Posts

Showing posts from October, 2006

Su.Ra, Vittal Rao, Vintage Film Club & KolangaL

சுந்தர.ராமசாமி சென்ற ஆண்டு அக்தோபரில் மறைந்தார். கைக்குக் கிடைத்ததை படித்துக் கொண்டு, படிக்கக் கிடைத்ததையே உன்னதமான இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய எழுத்துக்கள் தான் நவீன இலக்கியத்துக்கு ஒரு வாசலாக இருந்தது. கார்ட்டலுக்கு வெளியே இருந்தவர்களை கொஞ்சம் பரிவுடன் பார்த்தவர் என்ற வகையில், அவரைக் கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்பு, பேச்சினிடையே, ஒரு முறை ஜே.ஜேவை சிலாகித்த போது ( கொஞ்சம் ஓவராக) , நண்பர் ஒருவர், " grow up man " என்று சிரித்துக் கொண்டே சொன்னார். வளர்ச்சி என்றால் என்ன என்று தெரியாததால், அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவில்லை. அவர் மறைந்து ஓர் ஆண்டு ஆனதை ஒட்டி, தமிழ்ப்பதிவுகளில் யாராவது ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று கூகிள் வழியாகத் தேடிய பொழுது, வெறுமைதான் பதிலாகக் கிடைத்தது. ஆங்கில, வலைப்பதிவு நண்பர், நந்து சுந்தரம், சு.ரா. நினைவாக, இம்மாதம் முழுதும், சு.ரா பற்றிய வலைப்பதிவுகளைத் தொகுக்கப் போவதாகத் தன் இடுகை ஒன்றில் சொல்லியிருந்தார் . எத்தனை தேறும் என்ன்று தெரியவில்லை. உபரித் தகவல் : நந்து சுந்தரம், சு.ராவின் பேரன் . *******