ஷங்கர் என்கிற சமூக விஞ்ஞானி.

that that man, that that work என்று சொல்லுவார்கள். அவரவர்களும் அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்தாலே, பெரும்பான்மையான சிக்கல்கள் தீரும். திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒருத்தர், சமூக விஞ்ஞானி வேஷத்தை போட்டுக் கொண்டால் என்ன ஆகும்? அன்னியன் மாதிரியான ஒரு திரைப்படம் தான் நமக்குக் கிடைக்கும்.

ஷங்கர் , அடிப்படையில், எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற, சட்டத்தைக் கரைத்துக் குடித்த மாதிரி பாவ்லா காட்டுகிற ஒரு mediocre இயக்குனரின் சிஷ்யபுள்ளை. அந்த காலத்தில் எஸ்.ஏ.சி , 'நான் சிகப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாட்சி' என்று வரீசையாக, சட்டத்தை கொத்துக் கறி புரோட்டா போட்ட படங்களைத்தான், அவருடைய சீடர் கொஞ்சம் sophisticated ஆக எடுக்கிறார் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை.

ஒரு படைப்பாளி தன்னுடைய கதைக் கருவாக இன்னதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனால், படம் பார்க்கிற சமூகத்தை ஒரு நோயாளிக் கூட்டமாக உருவகம் செய்து கொண்டு, அதற்கான மருந்தைத் வலுக்கட்டாயமாகப் புகட்டினால், அதைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது, அதிலும் diagnosis ஏ தவறு என்கிற போது, கேஸே போடலாம். :-) . " எங்கள் ஏரியாவில் ரோடு சரியில்லை" என்று லெட்டர் டு தி எடிட்டர் எழுதும் முகலிவாக்கம் ராமச்சந்திரனுக்கும் , பிரச்சனைகளை பூதாகாரமாக விஷ¤வலில் காட்டும் ஷங்கருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? முன்னவருக்கு ஒரு ரூபாய் இன்லண்டு லெட்டர், ஷங்கருக்கு முப்பது கோடி ரூபாய் போஸ்ட் கார்ட். ரெண்டு பேராலும், அதுக்கு மேலே உருப்படியாக, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இதை தெளிவாகப் புரிந்து கொண்டு மேலே போகலாம்.

இந்த நிதர்சனம், ஷங்கருக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். அவருடைய திரைப்படங்கள், மேல்போக்காக, சமூக விமர்சனமாக அமைந்தாலும், அடிப்படையில், அது பார்க்கிறவர்களை பிரமிப்பு ஊட்டுவதற்காக மட்டுமே எடுக்கப்படுபவை. ஒரு அதீதமான கற்பனையில் உதிப்பவை. அந்த அதீதக் கற்பனையை, யதார்த்தமான சம்பவங்களைக் கொண்டு, நம்பும்படியான ஒரு தோற்றத்தைக் கொடுத்து விடுவார். இதற்கு வசனகர்த்தாக்களின் (சுஜாதா, பாலகுமாரன் ) பங்கு கணிசமானது .

எட் கான்ஸ்டபிளின் மகன், கவர்னரைப் காதலித்து வெற்றி பெறுவது என்கிற ஒரு நம்பகத்தன்மை இல்லாத கதையிலே, கல்லூரி மாணவர்கள், கல்லூரி எலக்ஷன், சத்யம் தியேட்டரிலே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் பார்ப்பது, கலாசேத்திரா நடனப் பள்ளி, சிதம்பரத்தில் நடன விழா, அச்சு அசலான போலீஸ் குவார்ட்டர்ஸ், கை அடி பம்ப்பு, என்று பார்க்க நம்பும் படியாக இருக்கிற சில விஷயங்களைக் கலந்து கொடுத்து ஏமாற்றிவிடுவார். மற்றொரு படமான இந்தியனில், உண்மைத் தன்மை சற்றும் இல்லாத முக்கிய கதாபாத்திரம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் அனைத்தும் யதார்த்தத்துக்கு வெகு அருகில் இருக்கும். உதாரணமாக, நாம் இந்தியன் தாத்தா மாதிரியான ஒரு ஆளை, ஜூனியர் விகடன் , நக்கீரனில் கூடச் சந்தித்திருக்க மாட்டோம். ஆனால், அந்த இந்தியன் தாத்தா புழங்கும் இடங்களும் , சந்திக்கும் மனிதர்களும் - கவர்மெண்ட் டிரெஷரி, கவர்மெண்ட் ஆஸ்பத்திரி, செருப்புத் தைக்கும் தொழிலாளி, லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர், ஆர்டிஓ அலுவலக மனிதர்கள் - அனைவரும் யதார்த்ததுக்கு நெருக்கமாக இருப்பவர்கள். [வயதான கமல்ஹாசனின் மேக்கப் கூட, அதீதமாக, கேரிகேச்சர் தன்மை கொண்டதாக இருந்தது. அதே சமயம், வேலுநாயக்கரின் ஒப்பனை, ரொம்ப graceful ஆக இருந்ததையும் ஒப்பிட்டு நினைவு படுத்திக் கொள்ளலாம். ] . கூர்ந்து கவனித்தால், ஷங்கரின் அனைத்துத் திரைப்படங்களிலும், இந்த கனவமிழ்ச்சூழல் ( fantasy ) + யதார்த்தம் என்கிற கலவை, நேர்த்தியாக, இனம் பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அவருடைய படங்களின் வெற்றிக்கு இதை ஒரு முக்கியமான காரணமாக எடுத்துச் சொல்லலாம்.

இந்த வழக்கத்துக்கு மாறாக அவர் செய்த முயற்சிதான் ' பாய்ஸ் '. ஷங்கருடைய திரைப்படங்களிலேயே, யதார்த்தத்துக்கு கொஞ்சமாவது அருகில் இருந்தது பாய்ஸ் திரைப்படம் தான். அந்தத் திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களாக வந்த விடலைகள், அப்படி ஒன்றும் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்தவர்களில்லை, வழக்கமாக செக்ஸ் புஸ்தகம் படிக்கிற, பஸ்ஸிலே உரசுகிற, கோவிலில் சைட்டடிக்கிற, 'எட்டிப்' பார்க்கிற, ஓடிப்போய் திருட்டுத்தனமாகக் கல்யாணம் செய்து கொள்கிற , சென்னையில் பார்க்க முடிகிற விடலைகள் தான். ஆயினும், படத்தின் explicit ஆன டிரீட்மெண்ட் தான் பார்க்கிறவர்களை முகஞ்சுளிக்க வைத்தது. [இதே போன்ற விஷயத்தை, மிக அழகாகவும், யதார்த்தமாகவும், அதேசமயம் வெகு முக்கியமாக, tittillate செய்யாமலும் எடுத்த செல்வராகவன் ( 7G ரெயின்போ காலனி ) நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.]

அதீதகற்பனை + யதார்த்தம் என்பது வெற்றிகரமான சூத்திரம் என்பது, ஷங்கர், தன் படங்களின் வெற்றி மூலம் தெரிந்து கொண்டது. ஆனால் இந்தக் கலவைமட்டுமே வெற்றி தரும் என்று முடிவு செய்ததுதான், ஷங்கர் என்கிற கலைஞனுக்கு உள்ள insecurity பிரச்சனையை நிதர்சனமாகக் காட்டுகிறது.

அடிப்படையாக, திரைப்படம் என்பது ஒரு கலை. கொஞ்சம் செலவு அதிகமாக ஆகும் கலை. அதிலே நடக்கும் பரிசோதனை முயற்சிகள் தான், அந்தக் கலையை மேலும் செழுமையாக்கும். தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தப் பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஷங்கருக்கும் ஏதேனும் புதுசாகப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். ஆனால், எதிலே பரிசோதனை என்பதில் தான் அவருக்கு குழப்பம் வந்திருக்கிறது. முதல் படத்திலே கல்வி ஊழல், அடுத்த படத்தில், லஞ்ச ஊழல் ஒழிப்பு, அதற்கடுத்த படத்தில், அரசியல் சீர்த்திருத்தம் என்று வகை வகையான பிரச்சனைகளை எடுத்துச் சொன்னவர், இந்தப் படத்திலே, யாரும் எதிர்பார்த்திருக்கவே முடியாத பிரச்சனையையும், அதற்கு, யாராலும் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு தீர்வைச் சொல்லுவதும், மக்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் என்றும், அந்த பிரமிப்பு படத்தை பரவலாகப் பேச வைக்கும் என்றும் தீர்மானமாக நினைத்திருக்கிறார். அந்த நினைப்பின் செயல்வடிவம் தான், கருடபுராணம், கிருமிபோஜனம், அன்னியன்.காம் இணையத்தளம் இத்தியாதி..

புதுசாக எடுப்பது என்பதை திரைக்கதை அமைப்பிலே எங்காவது முயற்சி செய்திருக்கிறாரா என்றால்... இல்லை. சமூகத்தில் நடக்கும் வித விதமான பிரச்சனைகளை சலித்து எடுத்து, அதற்கு, நமக்குத் தோன்றாத ஒரு விஷயத்தை தீர்வாகச் சொல்லி, சனங்களை, ஆவென்று வாய் பிளக்க வைப்பது தான், தன்னுடைய வெற்றி என்று கருதுகிறார். கலாரீதியாக ஷங்கர் தோற்றுப் போவது இங்குதான். பாடல் காட்சிகளைக் கூட, எந்த விதமான முயற்சியும் இல்லாமல், தன்னுடைய முந்தைய படங்களை ஒட்டியே படமாக்கி இருப்பது, ஷங்கருடைய கற்பனை வறட்சியைத்தான் காட்டுகின்றது. அல்லது இவைதான் படத்த்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸைக் கொண்டு வருகிற commercial ingredients என்று கேனத்தனமாக நினைத்திருக்கலாம்.

வெற்றி பெற்ற அனைத்துப் படங்களுக்கும் இருக்கும் பல பொதுத்தன்மைகளில் ஒன்று, unexpectedness. இந்தத் தன்மை, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். ஷங்கர், இந்த 'எதிர்பாராத தன்மையை', திரைக்கதை ரீதியாகச் செய்வதை விடுத்து, விதவிதமான கொலைகள் செய்வதிலும், ரெமோ என்கிற அரைவேக்காட்டு பாத்திரத்தின் உடைகள், diction, ( dude, babe, donpepe, kool.. etc..) மூலமாகவும் வெளிப்படுத்துகிறார். அட்டைகளை மூலமாகக் கொலை செய்வதைப் பார்த்து, பார்க்கிறவர் ஆஹா...அசந்து போவான் என்பது ஷங்கரின் எண்ணம்.

ஷங்கருடைய மற்றொரு பிரச்சனை, முன்னே சுட்டிக்காட்டிய பிரமிப்பூட்டுவது என்கிற விஷயத்தை, இயல்பாகச் செய்யாமல், வலிந்து செய்வது. இது படத்துக்கு இடையூறாகத்தான் அமையும் அல்லது சில சம்யங்களில் எரிச்சலூட்டும் என்பதை புரிந்து கொண்டரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அய்யங்காரு வீட்டு அழகே என்ற ( ஜீன்ஸ் பாடலை நினைவு படுத்தும் அரங்க அமைப்பு ) என்ற பாடலுக்கு prelude ஆக வரும் திருவையாறு காட்சியும், அதில் தலை காட்டும் ஓ.எஸ் அருண், ராஜம் அய்யர், சுதா ரகுநாதன், உன்னிகிருஷ்ணன், காயத்ரி கிரீஷ், குன்னக்குடி வைத்தியநாதன், சீர்காழி சிவசிதம்பரம், டாக்டர் நர்மதா கோபாலகிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன்.. போன்ற சங்கீத உலகின் டாப் ஸ்டார்கள் அனைவரும், ஷங்கருடைய extravagance ஐக் காட்டத்தான் பயன் பட்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி இல்லாமல் படம் எடுக்க முடியாதா என்று நான் கேட்கவில்லை. ஆனால், இந்தக் காட்சியை, பெரும்புள்ளிகளை எல்லாம் ஒன்று சேர்க்க முடிகிற வசதியை, இன்னும் படத்துடன் ஒட்டி, பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் திரைக்கதை எழுத முடியாதா என்று கேட்கலாம்.

ஒரு கிராமத்துக்கே பெயிண்ட் அடிப்பது போன்ற விஷயத்தையும், பல காமிராகள் வைத்து , திராபையான motion capture உத்தியை ( எனக்கென்னமோ, இது பாரதிராஜாவின் ஸ்லோமோஷன் டெக்னிக் மாதிரிதான் தெரிகிறது ) வைத்து எடுத்த சண்டைகாட்சியையும், தன்னுடைய படத்துக்கு usp போல project செய்வதைப் பார்த்தால், தமிழக மக்களிடம், கலைரீதியாக வெற்றி பெற முடியாது என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் இது போன்ற ·பில்ம் காட்டும் வேலையில் இறங்கியிருக்கிறாரோ என்று ஷங்கர் மீது பரிதாபம் கொள்ளத்தான் தோன்றுகிறது.

நானறிந்த வரையில் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு விதமான species. யதார்த்தமான அழியாத கோலங்களும், விடலைத்தனமான காதலைச் சொன்ன கிளிஞ்சல்களும் ஒரே வளாகத்தில் இருந்த இரு அரங்குகளில், ஒரே சமயத்தில் நன்றாக ஓடி சில்வர் ஜூப்ளி கொண்டாடின. பல கோடி ரூபாய் செலவு செய்து, நல்ல கதையம்சத்துடன், உயிரைக் கொடுத்து வேலை செய்த சமுராய் என்கிற பாலாஜி சக்திவேலின் முதல் படத்தை விட, " ஸ்கூல் மாணவி, மெக்கானிக்குடன் வீட்டை விட்டு ஓடினாள்" என்கிற , தினத்தந்தியின் மூன்றாம் செய்தி மாதிரியான ஒன்லைனை develop செய்து எடுத்த காதல் படம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தது. காதல் கோட்டை என்கிற படத்தின் உச்ச கட்ட காட்சியின் போது, தியேட்டரில் இருந்த அனைவரும், எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தைப் பார்த்திருக்கிறேன். அப்படி அவர்களை படத்துடன் ஒன்ற வைத்தது, திரைக்கதை ஆசிரியர்.

ரசிகர்களைக் பரவசத்தில் ஆழ்த்த, ரச¨னையை மேம்படுத்த, குதூகலம் கொடுக்க நிறைய வழிகள் இருக்கின்றன. திரைக்கதை வழியாக அதைச் செய்தால், அவன், கலைஞன். கிரா·பிக்ஸ், டெக்னிக் என்று ·பிலிம் காட்டினால், அவர் தொழில் நுட்பர்.

அவர் ஒரு கலைஞராக போகவேண்டிய தூரம் இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதற்குள் இப்போது இருக்கிற சின்னப் பசங்கள் அவரை தாண்டிச் சென்று விடுவார்கள்.

Comments

Santhosh Guru said…
கலக்கல். நல்ல அலசல்.

// அய்யங்காரு வீட்டு அழகே என்ற ( ஜீன்ஸ் பாடலை நினைவு படுத்தும் அரங்க அமைப்பு )//
அது மட்டுமல்ல. M.T.V விளம்பர இடைவேளையில் வரும் துணுக்கு, எனக்கு ஞாபகம் வந்தது.

தலைப்பைப் பார்த்து விட்டு, நம்ம சுவடு ஷங்கர் எழுதின புத்தகத்தை பற்றி எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சேன் :)
ROSAVASANTH said…
பிரகாஷ், நல்ல அலசல். ஷங்கரைன் வெற்றிக்கான காரணத்தை நன்றாக சொல்லியிருப்பதாக படுகிறது. யதார்த்ததை சரியான தேவையான உவப்பான விகிதத்தில் மற்ற கறபனை அம்சங்களுடன் கலப்பதுதான்.

//முதல் படத்திலே கல்வி ஊழல்//

அய்யா இட ஒதுக்கீடு பிரச்சனையை(ஊழல் பற்றியும் கொஞ்சம் தொட்டாலும்) ஏதோ ஒரு காரணத்தால் இப்படி ஊழல் என்று மாற்றுவது நியாயமா?
அந்நியனுக்கு ஆயிரம் விமர்சனங்கள் வந்திருந்தாலும், நானே கூட ஒன்று போட்டிருந்தாலும், என் கருத்துக்களுக்கு மிக மிக அருகில் இருந்தது இந்த விமர்சனம்தான்.

மிக நல்ல அனாலிஸிஸ்.

கை கொடுங்க பிரகாஷ்.
பிரகாஷ்ஜி,

விரிவான அலசல். வேறுபாடுவதற்கு பெரிதாக எதுவுமில்லை...ஒரேயொரு அடிப்படையான விஷயத்தை தவிர! சினிமா என்பது ஒரு கலை என்று சொல்லியே நிறைய பேர் ஏமாற்றியும், ஏமாந்தும் இருக்கிறார்கள். சினிமா ஒரு காலத்தில் கலையாக இருக்கலாம். இப்போது கலை அல்ல. சினிமா ஒரு தொழில் மட்டுமே என்கிற நிதர்சனம் வெளிப்படையாக வைக்கப்படும் பட்சத்தில் நிறைய வேஷங்கள் கலையக்கூடும். கலையவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லைதானே?
/எட் கான்ஸ்டபிளின் மகன், கவர்னரைப் காதலித்து வெற்றி பெறுவது/
:O
காதலிக்கும் பெண்ணின் கைகள் கவர்னர் கைகளா?
படத்தின் அடிநாதமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விஷயத்தை ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டிலேயே எந்தவித வணிக சமரசமும் செய்து கொள்ளாமல் இன்னும் (கறுப்பு வெள்ளையில் கூட) திறமையாக சொல்லியிருக்க முடியும். ஆனால் சில்லறை புரளாது.
rajkumar said…
அன்பு பிரகாஸ்,

காலக்கட்டங்களில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அழியாத கோலங்களும், கிளிஞ்சல்களும் வேறு காலக்கட்டத்தில் அல்லவா வெளியாயின.

மற்றபடி விவரமான சுவையான அலசல்.

அன்புடன்

ராஜ்குமார்
பரணீ said…
அசத்தலான அலசல்.
அன்பு said…
பிரகாஸ்,

கலக்கலான அலசல்.
இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்.

கனவமிழ்ச்சூழல் ( fantasy ) - அருமை (ஞாபகம் வச்சுக்க முயற்சிபண்றேன்:)
Kannan said…
//அதீதகற்பனை + யதார்த்தம் என்பது வெற்றிகரமான சூத்திரம் என்பது, ஷங்கர், தன் படங்களின் வெற்றி மூலம் தெரிந்து கொண்டது//

//...தன்னுடைய படத்துக்கு usp போல project செய்வதைப் பார்த்தால், தமிழக மக்களிடம், கலைரீதியாக வெற்றி பெற முடியாது என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் இது போன்ற ·பில்ம் காட்டும் வேலையில் ...//

Rem acu tetigisti!

நன்று பிரகாஷ்!
பிரகாஷ் சார்.. .நல்லதொரு அலசல். ஆனால் இப்படியெல்லாம் ஒரு திரைப்படத்தை அலசி ஆ(ரா)ய வேண்டுமா என்பதே கேள்வி. எங்க ஊரு ராம்கி சொன்னது போல 'கலை' அது இதுவென்று பம்மாத்து செய்வதெல்லாம் சும்மா ஹம்பக். வேண்டுமானால் விஷயம் தெரிந்து 'ஜூ' காட்டுகிறவர்கள்., அது தெரியாமல் பேந்த பேந்த முழிப்பவர்கள் என்று வேண்டுமானால் இரு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் எதற்காக இப்படி ஒரு வலைப்பூவில் மாங்கு மாங்கென்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? கலைச்சேவை? அடுத்தவரை உங்கள் பக்கம் ஓரிரு நிமிடங்களுக்காவது திரும்பப் பார்க்கச் செய்யும் உத்தி? இரண்டில் உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் அதற்கு வலைப்பூ ஏன் என்ற கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடிய்மா உங்களால்?! இதைவிட அதிகப்படியான மக்களை நேரடியாக உங்கள் பக்கம் திரும்பச் செய்யும் மந்தைவெளி டைம்ஸ், மாம்பலம் டைம்ஸில் உங்கள் கை வித்தையை காட்டலாமே?

ஒரு இராம. நாரயணனையோ, வி.சேகரையோ அவர்களின் படங்களைப் பார்த்து விட்டு இப்படி ஒரு அலசி ஆராய ஒருவரும் முன் வராததற்கு காரணம் என்ன? அவை அப்படியே எதார்த்தத்தை பின்பற்றுகின்றனவா?

'பிரமாண்டம்' என்ற கவர்ச்சியை காட்டி மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்வதில் வெற்றி பெறும் இயக்குநர்களில் ஷஙருக்கு முதலிடம். அவ்வளவு தான். மற்றபடி அவரது திரைப்படங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்லுமென்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர் போகிறானென்றால் அது இயக்குநருடைய தவறல்ல.

எந்த ஒரு நடிகரின் அல்லது இயக்குநரின் அல்லது தயாரிப்பாளரின் படங்களுமே அந்த இரண்டரை மணி நேர மக்களின் நேரத்தை திருப்திப்படுத்துவதற்காக தான் என்பது தான் நிதர்சனமான உண்மை.

என்னுடைய கருத்தில் தவறிருந்தால் (யாரும்) சுட்டிக் காட்டுங்கள்.
Valavan said…
பிரகாஸ்,

நல்ல அலசல்...

ஆனால் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை...

//ஷங்கர் , அடிப்படையில், எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற, சட்டத்தைக் கரைத்துக் குடித்த மாதிரி பாவ்லா காட்டுகிற ஒரு மெடிஒcரெ இயக்குனரின் சிஷ்யபுள்ளை.//
சுரேஷ் கிருஷ்ணா - பாலச்சந்தரின் சிஷ்யபுள்ளை
சேரன் - கே.எஸ் ரவிக்குமாரின் சிஷ்யபுள்ளை

//எங்கள் ஏரியாவில் ரோடு சரியில்லை" என்று லெட்டர் டு தி எடிட்டர் எழுதும் முகலிவாக்கம் ராமச்சந்திரனுக்கும் , பிரச்சனைகளை பூதாகாரமாக விஷ¤வலில் காட்டும் ஷங்கருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?//
கண்டிப்பாக ஒரு இம்பாக்ட் இருக்கும், எத்தனையோ பிரச்சனைகள் "லெட்டர் டு தி எடிட்டர்" மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஷங்கர் எதிர்பார்ப்பதும் அதுதான் எனலாம்.

//திராபையான motion capture உத்தியை ( எனக்கென்னமோ, இது பாரதிராஜாவின் ஸ்லோமோஷன் டெக்னிக் மாதிரிதான் தெரிகிறது ) வைத்து எடுத்த சண்டைகாட்சியையும், தன்னுடைய படத்துக்கு உச்ப் போல ப்ரொஜெcட் செய்வதைப் பார்த்தால், தமிழக மக்களிடம், கலைரீதியாக வெற்றி பெற முடியாது என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் இது போன்ற ·பில்ம் காட்டும் வேலையில் இறங்கியிருக்கிறாரோ என்று ஷங்கர் மீது பரிதாபம் கொள்ளத்தான் தோன்றுகிறது.//

இவையிரண்டுமே தொழில்நுட்ப ரீதியில் சிறந்த காட்சியமைப்பு. அனைவராலும் பேசப்பட்ட (அ) பேசப்படக்கூடியவற்றை ப்ரொஜெக்ட் செய்வதில் தப்பொன்றும் இருப்பதாக தெரியவில்லை.
இதை 'ஃபிலிம் காட்டுவது' என்று விமர்சிப்பதெல்லாம் ஓவர்

மற்றபடி ஷங்கர் ஒன்றும் தான் ஒரு கலை இயக்குனர் என்றோ, சமூகத்திற்கு சேவை செய்வதாகவோ கூறி தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றி வருவதாக தெரியவில்லை...

சந்தோஷ்:

//அது மட்டுமல்ல. M.T.V விளம்பர இடைவேளையில் வரும் துணுக்கு, எனக்கு ஞாபகம் வந்தது.//

Exactly

மாயவரத்தான்:

//ஒரு இராம. நாரயணனையோ, வி.சேகரையோ அவர்களின் படங்களைப் பார்த்து விட்டு இப்படி ஒரு அலசி ஆராய ஒருவரும் முன் வராததற்கு காரணம் என்ன?//

இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
aathirai said…
சமூக அவலங்களை காண்பிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம்
கப்ளிங்க்ஸ் விளையாட்டு, பாய்ஸ் படம் போன்று மட்ட வியாபாரம் செய்வதை விட
மோசமான் HIPPOCRACY இருக்க முடியுமா?
Suresh said…
ப்ரகாஷ்.

அருமையான பதிவு.

ஷங்கரை இந்த அளவுக்கு யாரும் ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள். ஆனால் ஷங்கர் அதற்கு தகுதியானவரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன்.

I would say, you are expecting too much from a director like Shankar...
Icarus,

Wonderful analysis !!! But, wasted on a director like Shankar who is actually a pretty ordinary director !

Without technology, extravaganza and a good dialogue writer, he is just another Ramnarayanan !!!

He simply cannot attain the class of a Balachander, Bharathiraja, Balumahendra or Bhagyaraj. There is not much in terms of screen play or story in any of his movies except INDIAN which was built primarily on Kamal's superb performance.
priya said…
This comment has been removed by a blog administrator.
priya said…
I am new to tamil blogs.

Your post just indicates that anyone can pull down everyone to down-to-earth with using one computer with internet. moreover your post describes the shankar's filmy personality to some extent that also not fully correct.

Shankar was working with pavithran also but doesnot influenced by him. When others are just making nasty films, he is trying to say some message between them. Why don't you try to appreciate that part?
SnackDragon said…
ப்ரகாஷ்.அருமையான பதிவு.
சந்தோஷ், ரோசா வசந்த், பெனாத்தல் சுரேஷ், ராம்கி, சுரேஷ் கண்ணன், பரணீ, அன்பு, யளனகபக கண்ணன் , வளவன், ஆதிரை, சுரேஷ், பாலா, ப்ரியா, கார்த்திக் ஆகிய அனைவருக்கும் நன்றி
///எட் கான்ஸ்டபிளின் மகன், கவர்னரைப் காதலித்து வெற்றி பெறுவது/
:O
காதலிக்கும் பெண்ணின் கைகள் கவர்னர் கைகளா? //

dear post doc birathar.. அது பிழை... யாராவது தற்பாலர் நாட்டக் கதை என்று நினைத்துவிடப் போகிறார்களோ என்று கிலியாக இருக்கிறது.. :-)
//காலக்கட்டங்களில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அழியாத கோலங்களும், கிளிஞ்சல்களும் வேறு காலக்கட்டத்தில் அல்லவா வெளியாயின.//

ராஜ்குமார் , கொஞ்சம் கன்·ப்யூஸ் ஆகிட்டேன்.
//கனவமிழ்ச்சூழல் ( fantasy ) - அருமை (ஞாபகம் வச்சுக்க முயற்சிபண்றேன்:) //

அன்பு : நானே அதை இணையத்தில், யாரோ எழுதிய கட்டுரையில் இருந்துதான் சுட்டேன். யார் என்று நினைவில்லை.
//Rem acu tetigisti!//

கண்ணன் : இது என்ன மொழி? ஏதாவது கெட்ட வார்த்தையா?
மாயவரத்தான் : கேட்டீங்களே ஒரு வார்த்தை... ஏன் வலைப்பூவிலே எழுதறே, பத்திரிக்கைல போய் எழுதன்ன்னு... நானா மாட்டேங்கறேன்.. ஆரும் சான்ஸ் குடுக்க மாட்டங்கறாங்க சார்... :-) சரி... அத்த உடுங்க.. கட்டக் கடேசியா.... நீங்களும் ரஜினி, நானும் ரஜினி... எதுக்கு நமுக்குள்ளே பிரச்சனை...:-) நூறாவது நாளுக்கு என்ன ஸ்பெஷல்.? அதைச் சொல்லுங்க..
//When others are just making nasty films, he is trying to say some message between them. Why don't you try to appreciate that part? //

ப்ரியா : தப்புதான் தாயே... மன்னிச்சுடுங்க... :-)
This comment has been removed by a blog administrator.
aathirai said…
அன்னியன் கதையின் கரு 'Mask' படத்தின் தழுவல் என்று சொல்லலாம். Mask
படத்தின் நாயகனுக்கு பெரிய சமூக வெறுப்பு எல்லாம் இல்லை. ஒரு நிமிடம்
லேட்டா வந்தா சத்தம் போடும் பாஸ், பக்கத்து வீட்டில் கத்திக் கொண்டிருக்கும்
பெண்மணி மேலேல்லாம் கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாது.
Mask அணிந்ததும் அவனுடைய கோபமெல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்டம் போடும்.
அதில் கொஞ்சம் நம்ம ஊர் மசாலா, கிராபிக்ஸ் சேர்த்தால் படம் பிய்த்துக்கொண்டு
ஓடும் என்ற வழக்கமான காப்பியடி பார்முலாதான்.
Rem acu tetigisti
Pronunciation: rem-'ä-"kü-"te-ti-'gis-tE
Etymology: Latin
You have touched the point with a needle : you have hit the nail on the head.
Regards,
Dondu Raghavan
அருமையான பதிவாகியிருந்திருக்கும், சந்திரமுகி இயக்குநரான வாசுவையும் இந்த கிழி கிழித்திருந்தால்.

தலைவர் படம் எப்படி ஒரு சாராருக்கு பொழுது போக்கோ... சங்கர் படமும் ஒரு சாராருக்கு பொழுது போக்கு. தலைவர் படம் பொழுது போக்கிற்கு மட்டுமே என்று நீங்கள்தான் பத்ரி அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டதாக நினைவு. ...தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.
SnackDragon said…
மாட்யவரத்தான்: எந்தப்படத்தையும் யாரும் எவ்வளவு டீட்டெய்லாகவும் எழுதலாம் அது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. மாயவரத்தான் கூட இப்படி பிராகாசை கேள்வி கேட்ட்கலாம்தான். அது இங்கே பிரச்சினை இல்லை, பிரச்சினை, சங்கர் எதை நினைத்து படம் எடுக்கிறார் , எதை வெற்றி என்று நினைத்துக் கொண்டு செயல் படுகிறார். அது உண்மையாகவே வெற்றி பெருகிறதா? அதற்கான கூறுகள் எவை? என்பது பற்றி தான்.

/ அவ்வளவு தான். மற்றபடி அவரது திரைப்படங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்லுமென்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர் போகிறானென்றால் அது
இயக்குநருடைய தவறல்ல. /

இல்லை. பிரச்சினையே , சமூகத்தை திருத்திவிடுவதாக சொல்லி, சமூகம் கேவலமாக் இருப்பதாக சித்தரிப்பதுதான். சமூகம் கேவலத்தை காண்பிப்பதானல் சில் நுண்ணிய காரணங்களை தவறவிடாமல் விடமல் படம் பிடிப்பது. அல்லது அந்த சமூக அவலத்துக்கான காறந்துக்கு படத்தில் போதுமான நேரம் கொடுக்கப்பட்டு போதுமான காறணிகளோடு புனைவது. அது குறயும் போதுதான் விமர்சனம் அதிகமாகிறது.
ராமநாராயணன் படம் நேர்மையானது. சஙரின் அந்நியன் "நேர்மையானதாக" காட்டப்படுவது, போதிய விளக்கங்களும் இல்லாதது.
ரா.சு said…
//கல்லூரி மாணவர்கள், கல்லூரி எலக்ஷன், சத்யம் தியேட்டரிலே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் பார்ப்பது, கலாசேத்திரா நடனப் பள்ளி, சிதம்பரத்தில் நடன விழா//

சத்யம் தியேட்டரிலே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் பார்ப்பது - இந்தியனில் கமல் மனிஷாவிடம் கூறும் வசனமாக வரும், காதலனில் அல்ல என்பது என் நினைவு.

நல்ல அலசல்!.
Vijayakumar said…
பிரகாஷ், கலக்கியிருக்கீங்க. ஆனா ஏன் இந்த திறமை எல்லாம் உங்க தலைவர் படத்தை அனலைஸ் பண்றதுக்கு பயன்படுத்த மாட்டேங்குறீங்க :-)
//பிரகாஷ், கலக்கியிருக்கீங்க. ஆனா ஏன் இந்த திறமை எல்லாம் உங்க தலைவர் படத்தை அனலைஸ் பண்றதுக்கு பயன்படுத்த மாட்டேங்குறீங்க :-)//

அதே! அதே!!

-மதி
//திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒருத்தர், சமூக விஞ்ஞானி வேஷத்தை போட்டுக் கொண்டால் என்ன ஆகும்? அன்னியன் மாதிரியான ஒரு திரைப்படம் தான் நமக்குக் கிடைக்கும்.//

ஆஹா நம்ம டிஸ்கஷன் அழகா வந்திருக்கு. போட்டுத்தாக்குங்க. ஆனா, ஷங்கருக்காக இவ்வளவு நேரம் செலவழிக்கணுமா.
டோண்டு சார்... இப்ப நம்பறேன்... நீங்கதான் ஒரிஜினல் டோண்டு... (விளக்கத்துக்கு நன்றி )
Mookku Sundar said…
இப்பதான் பாத்தீங்களா..??

பாய்ஸ் குடுத்த அடிக்கு அப்புறம் எடுத்த படம்கிறதால சங்கர் ஏற்கனவே கொடுத்த அல்வா எல்லாத்தையும் கிண்டி அதுக்கு "விக்ரம்" ட்ரெஸ்ஸிங் போட்டு குடுத்திருக்கார்.

படம் ஓடுதே பெரகாசு. அதுதானே தமில்நாட்டுல முக்கியம்...:-)
//சத்யம் தியேட்டரிலே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் பார்ப்பது - இந்தியனில் கமல் மனிஷாவிடம் கூறும் வசனமாக வரும், காதலனில் அல்ல என்பது என் நினைவு.//

ரா.சு : பிரபுதேவா ஒரு காட்சியில், எஸ்.பி.பியிடம், சத்யம் தியேட்டர், முதல் காட்சி, ஸ்பீல்பர்க் படம் என்று ஏதோ ஒரு வசனம் பேசுவார். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்று நினைத்துக் கொண்டேன் போலிருக்கிறது.
//ஆனா ஏன் இந்த திறமை எல்லாம் உங்க தலைவர் படத்தை அனலைஸ் பண்றதுக்கு பயன்படுத்த மாட்டேங்குறீங்க :-) //

விஜய் : தலைவர் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர் :-) சீரியஸா சொல்லணுமின்னா, ரஜினிகாந்த், நாட்டை திருத்தறேன்னு படம் எடுத்தா, எதிர்குரல் குடுக்கிற மொத ஆள் நானாகத்தான் இருப்பேன்.
//அதே! அதே!!

-மதி //

மதி : என்ன அதே, அதே? :-) விஜய்க்கு சொன்னதுதான் உங்களுக்கும். அது இருக்கட்டும், என்ன "முக்கியமான காலகட்டத்துலே" போனவாரம் முழுக்க அப்ஸ்காண்ட் ஆயிட்டீங்க..? :-)
நாராயண் : கொஞ்சம் சாஸ்திதான் இல்லே? உடுங்க.. வியாழக்கிழமை ராத்திரி காம்பன்ஸேட்
செஞ்சிடுறேன் :-)
//மதி : என்ன அதே, அதே? :-) விஜய்க்கு சொன்னதுதான் உங்களுக்கும். அது இருக்கட்டும், என்ன "முக்கியமான காலகட்டத்துலே" போனவாரம் முழுக்க அப்ஸ்காண்ட் ஆயிட்டீங்க..? :-)//

சொந்த வேலை பிரகாஷ். அப்படியும் மன்றத்தில் எழுதியிருந்தேனே...

கீறல் விழுந்த ரெக்கார்டு போல புரிந்துகொள்ளாமல் எழுதுவதற்கு ஒன்றும் செய்யமுடியாது பிரகாஷ்.

உதா: மன்றத்தில் நான் ப்ளாக்கருக்கு எல்லோரையும் எழுதச் சொல்லியிருந்தேன். ஷ்ரேயா எழுதி மன்றத்திலும் இட்டிருந்தார்.

எனிவே, வேற விதயம் பேசுவோம்...

சென்னை எப்படியிருக்கு. சென்னையில் சுத்திட்டிருக்கிற சாமி/ஆசாமிங்க கொஞ்சம் காமெராவில புடிச்சிப்போடலாம்லா?

-மதி
SnackDragon said…
ஐ மதி, என்ன தமிழ்-ல எல்லாம் எழுதுறீங்க? ;-)
This comment has been removed by a blog administrator.
//At 12:24 AM, -/பெயரிலி. said...
This post has been removed by the author.//

அதே அதே...( இந்த வார்த்தையை யாராவது காப்பிரைட் பண்ணிருந்தா, ராயல்ட்டி கட்டியே போண்டியாயிருப்பேன்.)

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி படிச்சது... அப்படியே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு..கோவர்த்தனா... யாருப்பா நீ? எங்கே இருக்கிறே...

Dear போஸ்ட் டாக்( ஜி இல்லை சி) பிரதர், சூப்பரா ஒரு பதத்தைக் கொடுத்ததுக்கு நன்றி...

அதிருக்கட்டும், இணைப்பு கொடுத்தா திருத்தமா கொடுக்கறதில்லையா? அவனவன் டிசுக்கிலே போய் எப்ப்டித் தேடறதுன்னு முடியைப் பிச்சுக்குவானல்லோ? சுத்தமான இணைப்பு இங்கே
பிரகாஷ்,

கோவர்த்தனனை டொராண்டோவில் சந்தித்தேன். அவருடைய பதிவில் சேகரித்து வைத்திருக்கும் விதயங்களைப்பற்றி சொல்ல நினைத்து மறந்துபோனேன்.

மொழிபெயர்ப்புப் பட்டறையில் தூக்கம் வரும் மதியவேளையில் எல்லோரையும் விழித்திருக்கச் செய்த சாமர்த்யர்! ;)

போட்டோவும் பதிவும்:

http://mathy.kandasamy.net/musings/2005/06/20/218

-மதி
//போட்டோவும் பதிவும்:

http://mathy.kandasamy.net/musings/2005/06/20/218//

அட...எப்படியோ கவனிக்கத் தவறியிருக்கிறேன். இணைப்புக்கு நன்றி மதி.
பதிவைவிட மாயவரத்தாருடன் செய்து கொண்ட சமரசம் கலக்கல் ;-)
Vijayakumar said…
//விஜய் : தலைவர் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர் :-) சீரியஸா சொல்லணுமின்னா, ரஜினிகாந்த், நாட்டை திருத்தறேன்னு படம் எடுத்தா, எதிர்குரல் குடுக்கிற மொத ஆள் நானாகத்தான் இருப்பேன்.//

அடேடே!! இதுவரை ரஜினி நாட்டை திருத்தலியோ? ரஜினி மக்கள் ரட்சகர், மக்கள் கடவுள் என்று சொல்லி சொல்லி படம் எடுத்து நாட்டை திருத்தலாமோ?

அண்ணாச்சி, இத நான் சொல்லல... எல்லாரும் சொல்றாங்க :-))))
inomeno said…
//aathirai said...
அன்னியன் கதையின் கரு 'Mask' படத்தின் தழுவல் என்று சொல்லலாம்.
//

We don't have to see the 'Mask' film too..
In cartoon channel we can see that daily.

That much talked fight with Prakashraj where Vikram changes from one personality to another is done in Mask in almost all serial.
Vijayakumar said…
சமூக (காவல்)தெய்வமும், பக்தர்களும்

இதை க்ளிக்கி பார்க்கவும்.

சமூகத்தலைவரும் (தெய்வமும்), பக்தர்களும் -1
சமூகத்தலைவரும் (தெய்வமும்), பக்தர்களும் -2
நல்ல எழுதியிருக்கீங்க ப்ரகாஷ். எனக்கு பிடிச்ச சமுராய் படத்தின் பெயரை பார்த்தது ஒரு குட்டி சந்தோஷம். இந்த படத்தை எடுக்க சங்கர் பெரிசா மெனக்கெடவே இல்லைன்னு தான் பார்த்த உடனே தோணின முதல் விஷயம்.
சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்...

இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... தயவு செய்து இந்த ஒரு முறை கண்டுக்காதீங்க...
ரம்யா நாகேஸ்வரன் : இந்த பேரை கல்கிலே அடிக்கடி பார்த்திருக்கிறேன். நீங்கதானா அது? வாங்க... உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
Unknown said…
ப்ரகாஷ்,

நீங்கள் முன்பு பாய்ஸ் படம் பார்த்துவிட்டு வந்து சுடச்சுட எழுதின விமர்சனத்தை தேடிப் பார்க்கிறேன், கிடைக்கவில்லை. அது உங்களிடம் இருக்கிறதா?
//பாய்ஸ் படம் பார்த்துவிட்டு வந்து சுடச்சுட எழுதின விமர்சனத்தை தேடிப் பார்க்கிறேன், கிடைக்கவில்லை//

KVR, மரத்தடியிலே மட்டும் எழுதினதா நினைவு. எந்தத் தலைப்பில் எழுதினென் என்பதும் நினைவில்லை. கிட்டதட்ட ஒரு மணிநேரம் தேடியும் கிடைக்கவில்லை. ஏன் என்ன திடீர்னு பாய்ஸ்?
வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!
Prakash,

FYI please !
http://balaji_ammu.blogspot.com/2005/07/sparkling-century-by-cm.html
Unknown said…
//ஏன் என்ன திடீர்னு பாய்ஸ்?//

இன்னைக்கு "பாய்ஸ்" படத்தை யதார்த்தத்திற்கு அருகில்ன்னு சொல்றவரு அன்னைக்கு பாய்ஸை பிச்சிப் போட்டு அதுக்கு முன்னாடி வந்த படங்களின் எக்ஸ்பெக்டேஷனோட போய் பார்த்து ஏமாந்த கதை மாதிரி எதோ சொன்ன ஞாபகம். அதான் பழசை கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிட்டு இப்போ வந்து எதுனா சொல்லலாம்ன்னு நினைச்சேன்.

மரத்தடி பக்கம் தேடியும் கிடைக்கலை பிரகாஷ். என்னுடைய பழைய மின்னஞ்சல்களில் கிடக்கலாம், அவற்றை எல்லாம் மூட்டை கட்டி ஒரு குறுவட்டில் போட்டுவிட்டேன். பொறவு தான் தேடோணும்.

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்