Posts

Showing posts from February, 2005

Exclusive - an interview with Asokamithran.

கிழக்குப் பதிப்பகமும் கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய ' அசோகமித்திரன் 50 ' விழா முடிவடைந்ததும், விழாவில் சிறப்புரை ஆற்றிய பால் சக்கரியாவையும், விழா நாயகர் அசோகமித்திரனையும் அவரவர்கள் இடத்திற்கு பத்திரமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தி.நகரில் பால் சக்கரியா இறங்கிக் கொள்ளும் வரையிலும், அவரும் அசோகமித்திரனும் , இதமான ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இலக்கியக்கூட்டங்கள், இரவு ஒன்பது மணிக்கு மேல் நீடிப்பதில் இருக்கும் சங்கடங்கள் பற்றி, நகைச்சுவையாக , அசோகமித்திரன் ஏதோ சொல்ல, சக்கரியா, விழாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை பற்றி வியந்தார். " the gathering was amazing. I think lot of people in chennai read you" என்று சக்கரியா புகழ்ச்சியாகச் சொல்ல, அதற்கு அ.மி, " it is not like that. todays crowd was not for me but for sundara.ramasamy. such a writer...commands a huge following in here... like your MT in kerala ( சிரித்தார்). விழாப் பேச்சில், சுந்தர.ராமசாமியின் ஜனரஞ்சகமான மிமிக்ரி நாடகம் பற்றி என் அதிருப்தியைத் தெரிவிக்கலாம் என

வேம்பநாட்டுக் காயல்

வேம்பநாட்டுக் காயல் வாங்க, வாங்க, வாங்க இருகரம் கூப்பி அழைக்கின்றேன் அன்புடன் பிரகாஷ்

கோர்ட்டுக்குப் போயிருக்கீங்களா?

சினிமாவில் பார்த்த கோர்ட்டுக்கும் , நிஜ கோர்ட்டுக்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறது என்பதை நேரிலே பார்த்தால் தான் உணர்ந்து கொள்ள முடியும். எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில், மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட்டிடம், ஒரு சின்ன வேலை. ஒண்ணும் பெரிய காரியமில்லை. கூண்டில் நின்று ( குற்றவாளிக் கூண்டல்ல, சாட்சிக் கூண்டு என்பதை சொல்லிவிட்டால், உயரப்பரக்கும் கற்பனைப் பறவையின் சிறகை முன்னமேயே முறித்து விடலாம் பாருங்கள்) கேட்கிற கேள்விக்கெல்லாம் ஒழுங்காக பதில் சொல்லி, சில ஆவணங்களில் ( அலுவலகம் தொடர்பானது) நீதிபதியின் கையெழுத்தைப் பெற்று விட்டால் வேலை முடிந்தது. வளாகத்துக்குள் நுழைந்த உடனே, வழியெங்கும் கருப்புக் அங்கிகள். நாளிதழ்களில் அடிபடுகிற ஹை-ப்ரொ·பைல் வக்கீல்களுக்கும், அ·பிடவிட் தாக்கல் செய்யணுமா, நோடரி கையெழுத்து வேணுமா என்று வந்து கிராக்கி பிடிக்கிற இந்த வக்கீல்களும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜாமீன் வாங்குவதற்கு என்றே சில பேர் இருக்கிறார்களாம். என் ஹிட் லிஸ்ட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள். 'வேலையை' முடித்து விட்டு வந்து அவர்களிடம் க்ளையண்ட் ஆகிவிடலாம் என்று நினைத்து, வ