Posts

Mani Ratnam's Guru - Review

Image
[ ஸ்பாய்லர் உண்டு ] நிஜ வாழ்க்கை நாயகர்கள் மீது மணிரத்னத்துக்கு இருக்கும் பிரேமை அலாதியானது. வேலுநாயக்கர், ஆனந்தன், தமிழ்ச்செல்வன் என்று நிழல் உலகத்தில், வரதராஜ முதலியார்,எம்ஜி.ஆர்.கருணாநிதி போன்ற்வர்களுக்கு அச்சு அசலான பிரதியை உருவாக்குவதில் மணிரத்னம் சில சமயங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். குரு படத்தில், அவர் முயன்றிருப்பது, இந்திய வர்த்தக உலகத்தில் கொடிகட்டிப் பறந்து மறைந்த தீரஜ்லால் ஹீராலால் அம்பானியின் செலூலாய்ட் பிரதியை. கட்டுபடுத்தப்பட்ட பொருளாதாரத்தில் வர்த்தகத்தைத் துவக்கி, வெற்றிகரமாக நடத்தி, பின்னர் தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திலும், வெற்றி வாகை சூடியவர் அம்பானி. அவர், 'நல்லவை' என்று அகராதி குறிப்பிடும் அர்த்தத்துக்கு ஈடான கொள்கைகளை வைத்திருந்தவர் இல்லை என்றாலும், அதே அகராதி, 'சாமர்த்தியம்' என்று குறிப்பிடும் அர்த்ததுக்கு ஈடாக குணங்களைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட, நல்லவரா கெட்டவரா என்று எளிதிலே கணிக்க முடியாத அம்பானியை, கதையை வைத்து கதை பின்னுவது, அப்படி ஒன்றும் கம்பசூத்திரமல்ல, மணிரத்னத்துக்கு, நிஜத்திலே, ஏடன் செல்லும் அம்பானியை, திரையில் துருக்கிக

Five Point Someone by Madras Players

மெட்ராஸ் ப்ளேயர்ஸ் குழு , Five Point Someone என்ற சேதன் பகத் எழுதிய நாவலை, நாடகமாக அரங்கேற்றவிருக்கிறார்கள். Five Point Someone is the story of three underperformers at IIT. How does one cope with being a five-pointer, after having topped all through school and slogged one's way into one of the best colleges in the country? What happens to friendship and love in an environment of relative grading? Can fun and creativity co-exist with tests and assignments? Funny and dark, Five Point Someone is about "what not to do at IIT". At one level, it is the tale of every student in India. ஜனவரி, ஐந்து, ஆறு, ஏழு தேதிகளில் எழும்பூர் ம்யூசியம் தியேட்டரில் நடைபெறும். மேல் விவரங்கள் இங்கே .... நான் போகப் போகிறேன்....

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்

முன் ஜாமீன் : சுஜாதா மன்னிக்க முன்குறிப்பு : ***** ***** எழுதிய ****** ** ***** என்கிற ஆங்கிலச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு செய்த புனைவு. இது ஒரு தொடர். முடிவிலே என்ன கதை என்று சொல்கிறேன். முன்னாலேயே சொன்னால், ஒரிஜினலைப் படித்து விட்டு என் சரக்கை டீலிலே விட்டு விடும் அபாயம் இருக்கிறது. முன் எச்சரிக்கை : எங்கேயிருந்தாவது 'பிரஷர்' வந்தால், தொடர் பாதியில் நிறுத்தப்படும். ********************* ஸ்ரீவத்சன் அறிமுகமாகும் படலம் ஒரு டிசம்பர் மாத மழை நாள். கணவன்மார்களை அலுவலகத்துக்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு, குடும்பஸ்த்ரீகள், சற்று நேரம் மூக்கைச் சிந்தலாம் என்று தொலைக்காட்சிக்கு முன் அமரும் அசந்தர்ப்பமான முற்பகல் பொழுது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், ஹைகோர்ட் வளாகம் ஈயடித்துக் கொண்டிருந்தது. தம்புச் செட்டித் தெரு அலுவலகம். கணேஷ் வார் அண்ட் பீஸ் நாவலை, எட்டாவது தரமாக, முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்கி இருந்தான். உள்ளறையில், அப்போதுதான் உறை பிரிக்கப்பட்டது போல இருந்த லாப்டாப்பை, வசந்த் நோண்டிக் கொண்டிருந்தான். " ஏமாத்திட்டான் பாஸ்.. எலிக்குட்டியே தர

Happy Birthday தலைவரே

Image
என் வயசிலே இருக்கிற அனேகம் பேருக்கு இந்தச் சிக்கல் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அதாவது படிக்கற வயசிலே, ' நீ யார் ஆளு? கமல்-ஆ? ரஜினி யா?' ங்கற கேள்விக்கு வர குழப்பம் தான் அது. ஒழுக்கமாப் படிச்சு, 98 சதவீதம் மார்க் எடுத்து, ரஷ்யன் சர்க்கஸ் இல்லாட்டி காந்தி படம் மட்டுமே பார்த்து, காலையிலே வயலின் க்ளாஸுக்கும், சாயங்கால மத்யமா வகுப்புக்கும் போய்ட்டு வந்து, அது மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கிற அந்த ஒரு சதவீத 'பழத்தை' விட்றுங்க, மீதம் இருக்கிற ஆவரேஜ் பசங்க நெறையப் பேர் வாழ்க்கையிலே இந்தக் கேள்வி விளையாடி இருக்கு..என் வாழ்க்கையிலும் தான். அது ஆச்சு கனகாலம். எங்க எங்கயோ சுத்தினாலும் கடேசியிலே, ஒரு வலைப்பதிவு துவங்கி, கரக்டா திசம்பர் 12 ஆம் தேதி தலைவருக்கு வாழ்த்துச் சொல்றதுலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு... என்னோட தலையெழுத்து என்னன்னா, நான், ரஜினிகாந்த் ஒரு சாதாரண நடிகர்தான்னும், அவருக்கு இருக்கிற பேருக்கும் புகழுக்கும் அவர் தகுதியானவர் இல்லேன்னும், நம்பும்படியா எழுத/சொல்லக்கூடிய ஆட்களுக்கு மத்தியிலே இருக்கற மாதிரி ஆயிடுச்சு. ரஜினிகாந்த் ஒரு அசாதாரணமான பர்சனாலிட்டிங்கறதை அழுத்த

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

தாடியும் மீசையும் கிளம்பும்போது ஒரு பெங்காலி கடையில் திருட்டு ரெயில் படுக்க உதவும் என்று திருடிக் கொண்டு வந்த தடிமனான ஆங்கில புத்தகங்களையும் பார்த்த சக திருட்டு பயணிகள் கோவாலுவினை ஏதோ அறிவுஜீவியாக நினைத்தார்கள். அதற்கும் வந்தது ஆப்பு. சென்ட்ரலில் இறங்கி டிக்கெட் இல்லாமல் மாட்டியதால், எதிரே இருக்கின்ற ஜெயிலில் கொண்டு போய் காவலில் வைத்து விட்டார்கள். ஏதோ பேரணி, ஊர்வலம் நடத்தி வெள்ளிக்கிழமை உள்ளே தள்ளி திங்கள் கிழமை ஜாமீனில் வெளிவரக் கூடிய ஒரு அரசியல் தலைவர் கோவாலு இருந்த அதே செல்லில் இருந்தார். பெரியார் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் பேசியதை பார்த்த அவர் கோவாலுவிற்கு மூலதனம் நூலை கொடுக்க, பொழுது போகாமல் அப்படியே படித்து முடித்த கோவாலு, கொஞ்ச நாள் கழித்து துரத்தியடிக்கப்படும் போது, புதிதாக வகுப்பு வாத பிரதிநிதித்துவ நிர்மூலம், இனப்பண்பாட்டு முடக்கு இயல் வாதம் என ஜல்லியடிக்க ஆரம்பித்திருந்தான். வெளியே வந்தவுடன் இதை போல உளறியதை பார்த்த் தகரம் கண்டுபிடித்த கம்யுனிஸ்டுகள், கோவாலுவினை அறிவுஜீவியாக கண்டறிந்தார்கள். ஏற்கனவே வாயில் நுழையாத மந்திரங்களை உளறும் கோவாலு, கம்யுன

Sivappathigaram - Review

உஷார்! கதை தெரிந்து விடும். படம் பார்க்க நினைக்கிறவர்கள் படிக்க வேண்டாம். ரமணா, அன்னியன் வரிசையில் வன்முறை மூலமாக நாட்டைத் திருத்த முயலும் மற்றொரு திரைப்படம். ஒரு கல்லூரி நடத்தும் கருத்துக்கணிப்பில் பாதிக்கப்பட்ட இடைத் தேர்தல் வேட்பாளர் சண்முகராஜன், மாணவர்கள் மீது அவிழ்த்து விடும் வன்முறையில், பலர் இறந்து விடுகிறார்கள். பழிவாங்குவதற்காகவும், தேர்தல் என்கிற அமைப்பை சரி செய்வதற்காகவும், நாயகன் விஷால், தன் ஆசிரியர் ரகுவரனின் துணையுடன் , அடுத்து வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள், அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார். அதனால், தேர்தலில் யாரும் நிற்க முன்வராமல், ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது. தேர்தலும் தள்ளிவைக்கப் பட, ஒரு சிபிஐ ஆப்பீசர் ( உபேந்திர லிமாயே ), வந்து, சினிமா வழக்கப்படி, மூன்று காட்சிகளுக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுகிறார். மதுரை அழகர் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் உள்துறை அமைச்சர் ராஜன் பி தேவை போட்டுத் தள்ளும் உச்சகட்ட காட்சியில், ஹீரோ, கேமராவுக்கு முன் விஜயகாந்த் ஸ்டைலில் நீளமாக தேர்தல் பற்றிய கருத்துக்களை பேசுவதோடு படம் முடிகிறது. நடுவிலே ரகுவரனின் மகள் மம்தா மோகன்தாஸுடன

9 weird things about prakash

பிரேமலதாவுக்காக ...., பாலாஜியைத் தொடர்ந்து.... இந்தப் பதிவை எழுதுவது, பிரகாஷின் மனசாட்சி உணவு : தமிழர்களின் பாரம்பரிய உணவு இட்லி . இவன் வீட்டிலும் அப்படித்தான். ' தினமும் இட்லிதானா? " என்று சலித்துக் கொண்டே சாப்பிடுவான். இரண்டு நாள் தொடர்ந்து இட்லி இல்லை என்றால், " ஏன் இட்லி செய்யறதுக்கு என்ன? " என்று கோபித்துக் கொண்டு, ஓட்டலுக்குப் போய் இட்லி சாப்பிட்டு விட்டு, 'ச்சே.. வீட்ல செய்யற மாதிரியே இல்லை" என்று மீண்டும் சலித்துக் கொள்வான். முருகன் இட்லி கடைக்குப் போய், தோசை சாப்பிடுவதையும், அண்ணா நகர் 'சுக்சாகருக்கு' ( அக்மார்க் வட இந்திய உணவகம்) போய் அடை அவியல் ஆர்டர் கொடுப்பதையும், சரவண பவனில், மெனு கார்டில் எங்கேயோ தேடிப் பிடித்து ஸ்வீட் கார்ன் ஸூப் வித் அவுட் க்ரீம் ஆர்டர் செய்து விட்டு, டேபிளில் தாளம் போடுவதைப் பார்த்து விட்டு, நண்பர்கள், அவனை, ருத்ரனிடமோ அல்லது பீட்டர் ஃபெர்ணாண்டஸிடமோ( நகரத்தின் பிரபல மனநல மருத்துவர்கள் ) நைசாகத் தள்ளிக் கொண்டு போக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான். இசை : திரை இசை பிடிக்கும். ஆனால் க

Su.Ra, Vittal Rao, Vintage Film Club & KolangaL

சுந்தர.ராமசாமி சென்ற ஆண்டு அக்தோபரில் மறைந்தார். கைக்குக் கிடைத்ததை படித்துக் கொண்டு, படிக்கக் கிடைத்ததையே உன்னதமான இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய எழுத்துக்கள் தான் நவீன இலக்கியத்துக்கு ஒரு வாசலாக இருந்தது. கார்ட்டலுக்கு வெளியே இருந்தவர்களை கொஞ்சம் பரிவுடன் பார்த்தவர் என்ற வகையில், அவரைக் கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்பு, பேச்சினிடையே, ஒரு முறை ஜே.ஜேவை சிலாகித்த போது ( கொஞ்சம் ஓவராக) , நண்பர் ஒருவர், " grow up man " என்று சிரித்துக் கொண்டே சொன்னார். வளர்ச்சி என்றால் என்ன என்று தெரியாததால், அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவில்லை. அவர் மறைந்து ஓர் ஆண்டு ஆனதை ஒட்டி, தமிழ்ப்பதிவுகளில் யாராவது ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று கூகிள் வழியாகத் தேடிய பொழுது, வெறுமைதான் பதிலாகக் கிடைத்தது. ஆங்கில, வலைப்பதிவு நண்பர், நந்து சுந்தரம், சு.ரா. நினைவாக, இம்மாதம் முழுதும், சு.ரா பற்றிய வலைப்பதிவுகளைத் தொகுக்கப் போவதாகத் தன் இடுகை ஒன்றில் சொல்லியிருந்தார் . எத்தனை தேறும் என்ன்று தெரியவில்லை. உபரித் தகவல் : நந்து சுந்தரம், சு.ராவின் பேரன் . *******

சமீபத்தில்......

வாசித்த புத்தகங்கள் நேற்றைய வானின் நட்சத்திரங்கள் - அறந்தை நாராயணன் எண்பதுகளின் இறுதியில், தினமணி கதிரில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அறந்தை நாராயணன், அகடமிக்காக எழுதும் தியோடர் பாஸ்கரனுக்கும், வெறும் தகவல்களாக உதிர்க்கும் ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தனுக்கும் இடைப்பட்டவர், அறந்தை. 1930-50 வரை வந்த திரைப்படங்களின் நடிகர்/நடிகையர் பற்றிய குறிப்புகள். பழைய திரைப்படத் தகவல்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். என் பெயர் ராமசேஷன் - ஆதவன் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், ஒரு புதிய அர்த்தத்தைத் தரும் நாவல். ஒரு படம், அல்லது ஓவியம், அல்லது நாவல் அளவுக்கதிகமாகப் பிடித்திருந்தால், அதை வெளிப்படுத்த சில சமயம் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் போகும். இம்முறையாவது, கிடைக்கிறதா என்று பார்க்கத்தான் ராமசேஷனைத் துரத்தினேன். அதிருஷ்டம் இல்லை. India unbound - Gurcharan Das இந்தியப் பொருளாதாரம் குறித்து எனக்கு இருந்த பல மாயைகளை உடைத்த நூல். ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில், ஆரம்ப நிலையில் நுழைந்து அதன் தலைவராக ஓய்வு பெற்ற, தாஸ், தன் அனுபவங்களை, அந்த அந்த சமூக/அரசியல்/பொருளாதாரச் சூழ்நிலைகளின் பின்

பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க்கடை - BlogCamp

conference என்றால் என்ன என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த unconference என்பது கொஞ்சம் குன்ஸாகத்தான் இருந்தது. என்னதான் நடக்கும் போய்ப் பார்க்கலாமே என்றும், பிராந்திய மொழி வலைப்பதிவுகள் பற்றி ஏதாவது பேச்சு நடந்தால், உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பலாம் என்று நினைத்து இரண்டு நாள் நடந்த இந்த அ-கருத்தரங்கத்தில், இரண்டாம் நாள் கலந்து கொண்டேன். * Blogcamp.in என்றால் என்ன ? * யார் இதை நடத்தினார்கள்? * யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் ? * என்ன என்ன பேசினார்கள் ? * யார் யார் இதற்கு வர்த்தக ரீதியில் ஆதரவு தந்தார்கள் ? * நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி வலைப்பதிவாளர்களின் கருத்து என்ன? * கலந்து கொண்டவர்கள் எடுத்த புகைப்படங்கள் ? இந்தச் சுட்டிகளைச் சொடுக்கி, படித்து விட்டு கீழ்க்கண்ட பதிவைப் படிப்பது நலம். இல்லாவிட்டால், மணிரத்னம் படத்தை ரிவர்ஸில் பார்ப்பது போல ஒரே 'கேராக' இருக்கும். சிரமமாக இருக்கும் என்று தோன்றினால், பவித்ரா தாக்கல் செய்திருக்கும் அறிக்கையையாவது படித்து விடுவது உசிதம். கலந்துகொண்டதில் முதலில் ஒரு விஷயம் தெளிவானது. கோட், சூட், டை க்கு பதிலாக, ஜீன்ஸ் ட

writ petition against Tata Indicom Broadband

கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு, அரசாங்கம் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கச் சொல்ல, இணையச் சேவை வழங்கிகள், அப்படிச் செய்யத் 'தெரவுசு' பற்றாமல், மொத்த வலைப்பதிவுகளையும் போட்டுத்தள்ளியது. ( இந்தப் பதிவின் கடந்த மூன்று இடுகைகளைப் படித்தால் விளங்கும்) பிரச்சனை பெரிதானதும், அரசே, " சில இணையத்தளங்களை மட்டும் தான் நாங்கள் தடை செய்யச் சொன்னோம், மொத்தமாக அல்ல" என்று சொல்லி, தடையை நீக்கவேண்டும் என்று இணையச் சேவை வழங்கிகளுக்குச் சொன்னாலும், அவர்கள் இன்னமும் தடையை நீக்கவில்லை. தற்போது, சில நகரங்களில், சில இணைய வழங்கிச் சேவைகள் தடையை நீக்கி இருக்கிறார்கள். எந்த எந்தச் சேவைகள், எந்த எந்த நகரங்களில், தடையை நீக்கியிருக்கிறார்கள் என்பது பற்றி குழப்பமான நிலைமை நீடிக்கிறது. சென்னையிலும் கூட, ஏர்டெல் அகலப்பாட்டை, தடையை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. நான் உபயோகிக்கும், டாடா இண்டிகாம் இணையச் சேவை, இன்னும் ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கவில்லை. எப்போது நீக்கும் என்ப்று தெரியவில்லை. கேட்டாலும் முறையாக பதில் கிடைப்பதில்லை. ஆகவே, தடையை நீக்கக் கோரி, ரிட் மனு ஒன்றை, வழக்கறிஞர் மூலமாக தாக்கல்

சிம்ரனின் 'இடை' நவீனத்துவமும், சில கவிதைகளும்

முந்தைய பதிவுகளின் ( ஒன்று , இரண்டு & மூன்று ) தொடர்ச்சியாக.... இது வரை நடந்த சம்பவங்களின் தொகுப்பின் சுருக்கம் கீழே.... 1. கடந்த சனிக்கிழமை அன்று, இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இருந்து, தற்போது இயங்கிவரும் நூற்று ஐம்பது இணையச் சேவை வழங்கிகளுக்கு ஒரு உத்தரவு பறந்தது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பின் விளைவாக, இந்திய அரசு, 18 இணையத்தளங்களை தடை செய்யக் சொல்வதுதான் அந்த உத்தரவின் சாராம்சம். அந்த பட்டியலில், ப்லொக்ஸ்பாட்டில் இயங்கும் சில தளங்களும் இருந்தன. சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை மட்டும் தடை செய்ய வழி இல்லை என்பதால் ( அல்லது அவர்களுக்குத் தெரியாது என்பதால்) ஒட்டு மொத்தமாக ப்ளாக்ஸ்பாட்டில் இயங்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் பார்க்க தடை விதித்து விட்டார்கள். 2. இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த Computer Emergency Response Team - India ( CERT-IN),இன் உயரதிகாரி, இது தொடர்பாக எந்த விளக்கமும் தர மறுத்து விட்டதோடல்லாமல், " நீ யாரு இதை எல்லாம் கேட்க? " என்கிற ரீதியில் பதிலளித்தார்கள். 3. முதலில், சில இணையச் சேவை வழங்கிகள் மட்டும், வட இந்தியாவில் முதலில் இந்தத்

சென்னையிலும் கோயிந்தா...

இதோ, இதோ என்று பி.எஸ்.என்.எல் ல்லும் ஒட்டுமொத்தமாக, ப்ளாக்ஸ்பாட்டில் இருக்கும் வலைப்பதிவுகளைத் தடை செய்து விட்டது.. இந்தச் சிக்கல் தீரும் வரை, என்னுடைய வலைப்பதிவு, புதிய இடத்தில் தொடரும். http://icarus1972us.wordpress.com/

Blogspot.com ban, Next in Chennai?

முந்தைய பதிவு மும்பை, தில்லியைத் தொடர்ந்து, ஏர்டெல் இணையச் சேவை, பெங்களூரிலும், ஹைதராபாத்திலும், வலைப்பதிவுகளைத் தடை செய்திருக்கிறது. geocities.com தளமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சுட்டி 1 , சுட்டி 2 அடுத்தது அனேகமாகச் சென்னை? இன்னமும், அமைச்சகத்திலிருந்தோ, தொலைத் தொடர்புத் துறையிலிருந்தோ, எந்த அறிவிப்பும் வரவில்லை. தொடர்பு கொண்டு பேசுகிறவர்களுக்கும் சரியாக பதில் தர மறுக்கிறார்கள். தில்லியில் இருந்து ஷிவம்விஜ் , விடாப்பிடியாகத் தொடர்ந்து சென்று கேட்டிருக்கிறார். அரசுத்துறைக்கே உரித்தான, "எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்க" என்ற ஸ்டீரியோடைப் பதில்களை எல்லாம் கடந்து, இந்தப் விஷயத்தில் பதில் சொல்ல வேண்டியவரான உயர் அதிகாரி, டாக்டர்.குல்ஷன் ராய் ( CERT-IN இயக்குனர்) அவர்களிடம் கேட்ட போது கிடைத்த பதில், "Somebody must have blocked some sites. What is your problem?" சென்னையிலும் போட்டுத் தள்ளினால், எல்லாரும் முழித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். 1. Right to Information Act மூலமாக, எப்படி இந்த விஷயத்தில், தகவலைப் பெறுவது என்பதற்கு ஒரு உருப்படியான வழியைச் சொல்கிறார்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத் தடை செய்திருக்கின்றன . வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா விசாரித்த போது , அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது. இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள். தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன. பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இர