Posts

Showing posts from March, 2006

THANGLISH blogs..

கில்லி க்காக, பல தமிழ் ஆங்கில வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது, சில விஷயங்கள் புலப்பட்டன. அதாவது தமிழ் பேசத் தெரிந்த ( அனேகமாக எழுதவும் தெரிந்த ) பலர், தமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வினோதமான விஷயம் அதில் ஒன்று. அது. கட் பண்ணி, ஓப்பன் பண்ணி, ஆன் பண்ணி, ஆ·ப் பண்ணி என்கிற பண்ணித் தமிழ் ஒரு கொடுமை என்றால், 'ennoda poonaikutti seththu pOchu' என்கிற தங்க்லீஷ் மற்றொரு கொடுமை. ஒரு ஆத்திர அவசரத்துக்கு, முரசு அஞ்சலை எடுத்து எழுத சோம்பல் பட்டு, ஓரிரு வரிகள் தங்கிலீஷில் எழுதுகிறவன் தான் நான் என்றாலும், சில சமயம் பக்கம் , பக்கமாக தமிழை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும் போது, பேசாமல், விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தேச சேவை செய்தால் என்ன என்கிற அளவுக்கு வெறுப்பாக ஆகிவிடுகிறது... முறையான தமிழ் தட்டச்சுப் பயிற்சி இருந்தால் தான், கணிணியில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ? முரசு அஞ்சல் அல்லது ஈ-கலப்பை நிரலியை கணிணியில் நிறுவிய பின், notepad ஐ திறந்து, தமிழை தேர்வு செய்து, 'kamal' என்று ஆங்கிலத்தில் அடித்தால் 'கமல்' என...

பட்டியல் - Review

Image
ராம்கோபால் வர்மா ஸ்டைலில் வந்திருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம். ( ராம்கோபால் வர்மாவின் எந்தப் பட ஸ்டைலில் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.) சித்திரம் பேசுதடி படத்துக்கும் பிறகு, சென்னையின் நிழலாளிகள் பற்றிய படம். களமும், மாந்தர்களும் எத்தனை தூரம் அசலுக்கு அருகிலே இருக்கிறதா என்பதை நாராயண் போன்றவர்கள் சொல்லலாம். கதை? சின்ன வயசில் இருந்தே, சென்னைக் குப்பத்தில் பிறந்து வளர்ந்து, 'போட்டுத் தள்ளுவதையே' தொழிலாகக் கொண்ட இரு நண்பர்கள் கோசி ( ஆர்யா) செல்வா ( பரத் ). அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் இட்டு காட்டுவதுதான் பட்டியல். கோசி யை இதற்கு முன்பே, அறிந்தும் அறியாமலும் படத்தில் பார்த்திருக்கிறோம். அதே வசன உச்சரிப்பு, அதே குணச்சித்திரம். தண்ணி அடித்து விட்டு புலம்பும் போதும், போட்டுத் தள்ளியவன் சவ ஊர்வலத்திலேயே குத்தாட்டம் போடும் போது, மேலே வந்து விழும் நாயகி ( பத்மபிரியா) மீது எரிந்து விழும்போதும், பின்னர் அவளையே காதலிக்கும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார். செல்வா(பரத்) பாத்திரம் புதுசு. வாய் பேசாத, காது கேளாதவர். ஓட்டல் ரூமில் கதவைத் தட்...

Jaane Bhi Do Yaroo

Image
மூட் அவுட் ஆகியிருக்கிற சமயங்களில், மனசை லேசாக்கிக் கொள்ள, அவரவர்க்கு தெரிந்த வழிகள் பலதும் இருக்கும். சிலர் 'புண் பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆற்றுவார்கள். ஒரு சேஞ்சுக்கு மனைவியை சமைக்கச் சொல்லி அதிகாரம் செய்வார்கள். . சிலர் குட்டிகளுடன் (அதாவது குழந்தைகள் கூட ) விளையாடுவார்கள். இப்படி ஏதாச்சும் உபத்திரவம் இல்லாத வேலையைச் செய்தால், மனம் திசை திரும்பும். இன்றைக்கு நான் ஒரு கிந்தி படம் பார்த்தேன். 'ஜானே பி தோ யாரோ ' ( 1983) என்கிற படத்தை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். ராஜ் வீடியோ விஷனில் 'சேல்' போட்டிருந்த போது ( எல்லா ஊரிலும் சேல் என்றால் விற்பனை, சென்னையில் மட்டும் சேல் என்றால் தள்ளுபடி விற்பனை) , கண்ணில் விளக்கெண்ணய் விட்டுத் தேடியும் கிடைக்காத படம் ebay இல் கிடைத்து. இந்தித் திரைப்படங்களில், 'ஜானே பி தோ யாரோ (JDBY) ' ஒரு முக்கியமான திரைப்படம். வினோத் குப்தா ( நசிருத்தீன் ஷா) & சுதீர் மிஸ்ரா ( ரவி பாஸ்வானி) இருவரும் புதிதாக புகைப்பட ஸ்டுடீயோவை துவக்கி, வாடிக்கையாளர்கள் இல்லாமல் ஈ ஓட்டுபவர்கள். 'கபர்தார்' என்ற ஒரு சென்சேஷனல் ( குட்டி) நாள...

No Subject

காலையில் எழுந்து கணிணி முன் அமர்ந்த பொழுது, பார்வையில் பட்ட முதல் இடுகை இது... பல வருடங்களுக்கு முன்னால், கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த போது, ஒரு விபத்திலே நண்பன் ஒருவனை நாங்கள் பறி கொடுத்தோம். ( சரியாக பத்து வருடங்கள் கழிந்து, அதே தினத்தில், மற்றொரு துயரச் சம்பவம் நடந்தது ஒரு tragical coincidence) அவனுக்கு பிடித்த பாடல் இது. பறி கொடுத்த சில மாதங்களில், கல்லூரி culturals நிகழ்ச்சியின் போது, அவனுடைய நினைவாக, இசைக்குழு, இந்தப் பாடலை பாடிய போது, ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தையில் வடிக்க முடியாது. இப்போதாவது, கொஞ்சம் வயசு ஏறிப் போய், பக்குவம் வந்து விட்டது. ஆனால், இருபதுகளின் துவக்கத்தில், உணர்ச்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இந்தப் பாட்டை கேட்கிற போதெல்லாம், ஒரு பியர் சாப்பிட்டால் தான் ஆச்சு என்கிற மாதிரி ஆகிவிடும். கடந்த ரெண்டு நாளாக ஒரு ( பர்சனல்) crisis. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழுந்துகிட்டு, சத்தமா தொலைபேசியிலே பேசிக்கிட்டு, வெள்ளமாக 'ஊதி' தள்ளிக்கிட்டு இருந்து, இன்னிக்கு காலையிலே ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பாட்டை கேட்ட போது, அலம்பித் துடைத்து விட்டது மாதிரி பளிச்சென்ற...