இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத் தடை செய்திருக்கின்றன. வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா விசாரித்த போது, அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது. இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள்.

தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன.

பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல் தடை செய்ய வில்லை. அல்லது, அரசு ஏதாவது குறிப்பிட்ட வலைப்பதிவைத் தடை செய்யச் சொல்லி, இவர்கள், அதி புத்திசாலித்தனமாக, ஒட்டு மொத்தமாகப் போட்டுத் தள்ளிவிட்டார்களா என்றும் புரியவில்லை. அப்படி வலைப்பதிவுகளைத் தடை செய்ய வேண்டும் என்றால், ஏன் blogger ஐ மட்டும் குறி வைக்கிறார்கள் என்று புரியவில்லை.

இது வரை, சம்மந்தப்பட்ட இணையச் சேவை வழங்கிகளிடம் இருந்தும், தொலைத் தொடர்பு அமைச்சகத்திலிருந்தும், இது தொடர்பாக எந்த அறிக்கையும் வரவில்லை என்பதால், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

இந்தத் தடையில் பாதிக்கப்பட வலைப்பதிவராக நீங்கள் இருந்தால், வலைப்பதிவுகளைப் படிப்பது எப்படி என்று சில உருப்படியான குறிப்புக்களை அமித் அகர்வால் தருகிறார்.

Comments

தடை செய்யப்பட்டுள்ளது என்றால் வலைப்பதிவுகளை காணமுடியவில்லையா அல்லது வலைப்பதிவு தளங்களில் எழுதுவதையே தடை செய்துவிட்டார்களா?
ப்ளாகருக்குள்ளே நுழைய முடியவில்லை. நுழைந்தால் தானே, எழுத முடியும். மேலும், இந்தத் தடை blogger.com க்கு மட்டும் தான்...
இது தகாத செயல். அரசு விரைந்து இந்நடவடிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் பதிந்திருப்பது தடைகளை உடைத்தா அல்லது உங்களது வழங்கி வேறு என்பதால் தப்பினீர்களா?
நான் கேள்விப்பட்டது...blogspot.com தளத்தை தடை செய்துள்ளதாகவும், எனவே எந்த வலைப்பதிவையும் பார்க்க முடியவில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் எழுதுவதற்கு blogspot.com உள்ளே நுழைய வேண்டாமே..blogger.com போதுமே! சட்டத்தை அமல் (வார்த்தை சரிதானே? அல்லது 'அமுல்','போர்ன்விட்டாவா'?!) படுத்துபவர்களூக்கு இந்த blogger, blogspot போன்ற உள்குத்து கண்றாவியெல்ல்லாம் தெரியவா போகிறது. அதிலும் blogger.com-ல் எழுதினால் blogspot.com-ல் தெரியும் என்றால் தலை சுத்தாதா என்ன?!
பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு கமெண்ட்..


அது சரி.. இங்கே post a comment-ங்கிற வார்த்தைக்கு கீழே 'மாயாபஜார்..சந்திரமுகி...வாணிஜெயராம்' அப்படீன்னு ஒரு நாலஞ்சு ஐட்டம் தனியா நிக்குதே. ஆரம்பத்திலே குழம்பிட்டேன். சரி...பின்னூட்டம் இடுவதற்கு எக்கச்சக்கமான வழிமுறை (blogger,haloscan,....) வெச்சு, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பேரு வெச்சிருக்கீங்க போல அப்படீன்னு!

அப்புறமா ஆராய்ச்சி (?!) செஞ்சு பார்த்த அப்புறம் தான் புரியுது.. அது rightbar-ல இருந்து பிச்சுகிட்டு வந்திடிச்சுன்னு. என்னன்னு பார்த்து சரிபண்ணுங்க தல!
Unknown said…
இது மிகவும் முட்டாள்தனமான முடிவு. இந்தியா என்ன சீனா மாதிரி சர்வாதிகார நாடா என்ன? தடை செய்யவேண்டும் என்றால் ஒருசில வலைப்பதிவுகளை மட்டும் தடை செய்யவேண்டியது தானே?
Boston Bala said…
பிரகாஷ், சன் டிவி சிறப்பு பார்வை (எட்டு மணி செய்திகளில்) பார்க்க கிடைத்ததா? யாஹூ மின்னஞ்சலில் ஏதோ55 என்னும் கணக்கில் இருந்து 'செயலை முடித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டார்கள்' என்று செய்தி வந்ததாகவும், அதன் தொடர்பாக சில விஷயங்களையும் சொன்னார்கள்.

அந்த செய்தியை தேடுபொறியில் போட்டு, வந்து விழுந்த தொடர்பான சுட்டுகளைக் குருட்டாம் போக்கில் தடை செய்திருப்பபர்களோ?
சுந்தரவடிவேல் : தடை செய்திருக்கிற இணையச் சேவை வழங்கிகள், பெரும்பாலும் வட இந்தியாவில் இயங்குகிறவர்கள் என்பதால், இந்தப் பக்கம் அதிகமாக பாதிப்பு தெரியவில்லை. நான் பிஎஸ்என்எல் சேவையை உபயோகிக்கிறேன் என்பதால், எனக்கு தற்போது பிரச்சனை இல்லை
மாயவரத்தான் : ரொம்ப சரி. தடை செய்தவர்களுக்கு, அதை ஒழுங்காகச் செய்யத் தெரியவில்லை :-). பல feed readers வழியாகவும், ப்ராக்ஸி தளங்கள் வழியாகவும் படிக்க முடிகிறது.

டெம்ப்ளேட் விவகாரம், முயற்சி செஞ்சு பார்த்து, முடியலைன்னதும் விட்டுட்டேன்..
வெங்கட்ரமணி :அதே கேள்விதான் எனக்கும்.

பாலாஜி : சன் நியூஸ் பார்க்கவில்லை. என்ன விவகாரம் என்று இன்று தெரிந்துவிடும்..
Unknown said…
பிரகாஷ், இதைப்பற்றி சிறிதுநேரம் யோசித்தபோது என்னுடைய archive browser logicஐ வைத்து இதற்கும் ஒரு சுலப தீர்வு காணலாம் என்று தோன்றியது. தீர்வு இதோ -

http://www.anniyalogam.com/scripts/freedom.php

உங்களுக்கு தனிமடலும் அனுப்பியிருக்கிறேன்.
Unknown said…
பிரகாசரே, முன்பு ஒரு முறை ஏதோ ஒரு தீவிரவாதா யாஹூ குழுமத்திற்கு அரச தடைப் போடச் சொல்ல, நமது அறிவாளி இணைய வழங்கிகள் ஒட்டுமொத்த யாஹூ குழுமங்களுக்கே ஆப்பு வைத்தது நினைவிருக்கிறதா? அது போல தான் இப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்புண்டு.
அதெல்லாம் சரி, பதிவு போட்டு ரொம்ப நாள் இருக்குமோ? தமிழில் காலம் எழுத தகுதியான நபர்கள் என்று பிரகாஷ், சுரேஷ் கண்ணன் அப்புறம் நேசமுடன் வெங்கடேஷ் என நினைத்திருந்தேன்....சத்தமே காணோமே!
இந்த செய்தி பெரிய அதிர்ச்சியாய் இருக்கிறது. உரிய அரச அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டீர்களா?

அரசு பொதுவில் இதை அறிவித்ததா?

அவ்வாறு அரசு பொதுவில் அறிவிக்காவிட்டால் ப்ளாகருக்கு இதுபற்றி தெரிவிக்கலாம்.
Jay said…
கருத்து சுகந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கையில் இறங்கி ஜனநாயகத்தை இந்தியா கொலை செய்யக் கூடாது.
Jeyapalan said…
தடைக்கு என்ன காரணம் சொல்கிறார்கள்?
சும்மா தடை செய்ய உத்தரவு என்றால் விட்டு விடுவதா?
சனநாயக நாட்டில் கேள்வி கேட்கலாமே?
இலங்கையில் தான்
ம் என்றால் வன வாசம்
ஏன் என்றால் அஞ்ஞாத வாசம்.

வாத்தியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
"ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை"

Popular posts from this blog

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்