[ ஸ்பாய்லர் உண்டு ] நிஜ வாழ்க்கை நாயகர்கள் மீது மணிரத்னத்துக்கு இருக்கும் பிரேமை அலாதியானது. வேலுநாயக்கர், ஆனந்தன், தமிழ்ச்செல்வன் என்று நிழல் உலகத்தில், வரதராஜ முதலியார்,எம்ஜி.ஆர்.கருணாநிதி போன்ற்வர்களுக்கு அச்சு அசலான பிரதியை உருவாக்குவதில் மணிரத்னம் சில சமயங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். குரு படத்தில், அவர் முயன்றிருப்பது, இந்திய வர்த்தக உலகத்தில் கொடிகட்டிப் பறந்து மறைந்த தீரஜ்லால் ஹீராலால் அம்பானியின் செலூலாய்ட் பிரதியை. கட்டுபடுத்தப்பட்ட பொருளாதாரத்தில் வர்த்தகத்தைத் துவக்கி, வெற்றிகரமாக நடத்தி, பின்னர் தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திலும், வெற்றி வாகை சூடியவர் அம்பானி. அவர், 'நல்லவை' என்று அகராதி குறிப்பிடும் அர்த்தத்துக்கு ஈடான கொள்கைகளை வைத்திருந்தவர் இல்லை என்றாலும், அதே அகராதி, 'சாமர்த்தியம்' என்று குறிப்பிடும் அர்த்ததுக்கு ஈடாக குணங்களைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட, நல்லவரா கெட்டவரா என்று எளிதிலே கணிக்க முடியாத அம்பானியை, கதையை வைத்து கதை பின்னுவது, அப்படி ஒன்றும் கம்பசூத்திரமல்ல, மணிரத்னத்துக்கு, நிஜத்திலே, ஏடன் செல்லும் அம்பானியை, திரையில் துருக்
Comments
இலங்கையில் தான்
"ம்" என்றால் வன வாசம்
"ஏன்" என்றால் அஞ்ஞாத வாசம்.
வாத்தியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
"ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை"