Posts

Showing posts from January, 2005

நேர்முகமும் எதிர்முகமும்

திண்ணையில் வெளியான கட்டுரை .படிப்பதற்கு போரடிக்கும் என்று தோன்றினால் , இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு, தமிழ்மணத்தை f5 செய்யலாம். என் உலகத்தை மேலும் இனிமையானதாக மாற்றும் சில பாடல்களில் இதுவும் ஒன்று. நேர்முகம் புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் சென்னை வெய்யிலைப் போன்றது . போன வருடத்தை விட இந்த வருடம் ஜாஸ்தி என்று எல்லா வருடமும் சொல்கிறார்கள். நுழைந்ததும் வரவேற்கும் டெல்லி அப்பளம் பேல்பூரி சமோசா இத்தியாதிகளிடம் இருந்து தப்பித்து உள்ளே நுழைந்தால், உடனே வெளியே ஓடிப்போய்விடலாமா என்றுதான் முதலில் தோன்கிறது. அத்தனை நெரிசல். வேறு எங்காவது, நல்ல இடவசதி உள்ள இடமாக மாற்றக்கூடாதா என்று பதிப்பக நண்பர்களிடம் புலம்பினால், அந்த அதிகாரம், பதிப்பாளர் சங்கமான பிபாஷாபாசுவிடம் ( அல்லது அதைப் போலவே ஒலிக்கும் ஒன்றிடம்) இருக்கிறதாம். சங்கத்தின் தலைவர் பெயர் முத்துக்குமாரசாமி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் துணை இதழ் சொன்னது. அவரது மின்னஞ்சல் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். அடுத்த வருடமாவது, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டருக்கு மாற்றக்கோரி, கையெழுத்து வேட்டை நடத்தி, அவருக்கு அனு

Chennai Book Fair -II -List of Books

புத்தகக் கண்காட்சி 2005 - II இங்கே புத்தகங்களின் பெயர், ஆசிரியர் பெயர், விலை ஆகியவற்றை மட்டும் பட்டியலாக அளித்திருக்கிறேன். இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல. முக்கியமானவை என்று நான் கருதுவதை மட்டும் இங்கே எழுதியிருக்கிறேன். உயிர்மை அரங்கு தேர்ந்தெடுத்த சிறுகதைகள் I - சுஜாதா - 275/- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் II - சுஜாதா - 300/- ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா - 200/- கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா - 120/- தமிழ் அன்றும் இன்றும் - சுஜாதா - 90/- ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத் தொகுதி) ஜெயமோகன் - 280/- ஜெயமோகன் குறுநாவல்கள் (முழுத் தொகுதி) ஜெயமோகன் - 280/- மணலின் கதை , கவிதைகள் - மனுஷ்யபுத்திரன் - 30/- பாப்லோ நெருதா கவிதைகள் - தமிழில் சுகுமாரன் - 120/- எம் தமிழர் செய்த படம், சினிமா கட்டுரைகள் - தியோடர் பாஸ்கரன் - 100/- தளும்பல், ஆய்வுக்கட்டுரைகள் - அ.கி.ஜெயகரன் - 60/- அம்மாவி மரணம், கவிதைகள் -தஸ்லீமா நஸ்ரீன் ( தமிழில் யமுனா ராஜேந்திரன்) - 60/-அகி, கவிதைகள் - முகுந்த் நாகராஜன் - 75/- நாகதிசை, கவிதைகள் - ராணிதிலக் - 40/- தவளை வீடு, கவிதைகள் - பழனிவேள் - 40/- நதிமூலம், கட

Book Fair 2005 - first round

சென்னை புத்தகக் கண்காட்சி - 2005 ஞாயிறு அன்று, கண்காட்சியில் கூடின கூட்டம் கேள்விப்பட்டு, மக்கள் குறைச்சலாக வரும் திங்கள் பின் மதியப் பொழுதினைத் தேர்ந்தெடுத்தேன். ஏமாந்தேன். எதிர்ப் புறம் இருக்கிற எத்திராஜ் கல்லூரி, வாசலில் விற்கும் அப்பளம், மக்காச் சோளக் கொண்டை, இலவசமாகக் கிடைக்கும் அரட்டை எதிலும் கவனம் செலுத்தாமல், போகவேண்டியது புத்தகம் வாங்க வேண்டியது , திரும்பி வந்து விடவேண்டியது என்ற தீர்மானமான முடிவுடன் சென்று இருந்தேன். நல்ல வேட்டை. கண்காட்சிக்கு வெளியே இருக்கும் நடைபாதை கண்காட்சியிலும் நல்ல நல்ல புத்தகங்கள் சிக்கின. வழக்கமான நடைபாதைக் கடைகளுக்கும் இவற்றும் நிறைய வித்தியாசங்கள். புத்தகங்கள் எண்ணிக்கையிலும், விலையிலும். நகரில் இருக்கும் நடைபாதைக் கடைகளில் , ஆளைப் பார்த்து விலை சொல்லுவார்கள். சில புத்தகங்களைப் பார்த்ததும் கண்களில் ஒரு பல்பு எரியும். அதைப் பார்த்து விட்டால் விலை கூடும். பேரம் பேசுவதும் கடினம். இங்கே வசதியாக, புத்தகங்களை, ஐம்பது, நூறு, இருபது, முப்பது , பத்து என்று பல ரகங்களில் கூறு போட்டு வைத்திருக்கிறார்கள். flat rate. நாலைந்தை பொறுக்கினேன். புத்தகங்கள