மவனே... ஒனக்கு இதெல்லாம் தேவையா? Get link Facebook X Pinterest Email Other Apps By Jayaprakash Sampath February 12, 2006 கோவை குறும்பட பயிற்சிப் பட்டறையில் எடுத்த பயிற்சிப் படம் இங்கே.. ( டைட்டில் கார்டை நல்லா உத்து பாருங்க )யூ ட்யூபிலே நூறு மெகா பைட்டுக்கு மேலே ஏத்த முடியாது. அதனாலே, ஏதோ ஜிகிடி வேலை செஞ்சு, கோப்பு அளவை குறைச்சு ஏத்தியிருக்கிறேன். ஒளி/ஒலிபரப்பு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்..படம் கையிலே கிடைச்சு மூணு நாலு மாசத்துக்கு மேலே இருந்தாலும், யார் கிட்டவும் போட்டுக் காட்ட தெகிரியம் வரலை... யாராச்சும் பார்த்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியலை.. ஆனால், என் மனசாட்சி என்ன சொல்லுச்சு தெரியுமா?இந்த இடுகையின் தலைப்பை இன்னுமொரு முறை படிங்க... Get link Facebook X Pinterest Email Other Apps Comments ilavanji said… பிரகாசு மாமோய்! இது உமக்கு கண்டிப்பாக தேவைதான்! :)பெருசை இன்னும் கொஞ்சம் பேசவிட்டிருக்கலாம்.இதுபோல நிறைய பட்டறை கண்டு உங்கள் திறமையை புடம்போட வாழ்த்துக்கள்! Thangamani said… பிரகாஷ், படம் நல்லா இருந்தது. ஆனா ஆடியோ பார்ட்ட பயன்படுத்தவே இல்லை எனத் தோணுகிறது. அவர் (ஆசாரி) பேசுகிற எதுவும் கேட்கவில்லையே! அந்தப்பகுதியையும் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எனினும் முதல்முயற்சியில் இது பாராட்டத்தக்கதே! Jayaprakash Sampath said… இளவஞ்சி : நன்றி.தங்கமணி : நாங்கள் அவரது குரலிலேயே பதிவு செய்தோம். ஆனால், ஆனால் ஒலிப்பதிவு, மிக மோசமாக வந்ததிருந்தது. சில நுட்பங்களில் வாயிலாக, ஒலிப்பதிவை துல்லியமாகச் செய்யலாம் என்று அறிந்தாலும், நேரமும், வசதிகளும் அங்கு இல்லை. வேறு வழியில்லாமல், எழுதி வைத்து படித்து, ஒலிப்பதிவு செய்து சேர்த்துவிட்டோம். தொகுத்தவரின் கணிணியிலேயே இருந்த ஒரு இசைக் கோர்ப்பையும் சேர்த்துவிட்டோம். பாராட்டுக்கு நன்றி.. Pavithra Srinivasan said… Hi ப்ரகாஷ்,படம் நன்றாக இருந்தது. ஏன் 'உனக்கு இது தேவையா' மாதிரி கேள்வியெல்லாம்? :) ஆடியோவைக் கேட்கும்போது ஒரு யோசனை தோன்றியது (யோசனைதான்.): ஆரம்பத்தில் கேட்கும் 'டக் டக்'கென்ற செதுக்கும் ஓசையை வைத்து Rap மாதிரி ஏதாவது செய்திருக்கலாம், இல்லை? அவர்கள் தேர் செதுக்கும் பகுதிகளை சின்னப் பகுதிகளாகச் சேர்த்து ஒட்ட வைத்திருக்கலாம் என்றும் தோன்றியது. Anyhow, it's your project. சுவாரசியமாக இருந்தது. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்? பார்க்க ஆவலாக இருக்கிறேன். Vasudevan Letchumanan said… அன்பு பிரகாஷ்,'குறும்படத் தயாரிப்பு' நல்ல முயற்சி!பயிற்சி பட்டறையில் பயின்ற விஷயங்களைப் பதியுங்கள். தங்களைப் போன்ற ஆர்வலர்களுக்கு பயன் படும்!வாழ்த்துக்களுடன்,எல்.ஏ.வாசுதேவன்,மலேசியா. SnackDragon said… பிரகாஷ், படம் நல்லாத்தான் இருக்கு, நுட்பக்குறைகளை தவிர்த்துப்பார்த்தால். பேசும் வார்த்தை உச்சரிப்பில் பிழைகள் உள்ளன.. அவசியம் தவிர்க்கப்படவேண்டியவை. "கலை"யை "களை" எனச் சொல்வது தவிர்க்கப்படவேண்டியது :-)அது தவிர்த்து, தத்துவார்த்தமாகப் பார்த்தால், 60 வருடங்களில் 40 க்கும் மேல் தேர்களைச் செய்தவர் இன்னும் மிகவும் எளிய வாழ்வுகளியே நிலைத்திருப்பது உழைப்பும் ஊதியத்துக்குமான நியதிகளையும் தமிழ்நாட்டின்/இந்தியாவின் போற்றுதல்களையும் ஞாபகப்படுத்தியது. SnackDragon said… டைட்டில் கார்டு மேட்டரு.... பெயர்கள் எல்லாம் பதிவர்கள் சிலரின் பெயர்களா?நீங்க ஜெயப்பிரகாஷா? ஆம் என்றால் உங்க ஊரு பல்லாவரமா: P (பல்லாவரம்? புகழ் ஜெயப்பிரகாஷை ஞாபகம் இருக்குதானே?) dvetrivel said… அசத்தலான பதிவு. "மவனே.. உங்களுக்கும் எங்களுக்கும் இது போன்ற பதிவுகள் தேவையே"
இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத் By Jayaprakash Sampath December 04, 2006 தாடியும் மீசையும் கிளம்பும்போது ஒரு பெங்காலி கடையில் திருட்டு ரெயில் படுக்க உதவும் என்று திருடிக் கொண்டு வந்த தடிமனான ஆங்கில புத்தகங்களையும் பார்த்த சக திருட்டு பயணிகள் கோவாலுவினை ஏதோ அறிவுஜீவியாக நினைத்தார்கள். அதற்கும் வந்தது ஆப்பு. சென்ட்ரலில் இறங்கி டிக்கெட் இல்லாமல் மாட்டியதால், எதிரே இருக்கின்ற ஜெயிலில் கொண்டு போய் காவலில் வைத்து விட்டார்கள். ஏதோ பேரணி, ஊர்வலம் நடத்தி வெள்ளிக்கிழமை உள்ளே தள்ளி திங்கள் கிழமை ஜாமீனில் வெளிவரக் கூடிய ஒரு அரசியல் தலைவர் கோவாலு இருந்த அதே செல்லில் இருந்தார். பெரியார் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் பேசியதை பார்த்த அவர் கோவாலுவிற்கு மூலதனம் நூலை கொடுக்க, பொழுது போகாமல் அப்படியே படித்து முடித்த கோவாலு, கொஞ்ச நாள் கழித்து துரத்தியடிக்கப்படும் போது, புதிதாக வகுப்பு வாத பிரதிநிதித்துவ நிர்மூலம், இனப்பண்பாட்டு முடக்கு இயல் வாதம் என ஜல்லியடிக்க ஆரம்பித்திருந்தான். வெளியே வந்தவுடன் இதை போல உளறியதை பார்த்த் தகரம் கண்டுபிடித்த கம்யுனிஸ்டுகள், கோவாலுவினை அறிவுஜீவியாக கண்டறிந்தார்கள். ஏற்கனவே வாயில் நுழையாத மந்திரங்களை உளறும் கோவாலு, கம்யுன... Read more
காணாமல் போன பதிவும், அதன் பின்னூட்டங்களும் By Jayaprakash Sampath June 26, 2005 சென்றவாரம் என் வலைக்குறிப்பில் எழுதிய " என் முதல் ஹைக்கூ கவிதை" என்ற பதிவும், அதன் பின்னூட்டங்களும் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. ஆகையால் கணிணியில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் ஒரே பதிவாக இங்கே இடுகிறேன். அசௌகர்யத்துக்கு நண்பர்கள் மன்னிக்கவும். அன்புடன் பிரகாஷ் Wednesday, June 22, 2005 என் முதல் ஹைக்கூ கவிதை... கசட தபற யரல வழள ஞஙண நமன இது எப்படி இருக்கு? posted by icarus @ 6/22/2005 03:40:00 PM 41 Comments: At 4:45 PM, Thangamani said... நல்ல பதிவு பிரகாஷ் :-) .நன்றி At 4:47 PM, ?????????(Mathy) said... Hi, prakash, could you please drop me a line at mathygrps@yahoo.com? urgent.... At 4:50 PM, -/???????. said... நல்ல பகிடி:-). தலைப்பும் நன்று. At 5:17 PM ??? (Pari) said... :-) :-) :-) At 6:07 PM, Mookku Sundar said... பிரகாசரே, நாயமா இது? இதையெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு டென்ஷன் படுத்தற உம்மை என்ன செஞ்சால் தகும்? At 6.18 PM, Arun Vaidyanathan said... excellent post. Kudos prakash At 7:45 PM, அல்வாசிட்டி சம்மி said... பிரகாஷ், கலக்கல் பத... Read more
ஷங்கர் என்கிற சமூக விஞ்ஞானி. By Jayaprakash Sampath July 19, 2005 that that man, that that work என்று சொல்லுவார்கள். அவரவர்களும் அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்தாலே, பெரும்பான்மையான சிக்கல்கள் தீரும். திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒருத்தர், சமூக விஞ்ஞானி வேஷத்தை போட்டுக் கொண்டால் என்ன ஆகும்? அன்னியன் மாதிரியான ஒரு திரைப்படம் தான் நமக்குக் கிடைக்கும். ஷங்கர் , அடிப்படையில், எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற, சட்டத்தைக் கரைத்துக் குடித்த மாதிரி பாவ்லா காட்டுகிற ஒரு mediocre இயக்குனரின் சிஷ்யபுள்ளை. அந்த காலத்தில் எஸ்.ஏ.சி , 'நான் சிகப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாட்சி' என்று வரீசையாக, சட்டத்தை கொத்துக் கறி புரோட்டா போட்ட படங்களைத்தான், அவருடைய சீடர் கொஞ்சம் sophisticated ஆக எடுக்கிறார் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை. ஒரு படைப்பாளி தன்னுடைய கதைக் கருவாக இன்னதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனால், படம் பார்க்கிற சமூகத்தை ஒரு நோயாளிக் கூட்டமாக உருவகம் செய்து கொண்டு, அதற்கான மருந்தைத் வலுக்கட்டாயமாகப் புகட்டினால், அதைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது, அதிலும் diagnosis ... Read more
Comments
பெருசை இன்னும் கொஞ்சம் பேசவிட்டிருக்கலாம்.
இதுபோல நிறைய பட்டறை கண்டு உங்கள் திறமையை புடம்போட வாழ்த்துக்கள்!
தங்கமணி : நாங்கள் அவரது குரலிலேயே பதிவு செய்தோம். ஆனால், ஆனால் ஒலிப்பதிவு, மிக மோசமாக வந்ததிருந்தது. சில நுட்பங்களில் வாயிலாக, ஒலிப்பதிவை துல்லியமாகச் செய்யலாம் என்று அறிந்தாலும், நேரமும், வசதிகளும் அங்கு இல்லை. வேறு வழியில்லாமல், எழுதி வைத்து படித்து, ஒலிப்பதிவு செய்து சேர்த்துவிட்டோம். தொகுத்தவரின் கணிணியிலேயே இருந்த ஒரு இசைக் கோர்ப்பையும் சேர்த்துவிட்டோம்.
பாராட்டுக்கு நன்றி..
படம் நன்றாக இருந்தது. ஏன் 'உனக்கு இது தேவையா' மாதிரி கேள்வியெல்லாம்? :) ஆடியோவைக் கேட்கும்போது ஒரு யோசனை தோன்றியது (யோசனைதான்.): ஆரம்பத்தில் கேட்கும் 'டக் டக்'கென்ற செதுக்கும் ஓசையை வைத்து Rap மாதிரி ஏதாவது செய்திருக்கலாம், இல்லை? அவர்கள் தேர் செதுக்கும் பகுதிகளை சின்னப் பகுதிகளாகச் சேர்த்து ஒட்ட வைத்திருக்கலாம் என்றும் தோன்றியது. Anyhow, it's your project. சுவாரசியமாக இருந்தது. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்? பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
'குறும்படத் தயாரிப்பு' நல்ல முயற்சி!
பயிற்சி பட்டறையில் பயின்ற விஷயங்களைப் பதியுங்கள். தங்களைப் போன்ற ஆர்வலர்களுக்கு பயன் படும்!
வாழ்த்துக்களுடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.
படம் நல்லாத்தான் இருக்கு, நுட்பக்குறைகளை தவிர்த்துப்பார்த்தால். பேசும் வார்த்தை உச்சரிப்பில் பிழைகள் உள்ளன.. அவசியம் தவிர்க்கப்படவேண்டியவை. "கலை"யை "களை" எனச் சொல்வது தவிர்க்கப்படவேண்டியது :-)
அது தவிர்த்து, தத்துவார்த்தமாகப் பார்த்தால், 60 வருடங்களில் 40 க்கும் மேல் தேர்களைச் செய்தவர் இன்னும் மிகவும் எளிய வாழ்வுகளியே நிலைத்திருப்பது உழைப்பும் ஊதியத்துக்குமான நியதிகளையும் தமிழ்நாட்டின்/இந்தியாவின் போற்றுதல்களையும் ஞாபகப்படுத்தியது.
நீங்க ஜெயப்பிரகாஷா? ஆம் என்றால் உங்க ஊரு பல்லாவரமா: P (பல்லாவரம்? புகழ் ஜெயப்பிரகாஷை ஞாபகம் இருக்குதானே?)
"மவனே.. உங்களுக்கும் எங்களுக்கும் இது போன்ற பதிவுகள் தேவையே"