சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணா மூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
அப்போ கலகலன்னு சிரிச்சிகிட்டு என்னைப் பாரம்மா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

கோவம் தீந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யாப் பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா


பாட்டை இணையத்தில் இருந்தால், யாராவது இணைப்பு கொடுக்கவும்.

[படம் உதவி : வி.ஏ.நரேந்திரன்]

Comments

Popular posts from this blog

THANGLISH blogs..

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்