சமீபத்தில்......
வாசித்த புத்தகங்கள் நேற்றைய வானின் நட்சத்திரங்கள் - அறந்தை நாராயணன் எண்பதுகளின் இறுதியில், தினமணி கதிரில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அறந்தை நாராயணன், அகடமிக்காக எழுதும் தியோடர் பாஸ்கரனுக்கும், வெறும் தகவல்களாக உதிர்க்கும் ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தனுக்கும் இடைப்பட்டவர், அறந்தை. 1930-50 வரை வந்த திரைப்படங்களின் நடிகர்/நடிகையர் பற்றிய குறிப்புகள். பழைய திரைப்படத் தகவல்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். என் பெயர் ராமசேஷன் - ஆதவன் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், ஒரு புதிய அர்த்தத்தைத் தரும் நாவல். ஒரு படம், அல்லது ஓவியம், அல்லது நாவல் அளவுக்கதிகமாகப் பிடித்திருந்தால், அதை வெளிப்படுத்த சில சமயம் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் போகும். இம்முறையாவது, கிடைக்கிறதா என்று பார்க்கத்தான் ராமசேஷனைத் துரத்தினேன். அதிருஷ்டம் இல்லை. India unbound - Gurcharan Das இந்தியப் பொருளாதாரம் குறித்து எனக்கு இருந்த பல மாயைகளை உடைத்த நூல். ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில், ஆரம்ப நிலையில் நுழைந்து அதன் தலைவராக ஓய்வு பெற்ற, தாஸ், தன் அனுபவங்களை, அந்த அந்த சமூக/அரசியல்/பொருளாதாரச் சூழ்நிலைகளின் பின்...