Posts

Showing posts from February, 2004

பழைய சரக்கு! (It's me.... again.....)

இன்னிக்காவது வலைப்பூவை தூசி தட்டி எடுக்காட்டி, மவனே கிழிச்சிறுவேன் என்று 'அன்பர்' ஒருத்தர் மிரட்டல் விடுத்திருந்தார். அன்பர் நல்ல நண்பரும் கூட. அதனாலே மீண்டும் ஒட்டடை அடித்து, புது வண்ணம் பூசி, ஒரு சாளரத்தில் நோட் பேட், மற்றொன்றில் சுரதா எழுத்துரு மாற்றியுடன் உட்கார்ந்த பின்னர்தான் என்னத்தை எழுதுவதென்று புரியலை. அதிகம் பேர் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு பழைய சரக்கை இங்கே தருகிறேன். சில காலம் முன்பு நண்பர்கள் வட்டம் என்ற அமைப்பிலே வந்த சரக்கு இது நாளையில் இருந்து மீண்டும் ுதுச்சரக்குடன். *********** முருகனின் இங்கிலாந்து ·ஹாங்க் ஓவர் ( pun intended:-) )இன்னும் குறையவில்லை என்று தெரிகிறது. முருகன் குறிப்பிட்டிருந்த வீதிநாடகங்கள் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் , அவ்வப்போது படித்திருந்தாலும், பிரளயன் போன்றவர்களின் துணை கொண்டு கமலஹாசன் , வீதி நாடகங்கள் பற்றிய ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தினாலும், சென்னையின் கபாலிதியேட்டருக்கு அருகில் இருந்த சடையப்ப முதலி தெருவில், " ஹஹ்ஹா.. நீர்தான் ஜாஸ்சன் துரையோ ? , என்று வீர வசனம்பேசி நடித்த , நான் ஜாக்சனாக தோன்றிய அ...