No Subject

காலையில் எழுந்து கணிணி முன் அமர்ந்த பொழுது, பார்வையில் பட்ட முதல் இடுகை இது...

பல வருடங்களுக்கு முன்னால், கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த போது, ஒரு விபத்திலே நண்பன் ஒருவனை நாங்கள் பறி கொடுத்தோம். ( சரியாக பத்து வருடங்கள் கழிந்து, அதே தினத்தில், மற்றொரு துயரச் சம்பவம் நடந்தது ஒரு tragical coincidence) அவனுக்கு பிடித்த பாடல் இது. பறி கொடுத்த சில மாதங்களில், கல்லூரி culturals நிகழ்ச்சியின் போது, அவனுடைய நினைவாக, இசைக்குழு, இந்தப் பாடலை பாடிய போது, ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தையில் வடிக்க முடியாது. இப்போதாவது, கொஞ்சம் வயசு ஏறிப் போய், பக்குவம் வந்து விட்டது. ஆனால், இருபதுகளின் துவக்கத்தில், உணர்ச்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இந்தப் பாட்டை கேட்கிற போதெல்லாம், ஒரு பியர் சாப்பிட்டால் தான் ஆச்சு என்கிற மாதிரி ஆகிவிடும்.

கடந்த ரெண்டு நாளாக ஒரு ( பர்சனல்) crisis. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழுந்துகிட்டு, சத்தமா தொலைபேசியிலே பேசிக்கிட்டு, வெள்ளமாக 'ஊதி' தள்ளிக்கிட்டு இருந்து, இன்னிக்கு காலையிலே ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பாட்டை கேட்ட போது, அலம்பித் துடைத்து விட்டது மாதிரி பளிச்சென்று ஆகிவிட்டது. (பிரச்சனை தீந்துதா இல்லையாங்கறது வேற விஷயம்)

" நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை...
ஒரு வாசல் மூடி
மறுவாசல் வைப்பான் இறைவன் "


வார்த்தைகள்!

மயக்கும் இசைக் கோர்வையில், நேர்த்தியான தாளக்கட்டில், கிறங்கடிக்கும் குரலில் உச்சரிக்கப் படும் இந்த வார்த்தைகளுக்குத் தான் எத்தனை வீரியம்....

நன்றி சுந்தர்...you made my day.

Comments

என்ன தலை ஆளையே காணோம், பிசியா ;)
அத்த யான் கேக்கற நைனா..பீக் அவர் 12B பஸ்ஸ¤ மேரி ஆய்பூட்சி வாய்க்கை :-)
Mookku Sundar said…
//அத்த யான் கேக்கற நைனா..பீக் அவர் 12B பஸ்ஸ¤ மேரி ஆய்பூட்சி வாய்க்கை :-) //

பீக் அவர்ல 12-பி கெடைச்சதே பெருசுப்பா...இன்னம் ரெண்டு பியர் + ஒரு பாக்கெட் கிங்ஸ் வுடுங்க. எல்லாப் பிரச்சினையும் சரியா பூடும் ;-)

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்