conference என்றால் என்ன என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த unconference என்பது கொஞ்சம் குன்ஸாகத்தான் இருந்தது. என்னதான் நடக்கும் போய்ப் பார்க்கலாமே என்றும், பிராந்திய மொழி வலைப்பதிவுகள் பற்றி ஏதாவது பேச்சு நடந்தால், உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பலாம் என்று நினைத்து இரண்டு நாள் நடந்த இந்த அ-கருத்தரங்கத்தில், இரண்டாம் நாள் கலந்து கொண்டேன்.
* Blogcamp.in என்றால் என்ன?
* யார் இதை நடத்தினார்கள்?
* யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் ?
* என்ன என்ன பேசினார்கள் ?
* யார் யார் இதற்கு வர்த்தக ரீதியில் ஆதரவு தந்தார்கள் ?
* நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி வலைப்பதிவாளர்களின் கருத்து என்ன?
* கலந்து கொண்டவர்கள் எடுத்த புகைப்படங்கள் ?
இந்தச் சுட்டிகளைச் சொடுக்கி, படித்து விட்டு கீழ்க்கண்ட பதிவைப் படிப்பது நலம். இல்லாவிட்டால், மணிரத்னம் படத்தை ரிவர்ஸில் பார்ப்பது போல ஒரே 'கேராக' இருக்கும். சிரமமாக இருக்கும் என்று தோன்றினால், பவித்ரா தாக்கல் செய்திருக்கும் அறிக்கையையாவது படித்து விடுவது உசிதம்.
கலந்துகொண்டதில் முதலில் ஒரு விஷயம் தெளிவானது. கோட், சூட், டை க்கு பதிலாக, ஜீன்ஸ் டிஷர்ட் போட்டுக் கொண்டு கருத்தரங்கம் நடத்தினால், அது அ-கருத்தரங்கம். மற்றபடிக்கு, ஒரு கருத்தரங்கத்துக்கு உண்டான அத்தனை விஷயமும் - மடிக்கணிணி, அகலப்பாட்டை, குளிரூட்டப்பட்ட உள்ளரங்கு, ஒலிப்பதிவு/வலைபரப்பு செய்ய காட்பரீ எக்ளேர்ஸ் சைசில் மின்னணுக் கருவிகள், ஐபின் சானலில் இருந்து கொண்டை மைக்குடன் செய்தியாளர், சுடச் சுட காஃபீ - அனைத்தும் இருந்தது. ஆனால், ஒரு அ-கருத்தரங்கத்துக்கு உண்டான முக்கிய மேட்டர், informal discussion, மட்டும் லேது
தொடங்கிய நாளில் இருந்து, திரை விழும் வரை கையிலே லாப்டாப் வைத்திருந்தவர்கள் அனைவரும் live blogging செய்தார்கள். ஆகவே அது பற்றி நான் ஏதும் எழுதப் போவதில்லை. குறிப்பிட வேண்டிய விஷயங்கள் மட்டும் இங்கே , சுருக்கமாக....
குவிஸ்ஸில் கோட்டை விட்ட சோகத்தோடு வெளியே வந்து வீட்டுக்குச் செல்லும் போது, தமிழில் இப்படி ஒரு அ-கருத்தரங்கம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.
*டமார்*
சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவின் டயர் பஞ்சர்.
இதிலேர்ந்து தெரிஞ்சுக்கறது என்னன்னா......
ஒரு புண்ணாக்கும் இல்லே, நீங்களா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்க வேண்டாம்....
Tags : blogcamp, blogcamp.in
Subscribe to Post Comments [Atom]