கில்லி க்காக, பல தமிழ் ஆங்கில வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது, சில விஷயங்கள் புலப்பட்டன. அதாவது தமிழ் பேசத் தெரிந்த ( அனேகமாக எழுதவும் தெரிந்த ) பலர், தமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வினோதமான விஷயம் அதில் ஒன்று. அது. கட் பண்ணி, ஓப்பன் பண்ணி, ஆன் பண்ணி, ஆ·ப் பண்ணி என்கிற பண்ணித் தமிழ் ஒரு கொடுமை என்றால், 'ennoda poonaikutti seththu pOchu' என்கிற தங்க்லீஷ் மற்றொரு கொடுமை. ஒரு ஆத்திர அவசரத்துக்கு, முரசு அஞ்சலை எடுத்து எழுத சோம்பல் பட்டு, ஓரிரு வரிகள் தங்கிலீஷில் எழுதுகிறவன் தான் நான் என்றாலும், சில சமயம் பக்கம் , பக்கமாக தமிழை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும் போது, பேசாமல், விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தேச சேவை செய்தால் என்ன என்கிற அளவுக்கு வெறுப்பாக ஆகிவிடுகிறது...
முறையான தமிழ் தட்டச்சுப் பயிற்சி இருந்தால் தான், கணிணியில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ? முரசு அஞ்சல் அல்லது ஈ-கலப்பை நிரலியை கணிணியில் நிறுவிய பின், notepad ஐ திறந்து, தமிழை தேர்வு செய்து, 'kamal' என்று ஆங்கிலத்தில் அடித்தால் 'கமல்' என்று தமிழில் வரும் அல்லது 'thamiz' என்று ஆங்கிலத்தில் தட்டச்சினால், 'தமிழ்' என்று திரையில் தோன்றும் என்கிற அளவுக்கு மிக எளிமையானது என்ற பிரச்சாரம் பரவலாக நிறைய பேரை சென்றடையவில்லையோ?
என்னமோ போங்க..
ஒரு முறை,
நாக.இளங்கோவன், பொன்னியின் செல்வன் என்ற இணையக்குழுவிலே [கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை விவாதிக்கும் ஒரு இணையக்குழு] இப்படி தங்க்லீஷில் எழுதுவதை நையாண்டி செய்து, ஆங்கிலக் கடிதம் ஒன்றை தமிழில் எழுதினார். பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் மடல் அது. அதை இங்கே [ தமிழ் உலகம் இணையக்குழுவுக்கு நன்றி] மறுபிரசுரம் செய்கிறேன். தனியாக இருக்கும் போது வாசிக்கவும். இல்லையென்றால், அருகில் உள்ளவர்கள், கீழ்பாக்கத்தில் சேர்த்துவிடுவார்கள். அலுவலகத்தில் வாசித்தால், வேலை போய்விடும்.
--------------------------------------
"மை டியர் ·பிரண்ட்சு,
ஓப் யூ ஆர் ஆல் ·பைன்.
அயாம் ரைட்டிங் இன் தமிழ் பிகாசு ஐ டோண்ட் நோ இங்கிலீசு.அண்டு ஆல்சோ பிகாசு ஐ ஆம் நாட் செட் அப் வித் இங்கிலீசு ·பாண்ட்.அயாம் நாட் செட் அப் பிராப்பர்லி வித் தி இங்கிலீசு ·பாண்ட்,பேசிக்கலி பிகாசு ஆம் நாட் ஏபில் டு சூசெ ஒன் அவுட் ஆப் தி அவெய்லபிள் 1000 ;-).
சோ, பிளீசு எக்சுகியூசுமீ ·பார் மை பிளண்டர் அண்டு இக்னோரன்சு.
அய் பேசிக்கலி வாண்டட் டு அப்ரிசியேட் ஆல் ஆப் யூ ·பார்யுவர் எக்செலண்ட் காண்ட்ரிபூசன் டு தி குரோத் ஆப் தமிழ் இன் இண்டர்நெட்அண்டு டு தி சொசைட்டி.
அயாம் சுயூர் யு வில் டேக் தி கிரேட் பொன்னியின் செல்வன் அண்டு இட்சு இசுடரி டு தி கிரேட்டர் அய்ட்சு.
கன்கிராட்சு கய்சு! கீப் இட் அப்.
நெள லெட் மீ கம் டு தி பாயிண்ட்.
( யூ ஏவ் எவெரி ரைட் டு பி லவுசி டு மீ; அண்டு அன்சப்சுகிரைப் மீ;சோ கோ அகெட் இப் தி பிலோ ஆர் அகெய்ன்சுடு டு யுவர் நெட்டிக்குவெட்.பட் ஐ ஒன்லி வில் பீ சுமைலிங் ஆர் அட் டைம்சு லா·பிங் :-) )
1) வாட் ஆர் யூ டிரையிங் டு அச்சீவ் பை ரைட்டிங் இன் 100% இங்கிலீசு? தட் டூ ஆன்/அபெளட் எ ·பேமசு இசுடரி!
2) டோண்ட் யூ திங்க் தட் இட்சன் இன்சல்ட் டு கல்கி அண்டு தி கிரேட் நாவல்?
3) டோண்ட் யூ நோ முரசு அஞ்சல் (தேங்க்சு டு முத்து நெடுமாறன்) ?
4) டோண்ட் யூ நோ இ-கலப்பை (தேங்க்சு டு சிறீவாசு அண்டு முகுந்தராசு)?
(இ·ப் நாட் லெட் மீ எல்ப் யூ)
5) ஊ ஆர் யுவர் ஆடியன்சு? இங்கிலீசு? ·பிரெஞ்சு?
6) டோண்ட் டெல் மீ தட் யுவர் ஆ·பிசு கம்ப்யூட்டர் டசண்ட் அலவ் டமில் ·பாண்ட்வேர்.
லெட்டசு பீ ஆனசுடு; பிகாசு இட்டீசு ஆ·ப்டர் ஆல் எ பிரீவேர். ஈவென் இ·ப் சோ,
இட்டீசு பாசிபிள் டு கெட் யுவர் மேனேசர்சு பெர்மிசன்.
7) டோண்ட் டெல் மீ தட் யூ ஆர் ஆல்வேய்சு பிசி அண்டு இன் இரசு.பிகாசு, நாட் ஆல் ஆர்! அண்டு நாட் ஆல்வேய்சு. இட்டீசு தி ரியாலிட்டி.ஈவன் சோ, யூ கேன் சூசு ஆர் அட்டெம்ப்ட் டு ரைட் ஆ·ப் தமிழ் மெயில் இன்சுடெட் ஆ·ப் ரைட்டிங் ஒன் இங்கிலீசு மெயில்.
8) டோண்ட் டெல் மீ தட் யூ ஆர் ரைட்டிங் ·பார் எவெரி தமிழ் இன் மோரீசியசு ஊ டசண்ட் நோ ரீடிங் தமிழ்.
9) டோண்ட் யூ திங்க் வீ ஆர் ·பூலிங் அவர்செல்வுசு;அண்டு டி·பீட் தி வெரி பர்ப்பசு?
வெல். திங்க் கய்சு! இ·ப் யூ கம் அவுட் வித் எனி அன்செட் அண்டு இன்னொவேட்டிவ்
ரீசன்சு, பீப்பிள் வில் ஒன்லி லேர்ன் தெம்; பட் மே நாட் அப்பிரிசியேட் இட்.லெமீ டெல் யூ தட் வாட் யூ ஆர் டூயிங் ஈசு நாட் கோயிங் டு இசுபீக் ·பார் யு; பிகாசு வாட் யூ ஆர் டூயிங் ஈசு இன்கரெக்ட்.
சவுண்ட்சு ஆர்டு? அய் காண்ட் எல்ப் இட்.
** பட் ஓப் யு வில் அண்டர்சுடேண்டு அட்லீசுடு அவ் ஆரிபிள் டு ரீட் தி இங்கிலீசு இன் தமிழ்;
தி சேம் வித் ரீடிங் தி தமிழ் (தெட் டூ தி கோல்டன் இசுடரி மேட்டர்சு) இன் இங்கிலீசு டூ. **
வெல்; ட்ரை திங்க்! யூ வில் கெட் தெ வே அவுட்;தட்சு தி சுமால் பீசா·ப் அட்வைசு இன் மை இசுடோர்.
தேங்க்சு ·பார் தி ஆப்பர்ச்சூனிட்டி.
வித் பெசுடு ரிகார்ட்சு ஆல்வேய்சு
நாக.இளங்கோவன், தி இங்கிலீசுலெசு இன்சேன்.
பி.எசு:
எ) அயாம் சிசியிங் திசு டூ அதர் குரூப்சு ஆல்சோடு பிகம் லிட்டில் மோர் இன்சேன்.
பி) பிளீசு எல்ப் மீ ·பார்வடிங் திசு மெயில் டூ ஆல் குரூப்சு வேர் அய் டோண்ட் ஏவ் ஆக்சசு"
----------------------------------------------------
நன்றி :
தமிழ் உலகம் இணையக்குழு,
நாக.இளங்கோவன்.