Reunion
30 வருடங்கள் கழித்து எழுதப் போகும் சுயசரிதையில் இருந்து முன்னதாகவே ஒரு சில பக்கங்கள்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டன் என்ற நண்பன் ஒருவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் மணிகண்டன் என்ற பெயரிலே எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது.
" எக்ஸ்க்யூஸ் மீ.... உங்களுக்கு எந்த நம்பர் வேணும்...? "
" அடப்பாவி ஜேபி, ஞாபகம் இல்லியா? நாந்தாண்டா மணி. டாம்கேட். ஞாபகம் வரலே? "
டாம்கேட் என்றதும் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டது. கல்லூரியில் கூட படித்தவன். பூனைக்கண்ணன். நெய்வேலிக்காரன். இவன் எப்படி இங்கே? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? என்ன செய்து கொண்டிருக்கிறான்?
எங்கெங்கோ அலைந்து திரிந்து நம்பரைப் ப்டித்திருக்கிறான். பிறகு நீடித்த அந்த முக்கால் மணிநேர தொலைபேசி உரையாடலிலே, என் கூடப் படித்த நண்பர்கள், நண்பர்கள் அல்லாதவர்கள், நண்பர்களாக இருந்து முறைத்துக் கொண்டு போனவர்கள், லட்டர், வாலன்டைன் கார்டு வாங்க மறுத்தவர்கள் , வாங்கி விட்டு பிரின்ஸியிடம் போட்டுக் கொடுத்தவர்கள் என்று அத்தனை பேரும் இப்போது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்களைப்...