Posts

Showing posts from June, 2004

மேய்ச்சல் தொடர்கிறது

16. மெய்யப்பன் : மெய்யப்பனின் பார்வையை சமீபகாலமாத்தான் படித்து வருகிறேன். இவருடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தால், இவரது சார்புநிலைகளை எளிதில் கண்டுகொள்ளலாம். என் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடிக்கடி எழுதுவார். என்றைக்காவது உபயோகப்படும் என்று வாசித்து வைத்துக் கொள்வேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியை விமர்சித்து ஆரம்பத்தில் வந்த பதிவு மிகவும் பிடித்தது. " i provide an easy target" என்பார் சுஜாதா அடிக்கடி. அது மெய்யப்பனின் வலைப்பதிவு வரையிலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. கோவர்த்தனன் , ரமணீதரனுக்குப் பிறகு, நான் படித்த, சுஜாதா மீதான பொட்டில் அடித்தமாதிரியான விமர்சனக்குறிப்பு அது. ஆவணத்தில் தேடி எடுத்துப் போட பொறுமை இல்லை. அடிக்கடி எழுதினால் தேவலாம் என்று தோன்றும். புதிதாகப் பிறந்த குழந்தை அவரது மொத்த கவனத்தையும் இன்னேரம் ஈர்த்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வருவார். பின்னால் பார்த்துக் கொள்ளலாம். 17. முத்துராமன் : இவரை நான் முன்னமேயே அறிவேன், உளவியல் மாணவர். கல்லூரி பாடப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாரோ என்று அடிக்கடி ...

மேய்ச்சல் மைதானம் ( நன்றி : பாலகுமாரன்)

எழுதுவதற்கு விஷயம் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பது நல்லது. ஆனால், எழுதாமலே இருந்தால், ப்ளாக்ஸ்பாட் காரர்கள் கோபித்துக் கொண்டு, பட்டாவை கேன்சல் செய்துவிடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. இந்த சமயத்தில், கைகொடுப்பது, முன்பு எழுதி, அஞ்சல் செய்யாமல் விட்ட சங்கதிகள். இது போல, அந்தரத்தில் தொங்குகிற ஆக்கங்கள் என்னிடம் ஒரு நாற்பது ஐம்பது இருக்கும். அதில் எதையாச்சும் ரிப்பேர் செய்து போடலாமா என்று நோண்டிக் கொண்டிருந்த போது, ஒரு மடல் மாட்டியது. நான் வலைப்பதிவு ஆசிரியராக இருந்த போது, மற்ற வலைப்பதிவுகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து எழுதியது அந்தப் பதிவு. நான் அதை எழுதிய காலத்தில், சுமார் ஏழெட்டு வலைப்பதிவுகளை மட்டும் தான் தொடர்ந்து படித்து வந்தேன். மற்ற பதிவுகளில், பின்னூட்டங்களும் அவ்வளவாகக் கொடுத்ததில்லை. ஆனால், ப்ளாக்லைனர் உதவியால், ஆற்றுமை ( activity) அதிகம் இருக்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆகையால் முன்பு எழுதி அஞ்சல் செய்யாமல் விட்ட அப்பதிவினை, கொஞ்சம் revamp செய்து இங்கே இடுகிறேன். எச்சரிக்கை 1. : இது நடுநிலைமையான பதிவு அல்ல. நான் வாசிக்கிற வ...

Junior Subbudu

Image
a mail from a friend சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு வரையிலும், ராகாகியிலும், மரத்தடியிலும் இசை விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த லலிதராயர் என்கிற ராமை, புதிதாக தமிழ் இணையத்துக்கு வந்த நண்பர்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சமீபத்தில் தான் படிப்பை முடித்து விட்டு, பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ரொம்ப வெவரமானவர். வேலை நேரத்தில், வேலையை செய்வதை விடுத்து தமிழில் எழுதுவது, படிப்பது போன்ற 'அடாஸ்' வேலைகளை செய்யமாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு தொழில் பக்தி கொண்டவர். முதல் மாச சம்பளம் வந்தோடனே, கம்ப்யூட்டர் வாங்கி, மீண்டும் ஜோதியில் கலந்து கொள்கிறேன் என்று அஞ்சு மாசமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நம்ம ஊர் இசையைப் பற்றி யாராவது (விஷயம் தெரியாமல்) கோக்கு மாக்காகப் பேசினால் போட்டு கிழித்து விடுவார். . அன்னாருடன், அவ்வபோது இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எல்.சுப்ரமணியம், எஸ்.பி.பி , ஓ.எஸ்.தியாகராஜனின் கான்சர்ட் என்று நானும் இன்னும் சில நண்பர்களும், நேரிலும் மடல்களிலும் கதைப்பது வழக்கம். அப்படியாகப் பட்ட ஒரு சுவாரசியமான விமர்சன மடலை ( அவருடைய அனுமதியோடு) இங்கே பகி...

Digital Divide

On Dayanthi Maran' Plans & Badri's comments பத்ரி, தன் ஆங்கில வலைப்பதிவில், தயாநிதி மாறனின் சில கருத்துக்கள் பற்றிய தன் அபிப்ராயங்களை எழுதி இருந்தார். தொழில்நுட்பக் கருத்துக்களுடன் , எண்ணியப் பிளவு ( digital divide) பற்றியும் சொல்லி இருந்தார். அது பற்றிய என் சில கருத்துக்கள் இங்கே: கிராமங்களுக்கு கணிணிகளைக் கொண்டு போவது, தன்னுடைய முக்கியான வேலைகளில் ஒன்று என்று தயாநிதி மாறன் அவர்கள் சொல்லி இருக்கிறார். . கணிணியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பயன்படுத்தாதவர்களுக்கும் இருக்கும் இடைவெளிதான் எண்ணியப் பிளவு. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதார நாட்டிலே, மற்ற அனைத்து வளர்ச்சிப் பணிகளுடன், இந்த எண்ணிய இடைவெளியைக் குறுக்கிக் கொண்டே போவதும் மிகவும் முக்கியம். ஆனால், இதை எப்படிச் செய்யப் போகிறார் என்பது பற்றி ஏதும் தகவல் இல்லை. இது கொஞ்சம் சிரமமான காரியம் என்று பத்ரி அபிப்ராயப் பட்டிருக்கிறார். என்னுடைய அபிப்ராயத்தில், இது சிரமம் போலத் தோன்றினாலும், கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் திட்டம் தயாரித்தால், கிராமங்களுக்கு கணிணியைக் கொண்டு செல்லலாம். அந்த காலத்தில் சென்னையில் இர...