதப் பட்ட ஒரு நவீன இலக்கிய ஆக்கத்தைப் படித்துப் புரிந்து கொள்ள, விளக்க உரை தேவைப்படும் நிலைமை சற்று விசித்திரமாகத்தான் இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளின் விசுவாசமான வாசகர் ஒருவர், தன் இரசனையை இன்னும் விஸ்தரிக்கும் கொள்ளும் பொருட்டு, இது போன்ற நவீன இலக்கியத்தின் புரியாத பக்கத்தைப் புரட்டினால், அவருடைய ரீயாக்ஷன் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. புரியாத இந்த வகை இலக்கியங்கள் யாருக்காகப் படைக்கப்படு...

விரதம் முடிந்தது

இ ந்த மாதிரி பாராட்டுகளுக்கும் , அங்கீகாரத்துக்கும் ஏங்கிக்கிடக்கிற சென்மம் தான் நானும் என்பதை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. விஷயம் ஒன்றும் பிரமாதமில்லை. என் கட்டுரை ஒன்று, இந்த வார கல்கியிலே வெளிவந்திருந்திருக்கிறது. இகாரஸ் பிரகாஷ் என்ற பெயர் தெரியாத என் உறவினர்கள் கூட, கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, " அட... பிரகாஷ்... நீயா? எழுதவெல்லாம் கூட செய்வியா... " என்று ஆச்சர்யமாக கேட்டு போன் செய்தது இன்னொரு ஜில். கல்கி அல்லது ஆனந்த விகடனில் ஏதாவது ஒன்று பிரசுரமாகாமல் என் வலைப்பதிவு பக்கம் வருவதில்லை என்ற விரதம் இன்றோடு முடிவுக்கு வந்தது. சற்றேறக்குறைய இரண்டாண்டுகளுக்கு முன்பு வரையிலும், இந்தத் திசையில் என் பயணம் அமையும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. கிளப்பில் மட்டும் எழுதிக் கொண்டிருந்த போது, " இது போதாது.... பத்திரிக்கைகளிலும் எழுத வேண்டும் என்று ஊக்குவித்து, அதற்கான வழிமுறைகளையும், நடைமுறைகளயும் சொல்லித் தந்து... முயற்சி தோல்வியடைந்த போதெல்லாம் ( புலம்பிய போதெல்லாம் என்று வாசிக்கவும்) , காபி சமோசா வாங்கி கொடுத்து உபர...