Prakash's Chronicle

ஜாகை மாத்தி ரொம்ப நாளாச்சு... புது வீட்டுக்கு வாங்க

Friday, May 27, 2005

 

ஆண்கள் பெண்கள்

இந்த வாரம் குமுதத்தில் ஜெயமோகனின் பத்தி வாசிக்கச் சுவையாக இருந்தது. சில சிந்தனைகளைக் கிளப்பி விட்டது.

வாசக நண்பர் ஒருவர், தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைக்கதை ஒன்றைப் பற்றி எழுதியிருந்தார். அயல்நாட்ட்டில் வசிக்கும் இளம் தம்பதியருக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு முற்றுகிறது. விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்கின்றனர். அப்போது, நீதிமன்றம், விவாகரத்து கிடைக்கும் வரை, அதாவது மூன்று மாதங்கள் வரை அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என்று உத்தரவிடுகின்றது. கணவனுக்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. புதுமையாக எதையாவது செய்யலாம் என்று நினைத்து , ஒரு பெண்ணின் புனைப்பெயரைக் கொண்டு, இணைய அரட்டை செய்கிறான். அங்கே ஆண் அடையாளத்தில் இருக்கும் ஒருத்தருடன், பெண் என்ற பாவனையில், சகஜமாக உரையாடுகின்றான். அவன் ஒரு கணிப்பொறி வல்லுனன். அந்தப் பொய்ப் பெயரில் வருவது அவன் மனைவிதான் என்று தெரிந்து விடுகிறது. இருந்தாலும், அந்த கண்ணாமூச்சி விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றான்.

தன்னை ஒரு பெண்ணாக பாவிக்கும் போது, மனைவியைப் பற்றியும், அவளுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், அதை தான் கண்டு கொள்ளாமல், தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது பற்றியும் அவனுக்குப் புரிகிறது. மனைவிக்கும் அங்கனமே தோன்றுகிறது. விவாகரத்து கிடைக்கின்ற நாள் என்று, கணவன் மனைவியிடம், உண்மையைச் சொல்லி விடுகிறான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, காதலாகிக் கசிந்து நீர்மல்க அணைத்துக் கொள்கிறார்கள் என்கிற இருவர் உள்ளம் தொடங்கி, நெஞ்சத்தைக் கிள்ளாதே வழியாக மௌனராகம் வரையில் வந்த அர்தப் பழசான கிளைமாக்ஸ்தான் என்றாலும், இதற்கு பின், ஜெயமோகன், அந்த திரைக்கதை அனுப்பிய நண்பருடன் நடத்தியதா எழுதிய உரையாடல் சுவாரசியமானது.

"இது திரைக்கதையே அல்ல. வெறும் திரை வசனம். கதையும் அப்படி ஒன்று இயற்கையாக இல்லையே..." என்றிருக்கிறார் ஜெயமோகன்.

அதற்கு அந்த நண்பர் கோபமாக " ஆணும் பெண்ணும். கொஞ்ச நேரமாவது மற்றவர் உலகுக்குள் நுழைந்து பார்த்தால், பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற முக்கியமான கருத்தைச் சொல்லி இருக்கிறேன்" என்றாராம். அதற்குப் பிறகு ஜெயமோகன் என்ன கேட்டார், அதற்கு அந்த நண்பர் என்ன சொன்னார் என்பது நமக்கு வேண்டாம்.

ஆணும் பெண்ணும் கொஞ்ச நேரமாவது மற்றவர் உலகுக்குள் நுழைந்து பார்த்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், அப்படி நுழைந்து பார்க்க முடியுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

இதன் தொடர்ச்சியாக, அனுபவத்தின்பாற்பட்ட சில கேள்விகளும் சிந்தனைகளும் எனக்கு உண்டு. எழுதலாமா வேண்டாமா என்று இன்னமும் முடிவு செய்ய வில்லை.

Comments:
I remember one of Sujatha's short story in the early 90s. Roughly the story goes something like this: Husband tries a dating with an unknown woman and they agreed to meet in a place and he asks her to wear a rose.

I don't remember after that but when he comes home he sees that rose along with his wife's sari.

Looks like JMo's friend's story is also like that(inspired?)
 
ராஜ்,

கதை பேரு 'நீலப்புடவை ரோஜாப்பூ".

பிரகாஷ், எதுக்கு யோசிக்கணும். தாராளமா எழுதலாம். நாராயணின் நட்சத்திர வார ( கடைசி நாள்) பின்னூட்டத்தில் சொன்னபடி, "தமிழ்மனம் வயசுக்கு வந்து நாளாச்சு"..!! எழுதுங்க. நானும் ஜோதியில் கலந்துக்கறேன். மேல்சாதி, கீழ்சாதி வித்தியாசம் இல்லாம மனுசஜாதி பூராவும் இருக்கற ஒரே பிரச்சினை இதுதான்.

" ஆறு அது ஆழமில்ல..blah blah blah"

"Men are from Mars. women are from venus" படிச்சிருக்கீகளா..??
 
//I remember one of Sujatha's short story in the early 90s//

நீலக்கலர் புடவை என்று ஏதோ தலைப்பில் வாசித்திருக்கிறேன், கல்கியில்...
 
//பிரகாஷ், எதுக்கு யோசிக்கணும். தாராளமா எழுதலாம். //

ஹ்ம்ம்ம்... எழுதறேன் :-)

//"Men are from Mars. women are from venus" படிச்சிருக்கீகளா..?? //

படிச்சதில்லை. இதை, தமிழில் ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்த்து, ஒரு பத்திரிக்கையில் தொடராக எழுதினார். பார்த்திருக்கிறேன்.
 
இந்தக் குட்டிக்கதை ரேவதியின் "My Friend Mithra" வின் சாயலிலும் இருக்கின்றது. இந்தப் பிரச்சனை ஆண் பெண்ணுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லாப் பிரச்சனைக்கும் பொருந்தும் என்றே நம்புகின்றேன். மேல் சாதிக்காறன் கீழ் சாதிக்காறனைப் புரிவதற்கும் இது தேவைதானே. ஆனால் சாத்தியமற்ற ஒன்று என்பது மட்டும் உண்மை. அது சரி பிரகாஷ் ஏதோ சுவாரஸ்யமாக எழுதப் போகின்றீர்கள் என்று மட்டும் தெரிகிறது. நாங்கள் வாசிப்பதற்கு ரெடி நீங்கள் எழுத ரெடியா? இருந்தாலும் அல்வா அளவிற்குப் போய் விடாதீர்கள்.
 
CLOSER
 
குழந்தைகளற்ற "ஆண்கள் பெண்கள்" + ஜெயமோகன் . நல்ல நகைச்சுவைக்கிறீங்க.
பத்ரி இந்தப் பக்கம் வரமாட்டார் இல்ல. ஜூலியா ரப்பர்ஸ் -ஐ எனக்கு அவ்வளாவா பிடிக்காது. அதனால க்ளோசர் இன்னும் பாக்கலை. பார்க்கிறேன் மாண்டி. நன்றி.
 
பாண்டு கொன்ற மான்களாகிப் புணர்ந்த முனிவர்+முனிபத்தினி, விஷ்ணுவின் மோஹினி அவதாரமும் ஐயப்பன் அவதரிப்பும் கூடு விட்டுக்கூடு பாய்ந்த திருமூலன் - இப்படியாக புராணக்கதைகளிலே இந்த மாதிரியான சோதனைகள் நடத்தின கதாசிரியர்கள் வந்து கதைக்கரு நாங்கள்தான் மலையாளத்திலிருந்து தமிழுக்குத் திருடித் தழுவி விட்டார்கள் என்று வழக்குப் போடமாட்டார்களென்ற துணிவுதான் எல்லாம் ;-)
 
//குழந்தைகளற்ற "ஆண்கள் பெண்கள்" + ஜெயமோகன் . நல்ல நகைச்சுவைக்கிறீங்க.
பத்ரி இந்தப் பக்கம் வரமாட்டார் இல்ல.//

கதிர்காமா... : ஒண்ணும் புரியலியே.. ஏன் பத்ரி இங்கே வந்தா என்ன ஆகும்?
 
ரமணி : ???????

எழுதின வாசகர் ஆருன்னே உங்களுக்குத் தெரியாதே? அப்புறம் எப்படி இந்த கமெண்ட்டு? ஒருவேளை, தன்னுடைய கதையையே, வாசகர் ஒருத்தர் எழுதினதாச் சொல்லி, ஜெமோ வெள்ளோட்டம் பார்கிறார்னு நினைச்சுட்டீங்களோ?

கறுப்பி, தமிழ்பாம்பு, நன்றி
 
கண்டிப்பாக மற்றவர் உலகத்தில் நுழைந்து வாழ்ந்து பார்ப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சாத்தியமே என்று எண்ணுகிறேன். எழுதும் ஆர்வம் உடையவர்களுக்கு இது அவசியமே என்பதும் சொல்ல வேண்டும்.
 
நுழைந்து பார்க்கிறதெல்லாம் முடியும் தான். பார்க்க எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு. பார்த்துப் புரிந்து கொண்டதை சீக்கிரம் மறந்தும் போயிடறோம்.

நிர்மலா.
 
ஐயகோ.. ஜோக்கு-க்கு விளக்கமா?
பத்ரி , ஜூலியா ரோபர்ட்ஸ் விசிறி என்பது உங்களுக்கு தெரியாதா?
குழந்தைகள் + பெண்கள் + ஆண்கள் என்ற கான்டெக்ஸ்டில் எழுதியிருந்தேன். :)
நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< HomeMoved to here