Posts

Showing posts from August, 2005

102 ஆவது பதிவு (&*!#$%^&#@!!!!)

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கு அமைதி இருக்கும். ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா [ கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஜெமினிகணேசன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஸ்ரீதர், ரா.கி.ரங்கராஜன் ]

மாயாபஜார்

Image
சமீபத்திலே, ராஜ் வீடீயோ விஷனில், ஒரு பத்து நாட்களுக்கு தள்ளுபடி விற்பனை வைபவம் நடைபெற்றது. நான் தேடிச் சென்ற திரைப்படங்கள் கிடைக்காவிட்டாலும், அங்கே இருந்ததில், சில முத்துக்களும், ரத்தினங்களும் மாட்டின. இவரைத் தாண்டி ஒரு நடிகை இல்லை என்று நான் நினைக்கும் ஒரே ஒருவர் நடிகையர் திலகம் சாவித்திரி . அவர் நடித்த பல படங்களைப் பொறுக்கி வந்தேன். அதில் ஒன்று, மாயா பஜார். மகாபாரதத்தின் ஒரு கற்பனைக் கிளைக்கதையான மாயாபஜார் ( 1957 ), ஒரு wholesome entertainer. பாண்டவர்களுடைய உற்ற துணையான கிருஷ்ணனின் ( என்.டி.ராமாராவ்) மூத்த சகோதரன், பலராமனின் ( டி.பாலசுப்ரமணியன்) செல்ல மகள் வத்சலா ( சாவித்திரி) . அர்ஜுனன் சுபத்திரை தம்பதியரின் மகன் அபிமன்யு ( ஜெமினி கணேசன்). பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் சகோதரி சுபத்திரை. அபிமன்யுவுக்கு வத்சலா மீது இளம்பிராயத்தில் இருந்தே காதல். பெரியவர்களும் அப்படியே முடிவு செய்துவிடுகின்றர். ஆண்டுகள் கழிந்த பின்னர், ஒரு காலகட்டத்தில், பாண்டவர்கள், சகுனியின் ( நம்பியார்) சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தோற்று வீடு நாடு ஆகியவற்றை இழந்து விடுகின்றனர். இதைக் கேள்விப்பட்டதும்,. பலராமன், தன் ச

ராஜா யார்?

Mathematics is the Queen of Sciences என்று ராமசுப்பு ( கணித வாத்தியார்) , ஒரு மத்தியான வேளை வகுப்பில் திட்டவட்டமாக அறிவித்த போது, அந்த வயசுக்கே உரிய குறும்புத்தனத்தால், " அப்ப ராஜா யாருங்க சார்" என்று பின்பெஞ்சில் இருந்து குரல் கொடுத்து, ஸ்கேலால் பிட்டத்தில் அடிபட்டது நினைவுக்கு வருகிறது. " ராஜா யார் ? " என்ற கேள்விக்கு இன்றைக்கும் எனக்கு பதில் தெரியாது. "என்னுது தான் ராஜா உன்னுது கூஜா" என்று துறை வல்லுனர்கள் அடித்துக் கொள்கிறார்களோ என்னமோ... அதுவும் எனக்குத் தெரியாது... ஆராய்ச்சிகள், பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு என்ற அளவிலேயே அறிவியலை பல துறைகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள் என்று இன்றைக்குத் தெரிந்தாலும், சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்ற காலங்களில், அது வேதியியல், இயற்பியல், உயிரியல் என்று மூன்றாக மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. அதிலே, வேதியியலையும் உயிரியலையும் விட்டுவிடலாம். ஏனெனில், அவை டப்பா அடித்து மதிப்பெண் பெற ஏதுவானவை. கொஞ்சம் வரைகலை வித்தை தெரிந்தால், உயிரியலில் நல்ல மதிப்பெண் பெற்றுவிடலாம். இவை எல்லாம் நான் படித்த காலத்தின் சூக்குமங்கள்.

வெங்கட் சாமிநாதனின் வலைப்பதிவு

வெங்கட் சாமிநாதன் வலைப்பதிவு ஒன்றைத் துவங்கியுள்ளார் அவருக்கு என் நல்வரவு. வலைப்பதிவு தொடங்க, அவருக்கு உதவியவர் டோண்டு ராகவன் வெ.சா கொஞ்சம் touchy என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆக, அவருக்கு டோண்டு செய்தது உதவியா அல்லது தொந்தரவா என்பது, வலைப்பதிவில், வெ.சா. தொடர்ச்சியாக எழுதவும், அன்பர்கள் மறுமொழியளிக்கவும் தொடங்கிய பின்னர் தெரியவரும்.

Happy Independence Day

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான போபாலில் ஒரு கல்வி நிலையம் இருக்கிறது. Manju Sanskar Kendra என்ற அந்தக் கல்விநிலையத்தின் நோக்கம், 'உருப்படியான' மனைவிகளை உருவாக்குவது. கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்வி நிலையத்தில், கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு , திருமணத்துக்கு 'ரெடியாக' இருக்கும் பெண்களுக்கு என்று மூன்று மாதப் course நடத்தப் படுகிறது. இதற்குக் கல்விக் கட்டணம் என்று எதுவும் இல்லை. வகுப்புகள், பொதுவாக காலை ஏழுமணியில் இருந்து பத்து மணி வரை நடக்கும். இந்த பாடதிட்டத்தில் சொல்லித் தரப்படும் சிறப்பான விஷயங்கள்.. 1. திருமணமாகி, புகுந்த வீட்டில் எப்படி பல் துலக்குவது எப்படி, சமைப்பது எப்படி, மற்றும் உண்பது எப்படி என்று சொல்லித் தருதல். 2. கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளச் சரியான நேரம், நடு நிசியில் இருந்து அதிகாலை மூன்று மணி வரை மட்டுமே. மூன்றில் இருந்து காலை ஆறுமணி வரை, பூசை புனஸ்காரங்கள் செய்தல். 3. புகுந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்கும் பட்சத்தில், நினைத்த நேரத்தில் கணவனுடன் 'சந்தோஷமாக' இருக்க முடியாது என்பதால், உணர்வுகளை அடக்கி

எக்ஸிஸ்டென்ஷியலிஸம் - சுஜாதா- சண்முகம் சிவலிங்கம்

சுஜாதா விகடனில் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி எழுதி, அதன் தொடர்பாக வந்த ரவிஸ்ரீனிவாஸ் வலைப்பதிவில் எழுந்த விவாதம் வந்த நாள் முதலாக, "இருப்பியல் அல்லது இருத்தலியல் என்று அழைக்கப்படும் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்றால் என்ன ?" என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அது நேற்றைக்குத் தான் கிடைத்தது . தத்துவங்களில் ஊறித் திளைத்தவர்கள், அந்தத் தத்துவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க முயலும் போது, சில அபாயங்கள் நிகழும். அவற்றில் ஒன்று, பெரும்பான்மையானோரைச் சென்றடையும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, எளிமையான, பொருத்தமற்ற உதாரணங்கள் மூலம் விளக்கி, தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வது. இரண்டு, தத்துவங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான அகழிகளில், இன்னும் அதிகம் கூரிய பற்கள் கொண்ட முதலைகளை விட்டு, அருகே அண்டவிடாமல் செய்வது, முடிந்தால் கடிக்கவும் விடுவது. இவ்விரு அணுகுமுறைகளையும் தவிர்த்து, ஒரு புதிய நடையில், விளங்கும் வண்ணம் எழுதிய சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு நன்றி. எடுத்து இட்ட மதிக்கும் நன்றி.