Posts

புதுப்பேட்டை - Disappointing

Image
ஒரு வழியாக வந்தே விட்ட புதுப்பேட்டையை, பார்த்தே விட்டேன். மகாநதிக்கு, கல்கி இதழில் விமர்சனம் வந்த போது, கமல்ஹாசன், கல்கிக்கு விமர்சனத்துக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுதினார். " I normally donot show emotional reactions towards film reviews, but i take an exception in this case. Mahanathi was made by honest intentions and not by clever thoughts" என்று துவங்கும் அந்தக் கடிதத்தை, கல்கி பிரசுரித்திருந்தது. நல்ல படங்களை எல்லாம், மேலே சொன்ன விதமாகப் பிரிக்கலாம் என்றால், சொல்வராகவனின் காதல் கொண்டேன் , புத்திசாலித்தனமாகவும், 7 G ரெயின்போ காலனி , நேர்மையாகவும் எடுக்கப்பட்ட படங்கள். அப்ப, புதுப்பேட்டை? ஒரு ரெண்டும் கெட்டான். கதை? சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வட சென்னை இளைஞன் ஒருவன், தாதாவாக ஆகும் கதை. ·ப்ளாஷ்பாக் உத்தியிலே துவங்கும் இக்கதை, சென்னையின் சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞன் கொக்கி குமாரின் ( தனுஷ்) பள்ளி வாழ்க்கை, சொந்த அப்பாவிடம் இருந்து உயிருக்குப் பயந்து ஓடி, பிச்சை எடுத்து, கஞ்சா கடத்தும் அரசியல் ரௌடியிடம் எதேச்சையாக சிக்கி, படிப்படியாகத் தொழிலைக் கற்றுக் கொண்டு, கொலை செய்...

THANGLISH blogs..

கில்லி க்காக, பல தமிழ் ஆங்கில வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது, சில விஷயங்கள் புலப்பட்டன. அதாவது தமிழ் பேசத் தெரிந்த ( அனேகமாக எழுதவும் தெரிந்த ) பலர், தமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வினோதமான விஷயம் அதில் ஒன்று. அது. கட் பண்ணி, ஓப்பன் பண்ணி, ஆன் பண்ணி, ஆ·ப் பண்ணி என்கிற பண்ணித் தமிழ் ஒரு கொடுமை என்றால், 'ennoda poonaikutti seththu pOchu' என்கிற தங்க்லீஷ் மற்றொரு கொடுமை. ஒரு ஆத்திர அவசரத்துக்கு, முரசு அஞ்சலை எடுத்து எழுத சோம்பல் பட்டு, ஓரிரு வரிகள் தங்கிலீஷில் எழுதுகிறவன் தான் நான் என்றாலும், சில சமயம் பக்கம் , பக்கமாக தமிழை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும் போது, பேசாமல், விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தேச சேவை செய்தால் என்ன என்கிற அளவுக்கு வெறுப்பாக ஆகிவிடுகிறது... முறையான தமிழ் தட்டச்சுப் பயிற்சி இருந்தால் தான், கணிணியில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ? முரசு அஞ்சல் அல்லது ஈ-கலப்பை நிரலியை கணிணியில் நிறுவிய பின், notepad ஐ திறந்து, தமிழை தேர்வு செய்து, 'kamal' என்று ஆங்கிலத்தில் அடித்தால் 'கமல்' என...

பட்டியல் - Review

Image
ராம்கோபால் வர்மா ஸ்டைலில் வந்திருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம். ( ராம்கோபால் வர்மாவின் எந்தப் பட ஸ்டைலில் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.) சித்திரம் பேசுதடி படத்துக்கும் பிறகு, சென்னையின் நிழலாளிகள் பற்றிய படம். களமும், மாந்தர்களும் எத்தனை தூரம் அசலுக்கு அருகிலே இருக்கிறதா என்பதை நாராயண் போன்றவர்கள் சொல்லலாம். கதை? சின்ன வயசில் இருந்தே, சென்னைக் குப்பத்தில் பிறந்து வளர்ந்து, 'போட்டுத் தள்ளுவதையே' தொழிலாகக் கொண்ட இரு நண்பர்கள் கோசி ( ஆர்யா) செல்வா ( பரத் ). அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் இட்டு காட்டுவதுதான் பட்டியல். கோசி யை இதற்கு முன்பே, அறிந்தும் அறியாமலும் படத்தில் பார்த்திருக்கிறோம். அதே வசன உச்சரிப்பு, அதே குணச்சித்திரம். தண்ணி அடித்து விட்டு புலம்பும் போதும், போட்டுத் தள்ளியவன் சவ ஊர்வலத்திலேயே குத்தாட்டம் போடும் போது, மேலே வந்து விழும் நாயகி ( பத்மபிரியா) மீது எரிந்து விழும்போதும், பின்னர் அவளையே காதலிக்கும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார். செல்வா(பரத்) பாத்திரம் புதுசு. வாய் பேசாத, காது கேளாதவர். ஓட்டல் ரூமில் கதவைத் தட்...

Jaane Bhi Do Yaroo

Image
மூட் அவுட் ஆகியிருக்கிற சமயங்களில், மனசை லேசாக்கிக் கொள்ள, அவரவர்க்கு தெரிந்த வழிகள் பலதும் இருக்கும். சிலர் 'புண் பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆற்றுவார்கள். ஒரு சேஞ்சுக்கு மனைவியை சமைக்கச் சொல்லி அதிகாரம் செய்வார்கள். . சிலர் குட்டிகளுடன் (அதாவது குழந்தைகள் கூட ) விளையாடுவார்கள். இப்படி ஏதாச்சும் உபத்திரவம் இல்லாத வேலையைச் செய்தால், மனம் திசை திரும்பும். இன்றைக்கு நான் ஒரு கிந்தி படம் பார்த்தேன். 'ஜானே பி தோ யாரோ ' ( 1983) என்கிற படத்தை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். ராஜ் வீடியோ விஷனில் 'சேல்' போட்டிருந்த போது ( எல்லா ஊரிலும் சேல் என்றால் விற்பனை, சென்னையில் மட்டும் சேல் என்றால் தள்ளுபடி விற்பனை) , கண்ணில் விளக்கெண்ணய் விட்டுத் தேடியும் கிடைக்காத படம் ebay இல் கிடைத்து. இந்தித் திரைப்படங்களில், 'ஜானே பி தோ யாரோ (JDBY) ' ஒரு முக்கியமான திரைப்படம். வினோத் குப்தா ( நசிருத்தீன் ஷா) & சுதீர் மிஸ்ரா ( ரவி பாஸ்வானி) இருவரும் புதிதாக புகைப்பட ஸ்டுடீயோவை துவக்கி, வாடிக்கையாளர்கள் இல்லாமல் ஈ ஓட்டுபவர்கள். 'கபர்தார்' என்ற ஒரு சென்சேஷனல் ( குட்டி) நாள...

No Subject

காலையில் எழுந்து கணிணி முன் அமர்ந்த பொழுது, பார்வையில் பட்ட முதல் இடுகை இது... பல வருடங்களுக்கு முன்னால், கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த போது, ஒரு விபத்திலே நண்பன் ஒருவனை நாங்கள் பறி கொடுத்தோம். ( சரியாக பத்து வருடங்கள் கழிந்து, அதே தினத்தில், மற்றொரு துயரச் சம்பவம் நடந்தது ஒரு tragical coincidence) அவனுக்கு பிடித்த பாடல் இது. பறி கொடுத்த சில மாதங்களில், கல்லூரி culturals நிகழ்ச்சியின் போது, அவனுடைய நினைவாக, இசைக்குழு, இந்தப் பாடலை பாடிய போது, ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தையில் வடிக்க முடியாது. இப்போதாவது, கொஞ்சம் வயசு ஏறிப் போய், பக்குவம் வந்து விட்டது. ஆனால், இருபதுகளின் துவக்கத்தில், உணர்ச்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இந்தப் பாட்டை கேட்கிற போதெல்லாம், ஒரு பியர் சாப்பிட்டால் தான் ஆச்சு என்கிற மாதிரி ஆகிவிடும். கடந்த ரெண்டு நாளாக ஒரு ( பர்சனல்) crisis. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழுந்துகிட்டு, சத்தமா தொலைபேசியிலே பேசிக்கிட்டு, வெள்ளமாக 'ஊதி' தள்ளிக்கிட்டு இருந்து, இன்னிக்கு காலையிலே ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பாட்டை கேட்ட போது, அலம்பித் துடைத்து விட்டது மாதிரி பளிச்சென்ற...

அன்பே சிவம்

Image
விமர்சனங்கள் படித்திருக்கிறேன், துண்டு துண்டாக சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், இந்தப் படத்தை முழுசாக, இதுக்கு முன்னாலே பார்த்ததில்லை. நேற்றைக்கு சூரிய தொலைக்காட்சி உபயத்திலே பார்த்தேன். அருமையான திரைப்படம். வாழ்க்கையிலே, தினப்படி அவசரங்களிலே, நான் தொலைத்த அழகான தருணங்கள் பல உண்டு. அதிலே, அன்பே சிவம் பார்க்க விட்ட சந்தர்ப்பத்தையும் அவசியம் சேர்த்துக்கலாம்னு தோணுது. மிக நுட்பமான காட்சிகள், மாதவனுக்கான tailor made role, வீதி நாடகக் காட்சிகள் ( நிஜத்திலேர்ந்து ரொம்ப விலகியிருந்தாலும் ), கூர்மையான வசனங்கள், உறுத்தாத இசை என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது. வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட இருவரை, முக்கால் வாசிப் படம் முழுக்க, ஒன்றாக உலவவிட்டு, வசனங்களாலேயே படத்தை நகர்த்தி, இடையில், ப்ளாஷ் பாக் மூலம் கமல்ஹாசனின் பழைய வாழ்க்கையை சொல்லி, அவருடைய வாழ்க்கையில் வரும் பாலாவை ( கிரண்) மாதவனுக்கு முடிச்சுப் போட்டு அருமையாக திரைக்கதை எழுதியிருக்கிறார். இறுதிக் காட்சியில், மாதவனுக்கு எழுதுகிற கடிதத்தில், நாயகியை பாலசரஸ்வதி என்று குறிப்பிடுவதும், ந.சிவம் என்று கையெழுத்திடுவ...

மவனே... ஒனக்கு இதெல்லாம் தேவையா?

கோவை குறும்பட பயிற்சிப் பட்டறையில் எடுத்த பயிற்சிப் படம் இங்கே.. ( டைட்டில் கார்டை நல்லா உத்து பாருங்க ) யூ ட்யூபிலே நூறு மெகா பைட்டுக்கு மேலே ஏத்த முடியாது. அதனாலே, ஏதோ ஜிகிடி வேலை செஞ்சு, கோப்பு அளவை குறைச்சு ஏத்தியிருக்கிறேன். ஒளி/ஒலிபரப்பு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. படம் கையிலே கிடைச்சு மூணு நாலு மாசத்துக்கு மேலே இருந்தாலும், யார் கிட்டவும் போட்டுக் காட்ட தெகிரியம் வரலை... யாராச்சும் பார்த்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியலை.. ஆனால், என் மனசாட்சி என்ன சொல்லுச்சு தெரியுமா? இந்த இடுகையின் தலைப்பை இன்னுமொரு முறை படிங்க...

விளம்பரம் - cocomment

நீங்க வலைப்பதிபவரா? வலைப்பதிந்து விட்டு நொடிக்கொருதரம் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தை f5 செய்பவரா? எல்லா இடங்களுக்கும் சென்று பின்னூட்டங்கள் அளிப்பவரா? நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி வந்திருக்கிறதா என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா? நீங்கள் எங்கே பின்னூட்டம் அளிக்கிறீர்கள் என்று மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா? இதிலே ஏதாச்சும் ஒரு கேள்விக்கு ஆம் என்றாலும், நீங்கள் இந்தச் சேவையை உபயோகித்துப் பார்க்கலாம். கில்லி - க்காக வலையை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது. உபயோகித்துப் பார்த்தேன். அழகாக வேலை செய்கிறது. மிக எளிதான வழிமுறைகள். Disclaimer : சேவையிலே ஏதாவது குற்றங்குறை இருந்தால், நான் பொறுப்பில்லை. என் வரையில் ஒழுங்காக வேலை செய்கிறது

pazhaiya sarakku - nalabhagam

எழுத்தாளருக்கு அவ்வப்போது வருவது writer's block என்றால் வலைப்பதிவாளருக்கு வருவது bloggers block. வார இறுதி. சாவகாசமாக உட்கார்ந்து இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தாலும், என்ன எழுத என்று தெரியவில்லை. அதுக்காக கையையும், விசைப்பலகையையும் வெச்சிகிட்டு சும்மா இருக்க முடியாதில்லையா? அதனால், பழைய சரக்கு ஒண்ணு... நளபாகம் . மங்களா கபே ஓனரின் அம்மா செத்துபோனதுக்கும் , என் மனைவி என் முதுகிலும், என் மச்சினன் முதுகிலும் டின்கட்டினதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கக்கூடுமா என்றால், இருக்கும். சர்வ நிச்சயமாய் இருக்கும். ரம்யாவின், சித்தி பெண்ணுக்கு வளைகாப்பு என்று அவள் திருவாரூருக்கு புறப்பட்டபோது, அவள் சொன்னதில், முக்கியமானது, சமையல் அறைக்குள் நான் நுழையவே கூடாது என்பதுதான். எனக்கு தெரிந்த சமையல் வென்னீர் வைப்பதும் தயிர் தோய்ப்பதும் தான் என்று நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் போது ரகசியமாக தலையில் அடித்துக்கொள்வாள். காபி வைக்க கொஞ்ச நேரம் சமையல் அறைக்குள் புகுந்தால், அதை சரி செய்ய அவளுக்கு அரை நாள் ஆகும். என் கைவண்ணத்தில் அவ்வளவு களேபரம் உறுதி . " ஒழுங்கு மரியாதையா, ஆபீஸ் விட்டவுடன், வீட்டுக்கு வந்த...

கடிதங்கள்.

முதலிலே டீசே தமிழன் எழுத, பிறகு செல்வராஜும் தொடர்ந்து எழுத, எனக்கும் கை சும்மாயிருக்கவில்லை. பிறரிடம் பகிர்ந்து கொள்ளுகிற மாதிரியான கடிதங்கள் எனக்கு வந்திருக்கிறதா அல்லது நான் யாருக்காவது எழுதியிருக்கிறேனா என்று எத்தனை யோசித்துப் பார்த்தாலும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால், பதிவு போட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், யாருடைய தொந்தரவும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இருக்காது என்ற உத்தரவாதமான சூழ்நிலையில், இந்த மாதிரி ஒரு 'bloggable idea' வை தூக்கி தூரப் போடவும் மனசில்லை. பேனா பிடித்து தமிழில் எழுதியது கல்லூரி நாட்களோடு போயிற்று. பரீட்சைக்குக் பணம் கட்ட, மெஸ் பில்லுக்கு, புத்தகங்கள் வாங்க என்று பணம் கேட்டு எழுதிய நாட்களில் சங்கப் பாடல்களில் இருந்தோ, ஆத்மாநாமின் கவிதைகளில் இருந்தோ மேற்கோள்கள் தேவைப்படவில்லை. பணத்துக்கும், கவித்துவத்துக்கும் தூரம் அதிகம். கவரிலே வரைவோலையை வைத்து, கூடவே, ' ஒழுங்காப் படி' என்று அப்பா எழுதியதிலும் கவலையுடன் கூடிய மிரட்டல் தான் இருக்கும். விடுமுறயின் போது சந்திக்கும் நண்பர்களும் கடிதம் எழுதுகிற ஜாதி இல்லை. ஆக, என் கடிதங்கள், உலகாயத நோக்கம் கெ¡...

North Madras பசங்க

இந்தப் பெயரிலே ஒரு திரைப்படம் வருகிறது என்று இன்று தினத்தந்தியில் விளம்பரம் பார்த்தேன். GV Films தயாரிக்க, Harris ஜெயராஜ் இசை அமைக்கிறார். விளம்பரத்தைப் பார்த்த உடனே புரிந்து விட்டது. முன்பெல்லாம், ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், அதன் பாதிப்பில், பல திரைப்படங்கள் வெளிவரும். பல வருடங்களுக்கு முன்பு வந்த எண்ணற்ற ராமராஜன் படங்களும், விஜயகாந்த் படங்களும் இதில் அடக்கம். இப்போதெல்லாம், ஒரு திரைப்படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே, அதன் கதையை, களத்தை ஒட்டி திரைப்படங்கள் வரத் துவங்கிவிட்டன. சந்தேகமில்லாமல், வடசென்னை, திரைப்படத்துக்கு ஏற்ற வசீகரமான பின்புலம். இந்த வாழ்க்கையை ஒட்டி புதினங்களோ, திரைப்படங்களோ அதிகமாக இல்லை. இந்த வாழ்க்கை குறித்து, நாராயண் அருமையான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். [ இந்தப் பதிவை படித்துவிட்டு, ஒரு பிரபல தமிழ் நாளிதழ் ( தினமலர் அல்ல) தங்களுடைய பதிப்பில், இதனை மறுபிரசுரம் செய்யக் கேட்டது என்றும், 'உருப்படாதவர்' மறுத்துவிட்டார் என்று ஒரு வதந்தி உலவுகிறது தெரியுமா? :-) ]. தென்சென்னையில், குறிப்பாக, மயிலைப் பகுதியில் இளவயது முழுவதையும் கழித்த எனக்கு வடசென்னை வ...

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Image
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சொன்ன பேச்சை கேட்டாத்தான் நல்ல பாப்பா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா கண்ணா மூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா அப்போ கலகலன்னு சிரிச்சிகிட்டு என்னைப் பாரம்மா சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா கோவம் தீந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது உனக்கு கொய்யாப் பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா பாட்டை இணையத்தில் இருந்தால், யாராவது இணைப்பு கொடுக்கவும். [படம் உதவி : வி.ஏ.நரேந்திரன்]

போர்னோகிரா·பி

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ரெய்ட் நடந்த போது, போர்னோகிரா·பி படங்களை, கணிணியில் பார்த்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அவர்கள் நால்வரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இது இன்று ஹிந்துவில் வந்திருக்கும் செய்தி . போர்னோகிரா·பி பார்ப்பது, படிப்பது போன்றவை, அண்ணா பல்கலைக்கழக விடுதியின் விதிமுறைகளுக்கு உட்படாததாக இருக்கலாம். ஆனால், அந்தத் தவறுக்கு சஸ்பெண்ட் செய்வது, அந்த மாணவர்களின் வாழ்க்கையில் எத்தனை மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சரியாக உணரவில்லை. தமிழகத்தைப் பொறுத்த மட்டில், அண்ணா பல்கலைக்கழகம், ஒரு முதன்மையாக கல்வி கேந்திரம். தொழில்நுட்பக் கல்வியை எடுத்துப் படிக்க நினைக்கிற பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது கிண்டி செல்கிற பாதையைத்தான். அப்படிப்பட்ட ஒரு கல்விக்கூடத்திலே சேர, சிரமப்பட்டுப் படித்து,இரவு பகல் பாராது உழைத்து, நுழைவுத்தேர்விலே தேர்ச்சி பெற்று, வருங்காலத்தில் ஒரு பொறியாளராகலாம் என்று எண்ணத்துடன் இருக்கும் இருபதின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர்களை, ஆபாசப்படம் பார்த்த காரணத்துக்காக, தற்காலி...

குழந்தை, ஆண், பெண் & பெருசு

ஆண் என் நண்பன். பெண், அவனது மனைவி. பெருசு, அவனது நைனா. குட்டிப் பிசாசு அவனது குழந்தை. அவன், கிராமத்தில் இருந்து, சென்னைக்கு வருஷத்துக்கு ஒரு முறை வருவான். இந்தோனேசியாவில் இருக்கும் ஏதோ, வாயில் பெயர் நுழையாத ஒரு கிராமம். நைனாவுக்கு, ஈமெயில் அனுப்ப, சாட் செய்ய சொல்லித்தருவது, நான் அவ்வவ்போது போய் வருவது வழக்கம். இந்த முறை வந்த போது, வீட்டுக்குப் போனேன். குழந்தை கால் மேல் கால் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தது. நைனா தரையில் அமர்ந்திருந்தார். நின்று கொண்டிருந்த அவனது மனைவிக்கும், குழந்தைக்கும் சின்ன வாக்குவாதம். "அது என்னடி மரியாதை இல்லாம கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிறே...காலை நீட்டிகிட்டு உக்காரு.." "ஏன், இப்படி உக்காந்தா என்ன தப்பு?... " என்று எசப்பாட்டு பாடிய அந்தக் குழந்தைக்கு வயசு ஐந்து. "வாய் மேலேயே போடுவேன்.எதுத்து எதுத்து பேசிகிட்டு...தாத்தா கீழ உக்காந்திருக்கறப்ப, இப்படி காலை ஆட்டிகிட்டு உக்காறது தப்பு.. இறங்கு கீழே.." குழந்தை இறங்கவில்லை... தாத்தாவைப் பார்த்தது... "ஏன் தாத்தா. நான் இப்படி கால் மேலே கால் போட்டு ஆட்டிகிட்டே டீவ...

செ.பு.க.காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

indibloggies தேர்தலில் வெற்றி பெற்ற முகமூடிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணத்துக்கு ஓட்டு போட்ட 127 பேருக்கு நன்றிகள். சென்னை புத்தகக் கண்காட்சி சென்ற முறை போல அத்தனை ருசிக்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. இருமுறை சென்று சுற்றியதில், புதிய வரவுகள் அதிகம் இல்லை என்பது போலத் தோன்றியது. வாங்கிய புத்தகங்கள். ஹாலிவுட் அழைக்கிறது - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - கிழக்கு கோலிவுட் பற்றிய கனவு காண்பவர்களை வெறுப்பேற்றும் அழகான முயற்சி. ஹாலிவுட் பற்றிய, நிறைய உருப்படியான, கேள்விப்பட்ட, கேள்விப்படாத தகவல்கள். நடையில் வழக்கமான துள்ளல் இல்லை ( ஓரிரு இடங்கள் தவிர்த்து). காதோரம் மடித்து விட்டு பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்கா வண்ணம், ஒரே மூச்சில் படிக்கலாம். value for money கண்ணீரும் புன்னகையும் - முகில் - கிழக்கு ஜே.பி.சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய நல்லதொரு ஆவணம். முகிலின் உழைப்பு பல இடங்களில் தெரிகிறது. தேர்ந்த எழுத்தாளர் போன்ற நடை. சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய இடங்கள் தனியாகத் தொங்குகிறது. சந்திரபாபு - சாவித்திரி affair குறித்து குறைந்த பட்சம் ஒரு அத்தியாயமாவது எழுதியிருக்க வேண்டும...