அம்மா உந்தன் கைவளையாய்......

வாணிஜெயராம் தான் எனக்கு ரொம்ப பிடித்த பாடகி என்று ஒருமுறை நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் முறைத்தார். இருக்காதா பின்னே? சாதனா சர்கம், சித்ரா, சுஜாதா வில் இருந்து சமீபத்திய ஸ்ரீலேகா பார்த்தசாரதி, மதுமிதா. சுசித்ரா என்று கலக்கிக் கொண்டிருக்க, இப்பப் போய் வாணிஜெயராம் என்கிறீரா என்பதாகத்தான் இருந்தது அந்த முறைப்பு.

அதுக்கு என்ன செய்ய முடியும். நானே நானா யாரோதானா வில் இருந்து, மன்னன் மயங்கும் மல்லிகை வரை, அபூர்வராகங்களில் இருந்து சங்கராபரணம் வரை கட்டிப் போட்ட குரலாயிற்றே?

இந்தப் பாட்டை யாராவது கேட்டிருக்கிறீர்களோ? அன்பு மேகமே .. கொஞ்சம் ஓடிவா!
அப்புறம் இந்தப் பாட்டு... மல்லிகை முல்லை பூப்பந்தல்... சரி அதெல்லாம் விடுங்க..

அதல்லாம் உடுங்க... அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா பாட்டு?

சின்னபிள்ளையாக இருந்த போது, சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு படத்தில் வந்த அந்தப் பாட்டு அப்போதே மனதில் நின்று போனது. தேசிய விருது பெற்ற இயக்குனர் கே.எஸ். சேதுமாதவனின் படம் அது என்றோ, அந்தப் பாட்டை எழுதியவர் பாரதிதாசன் என்றோ அப்போது தெரியாது. பின்னால்தான் தெரிந்து கொண்டேன்.

நேற்றோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ, பாலாஜியின் டிஎ·ப்எம்மின் song of the day இந்தப் பாட்டு.

பாடல் வரிகள் இதோ

அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா?
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா?
அம்மா ஆ..... அம்மா...ஆ அம்மா...ஆ

அம்மா உந்தன் காதணியாக ஆகமாட்டேனா?
அசைந்து அசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா?
அம்மா ஆ..... அம்மா...ஆ அம்மா...ஆ

அம்மா உந்தன் நெற்றிப்பொட்டாய் ஆகமாட்டேனா?
அழகொளியாய் நெற்றி வானில் மின்னமாட்டேனா?
அம்மா ஆ..... அம்மா...ஆ அம்மா...ஆ

அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா?
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா?
அம்மா ஆ..... அம்மா...ஆ அம்மா...ஆ

ஒற்றைப் பரிமாணத்தில் தெரியும் இந்த வரிகளை, வாணிஜெயராமில் குரலிலும், எம்.பி.எஸ்ஸின் இசைக்கோர்ப்பிலும் கேட்டுப் பாருங்கள். புரியும். நினைவு படுத்திய டி·எப்எம் காரர்கள், பாலாஜி மற்றும் சரவணனுக்கும், மடலை ·பார்வேர்ட் செய்த இரா.முருகனுக்கும் நன்றிகள்.

அன்புடன்
பிரகாஷ்

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I