மிக்ஸர் - I
* பாரிஜாதம் படம் பார்த்தேன். பாக்யராஜ் பழைய ஃபார்முக்கு வந்துட்டார். தொடர்ந்து, ரவுடியிசம், தாதாக்கள், அரிவாள் வெட்டு குத்து என்று படங்களாகப் பார்த்து பார்த்து, உடம்பெல்லாம் ஒரே ரத்த வாடை. பாரிஜாதம் பார்த்ததும் வாடை போயே போச்சு. பாக்யராஜின் பழைய, 'விடியும் வரை காத்திரு', 'தூறல் நின்னு போச்சு', இன்று போய் நாளை வா' போன்ற படங்களின் திரைக்கதை அமைப்புக்கு கிட்டக்க கூட வரமுடியாது என்றாலும், இந்த காலகட்டத்திலே ஒரு மாறுதலான படம். கிளிஞ்சல்கள் படத்தில் வந்த பூர்ணிமா ஜெயராமுக்கு கொஞ்சம் காத்தடித்து, முகத்திலே கருப்பாக மேக்கப் போட்டால், அவர் தான், சரண்யா பாக்யராஜ். ஒருதரம் பார்க்கலாம். அதாவது, படத்தைச் சொன்னேன்.
* என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய புத்தகம் ஒன்றை வாசித்தேன். கிழக்குப் பதிப்பகத்தின் முத்துராமன் எழுதியது. ( இந்த மாதிரி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களுக்கு என்றே, ஒரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது). நல்ல சுவாரசியமான புத்தகம். குழப்பாமல் கோர்வையாக,ஒரே வாசிப்பில் முடித்துவிடுகிற மாதிரி எழுதியிருக்கிறார் முத்துராமன். அதிலே இருந்த தகவல்கள் நான் முன்னர் அறியாதவை. ஆகவே, எனக்கு பயனுள்ள புஸ்தகம்.
* மிஷன் இம்பாசிபிள் 3 படம் பார்த்தேன். டாம் க்ரூய்சு, இதிலும் ஈதன் ஹண்ட் ஆகத்தான் வருகிறார். ( நோட் டு மைசெல்ஃப் : மடையா, சிக்வெல் படம்னா, ஒரே பேர்லதான் வருவாங்க). வாடிகன் நகரத்திலே, ராபிட்புட் என்று, ஈகிள் ப்ளாஸ்க் சைசுக்கு ஒரு ரகசிய சமாசாரம் இருக்கிறது. அதை IMF ( International Monetary Fund இல்லை, Impossible Mission Force ) ஏஜண்ட் ஈதன் ஹண்ட், தன் கூட்டாளிகளுடன் போய், மீட்டுக் கொண்டு வருகிற படு பயங்கர ஆக்சன் பிக்சர். நிறைய காட்சிகளில், கன்னா பின்னா என்று காதிலே பூசுத்தினாலும், பார்க்க ஜாலியாக இருக்கிறது. இதையே கேப்டன் விஜயகாந்த் செய்தால், கிளிப்பிங்கை youtube இலே போட்டு, மெயில் அனுப்பி கும்பலா ஒக்காந்து சிரிக்கிறாங்க. டாம்க்ரூய்சுக்கு ஒரு நியாயம்,காப்டனுக்கு ஒரு நியாயமா? இது என்ன பாரபட்சங்கறேன்... கடைசி காட்சியிலே, நாயகி, துப்பாக்கியால் வில்லனைச் சுடுவதற்கு பதிலாக, நாயகன் மீது குறி வைத்து, ஹஹ்ஹாஹ்ஹா என்று வில்லி சிரிப்பு சிரிப்பார் என்று நினைத்தேன். இல்லை. ( நோட் டு மைசெல்ஃப் : நீ பாக்கிறது ஜேம்சுபாண்ட் படமல்ல )
* காலேஜ் ரோட்டின் ஆரம்பத்தில் ( அதாவது பாந்தியன் சாலையில் இருந்து வரும் போது ), ஐதராபாதி பிரியாணி சென்டர் என்று ஒரு சாப்பாட்டுக் கடை இருக்கிறது. முன்னே பின்னே,
ஐதராபாதி பிரியாணி சாப்பிட்டதே இல்லை என்பதால், உள்ளே போய் மெனுகார்டை பார்த்தால், ஃபிஷ் பிரியாணி என்று ஒரு ஐட்டம் இருந்தது. கேள்விப்பட்டதே இல்லை என்பதால், ஆர்டர் செய்தேன். ஒரு கிண்ணத்திலே பிரியாணியை நிரப்பி, அதன் மீது ஒரு மீன் துண்டை வைத்து இதான் அது என்று சொன்னார், பரிசாரகர். 'இன்னாயா வெள்ளாட்றீங்களா?' என்று கேட்கவில்லை. கமுக்கமாகச் சாப்பிட்டு விட்டு வந்தேன். ரொம்ப டேஸ்டியாக இருந்து என்பது வேற கதை..
* ஆர்.கே.நாராயண் எழுதின 'மால்குடி டேஸ்' தொலைக்காட்சியிலே தொடராக வந்த போது, அதை எத்தனை பேர் பார்த்து ரசித்தார்கள் என்று தெரியவில்லை. அதே சீரியல் இப்போது போகோ சானலில், மதியம் 12 மணிக்கு மீளவும் ஒளிபரப்புகிறார்கள். பார்த்த காலத்திலும், பின்னர் திரும்ப பார்த்த காலத்திலும் மனதைக் கொள்ளை கொண்ட தொடர். சங்கர் நாக், அனந்த் நாக்,அருந்ததி நாக், கிரீஷ் கர்னாட், சுரேஷ் அர்ஸ் என்று, கன்னடத் திரையுலகின் தேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய சின்னத்திரை காவியம் இது என்றால் அது மிகை இல்லை. மால்குடி டேஸ்க்கு என்று தனியாக இணையத்தளம் இருக்கிறது. அங்கே, எபிசோட்களை எழுத்திலே படிக்கலாம். இன்னும் பல தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். அதை விட முக்கியமாக,இப்போது, சீரியல் மொத்தமும் டீவிடி வடிவில் கிடைக்கிறது.
என்று திருவாய் மலர்ந்திருப்பவர்,ராஜ்தீப் சர்தேசாய்.24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளின் வீச்சை பற்றி எழுதும் போது சொன்னவைதான், இவை. ( இதையும் கொஞ்சம் பார்த்துடுங்க)
மேலும் அவர் சொல்வது,
ஒழுங்காக இருப்பவர்கள் எல்லாம், ஒரு பீடத்தில் போய் அமர்ந்ததும் ஏன் இப்படி மூளையைக் கழட்டி வைத்து விடுகிறார்கள் ?
( அடுத்த வாரம்...)

"...the Babri Masjid would never have been demolished if 24 hour news television had been at hand to cover the activities of the kar sevaks.The unblinking gaze of a vast army of cameras and reporters would have exerted enormous pressure on the then prime minister Narasimha rao and he would have been forced to act. Surrounded by ceaseless pictures of TV news, Rao could just not have claimed that he "didn't know" the true intent of the Hindutva activists..."
என்று திருவாய் மலர்ந்திருப்பவர்,ராஜ்தீப் சர்தேசாய்.24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளின் வீச்சை பற்றி எழுதும் போது சொன்னவைதான், இவை. ( இதையும் கொஞ்சம் பார்த்துடுங்க)
மேலும் அவர் சொல்வது,
"...Kargil was India's first television war. Gujarat was India's first television riot. Agra was the first television diplomatic summit and Kandahar was the first television hijack. And now the anti-reservation protests have become India's first multi-media public protest. Its not just the TV cameras, there are also smses and chain emails circulated to show solidarity.Citizens groups have organized media events..."
ஒழுங்காக இருப்பவர்கள் எல்லாம், ஒரு பீடத்தில் போய் அமர்ந்ததும் ஏன் இப்படி மூளையைக் கழட்டி வைத்து விடுகிறார்கள் ?
( அடுத்த வாரம்...)
Comments
பிரகாஷ்ஜி,
ஆற்காடு சாலைல சார்மினார் படமெல்லாம் போட்டு ஒண்ணு இருக்கு. அப்படி இப்படி நெறைய ஹைதராபாதி பிரியாணிக் கடைங்க வந்துருச்சு.
கொஞ்சம் எண்ணெய் தூக்கலா இருக்கணும், பட்டையெல்லாம் வெட்டாம அப்படியே முழுசாப் போடணும், இன்னும் கொஞ்சம் ஸ்பெசிஃபிகேஷன் இருக்கு :)
ஹைதராபாதி பிரியாணி பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துல இதுக்கு முன்ன ரெண்டு எடத்துல படிச்ச, கேட்ட ஞாபகம்.
விகடன்ல ஆற்காடு இளவரசர் நவாப் அப்துல் அலியோட கிச்சன்ல அவரு பட்லராட்டம் நிக்கிற போட்டோ போட்டு, அவரு ஹைதராபாதி பிரியாணி செய்றதுல எக்ஸ்பர்ட்டுன்னு போட்டிருந்த ஞாபகம்.
குருதிப்புனல்ல, கமல்கிட்டக்க மேடம் 'என்னங்க பக்கத்து வூட்லேர்ந்து ஹைதராபாதி பிரியாணி வந்திருக்கு'ன்னு சொன்ன ஞாபகம்.
ஃபிஷ் பிரியாணின்றது ஹைதராபாத் பாரம்பரியம் கெடையாது. அது கடைக்காரங்க அடிக்ற உட்டாலக்டி.
அன்புடன்
ஆசாத்
//ஒருதரம் பார்க்கலாம். அதாவது, படத்தைச் சொன்னேன். //
அது சரி.
//டாம்க்ரூய்சுக்கு ஒரு நியாயம்,காப்டனுக்கு ஒரு நியாயமா? இது என்ன பாரபட்சங்கறேன்...
//
அதானே.. சொல்லப்போனா.. தமிழ் படத்தை விட ஆங்கில படத்துல முழம் முழமா சுத்துவாங்க.. ஒரு ஜேம்ஸ்பாண்டு படத்துல அவர் ஒரு ஏரோபிளேன்ல இருந்து குதிச்சு பாரசூட் கூட இல்லாம இன்னொண்ணை பிடிச்சுடுவார். நம்மாளுங்க அதையெல்லாம் ஆன்னு பாத்துட்டு கேப்டன் கையசைச்சா வில்லன் எகிறி விழறதைப்போய் கிண்டல் பண்ணுவாங்க.
//'இன்னாயா வெள்ளாட்றீங்களா?' என்று கேட்கவில்லை//
பிஷ் ஓவர் பிரியாணின்னு தானே பேர் வெச்சிருக்கனும்கிறேன். விடாதீங்க. அடுத்ததடவை கேட்டுருங்க.
அப்புறம் பயர்பாக்ஸூல உங்க பதிவு ஒடைஞ்சுபோய் தெரியுது. இதை படிச்சுட்டு சரி செஞ்சுடுங்க.
http://thamizmanam.com/tmwiki/index.php?id=firefox
அதாவது, டெம்ப்ளேட் மாத்தும் போது, அதை மட்டும் கவனிக்காம விட்டுட்டேன். சரிபண்ணிட்டேன்
யுபி தர்ஷன் : தொட்டில் பழக்கம்.... :-)
மாத்திக்கிடுறேன். நன்றி
Govindaraj Ethiraj seems to have moved from CNBC TV18 into Business standard. His blog here
http://datelinebombay.blogspot.com/2006/06/fighting-government-to-survive.html
just for info.
இறந்த டைரக்டர் சங்கர்நாக் நினைவில் வருகிறார்.
இன்னொரு தகவல் ப்ளீஸ், சந்திரபாபுவைப் பற்றி கிழக்குபதிப்பகம் புத்தகம் போட போகிறார்கள் என்ற செய்தி வந்ததே,
புத்தகம் வெளிவந்தாகிவிட்டதா?
சந்திரபாபு வந்தாச்சே... நான் படிச்சுட்டு, ஏதோ கிறுக்கின மாதிரி நினைவு. ஞாபகம் இல்லே
இதெல்லாம் பரவாயில்லை. வசந்த பவன் துபாய் கிளையில், ஒரு முறை இன்றைய ஸ்பெஷ்ல் 'மீன் கட்லெட்'னு போட்டிருந்தான். என்னப்பா இது சைவ ஓட்டலில் மீன் எல்லாம் போடறீங்கன்னு கேட்டா, அவன் சொல்றான் - மீன் வடிவத்திலே இருக்கும் கட்லெட்டாம்! இதுக்கு நீங்க சாப்பிட்டது எவ்வளவோ மேல்!
இங்கே வந்தேன். இது வேற ஒரு மிக்ஸர்.
நல்லா இருக்கு.
அப்புறம் வளர்ந்துவரும் எழுத்தாளர் முத்துராமனின் எழுத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம்.
சின்ன வயசிலே, ஊரில் இருந்து வரும் போது, பாட்டி முந்திரிப்பருப்பு பிஸ்கட் என்று ஒரு ஐட்டத்தை வாங்கிக் கொண்டு வருவார்கள். முந்திரியெல்லாம் போட்டிருக்காது. பிஸ்கெட்டின் வடிவம், முந்திரிப்பருப்பு மாதிரி இருக்கும். அதுக்கு இது எவ்ளவோ பரவாயில்லை :-)
இந்த மிக்ஸ்ரோட எனக்காக இன்னொரு மிக்ஸர் போடுங்க..
http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_19.html
மால்குடி டேய்ஸ் லின்குக்கு நன்றி.