Prakash's Chronicle

ஜாகை மாத்தி ரொம்ப நாளாச்சு... புது வீட்டுக்கு வாங்க

Thursday, September 29, 2005

 

கோவை

மன்னிக்கணும்...கிட்டதட்ட எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி போல என்னுடைய வாக்குறுதியும் ஆயிப்போச்சு.. அதான், வாரம் முழுக்க தமிழ்ப்பதிவாப் போடுறேன்னு சொல்லிட்டு, கண்டுக்காம விட்டதைத் தான் சொல்றேன். அதுக்கு வழக்கம் போலவே ஒரு காரணம் வெச்சுருக்கேன்... நீங்க நம்ப மாட்டீங்கன்னாலும் சொல்றது என்னோட கடமை...

அதாவதுங்க , இந்த வார இறுதியிலே நான் கோவைக்குக் பயணமாகிறேன். சென்னையை கெடுத்தது பத்தாதுன்னு இப்ப கோயமுத்தூரா ந்னு யாரோ ஒர்த்தர் கொரல் விடுறார் பாருங்க... பேசும் போது இப்படி ஊடால ஊடால குரல் கொடுத்தா என்னால கோர்வையாச் சொல்ல முடியாது.. கொஞ்சம் சத்தம் போடாம அமைதியாக் கேக்கணும் இல்லாட்டி எந்திரிச்சுப் போயிருவேன்...

ஆச்சா..

இப்ப கேளுங்க.. எதுல உட்டேன்?.... ஆங்... கோவைக்குப் போறேன்...மூணு நாள் பயணம்.

தமிழ் குறும்பட அமைப்புன்னு ஒரு அமைப்பு தமிழ்நாட்டிலே இருக்குங்க.. அவங்களும், நிழல் னு ஒரு பத்திரிக்கையும் சேர்ந்து, கோவைலே, ஒரு மூணு நாள், பயிற்சிப் பட்டறை ஒண்ணு ஏற்பாடு செய்யறாங்க.. நிறைய பிரபல குறும்பட இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியருங்க. எல்லாம் வந்து பாடம் எடுக்கிறாங்க.. அங்கியே தங்கி, பிற மொழி கலைப்படங்களைப் பார்த்து, பேசி, கேள்வி கேட்டு, விவாதம் செஞ்சு, குறும்படங்களைப் புரிஞ்சுக்கறதுக்கான ஒரு ஏற்பாடுங்க இது.. இதுல நான் கலந்துக்கறேன்..அது தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கப் போயிட்டதாலதான், வலைப்பதிவுலே நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாத்த முடியாமப் போச்சு.

வாக்குறுதி கெடக்கட்டும் களுதே... என்னமோ குறும்படம் அது இதுன்னு என்னமோ புருடா விடுறியேன்னு என்ன அதுன்னு யாரோ ஒருத்தர் குரல் குடுக்கிறார்னு நினைக்கிறேன்..

அதாவதுங்க.. எனக்கு இந்தக் குறும்படம்னா என்னன்னு சத்தியமாத் தெரியாது எனக்குத் தெரிஞ்சதல்லாம், அரங்குல ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி, மாதிரி நடிக நடிகையர் நடிச்ச முழுநீளத் திரைப்படங்கள் தான். ஒரு முறை, ஒரு முறை வாய்ப்புக் கிடைச்சப்ப, லீனா மணிமேலைக்கிட்டே 'மொக்கை' ( மொக்கை = வெட்டியாகப் பேசுதல் ) போட்டுட்டு இருந்தேனுங்க. அவங்க, நம்ம உருப்படாத நாராயணனோட நண்பர். நாராயணன் குடுத்த அறிமுகத்துலே பேசிட்டு இருந்தப்ப, அவங்களோட மாத்தம்மா ன்னு ஒரு குறும்படத்தை இல்லை இல்லை... விவரணப்படத்தைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சது. அப்படியே அசந்து போயிட்டேன்னா பாத்துங்களேன்...அவங்க கூட பேசினதுலே ரொம்ப சுவாரசியமான விஷயம் எல்லாம் கிடைச்சது...சரி, இந்த குறும்பட விவகாரத்தை எல்லாம் கிட்டக்க இருந்து பார்க்க முடியுமான்னு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் , மேல சொன்ன குறும்பட பயிற்சிப் பட்டறை விஷயம் தெரிய வந்தது. அதுல கலந்துக்க நாளை இரவு புறப்பட்டுப் போய், திங்கக்கிழமைதான் திரும்பறேன்..

போயிட்டு வந்து படங்காட்டறேன்...

Comments:
போய்ட்டுவந்து கோயம்புத்தூர் கெட்டுச்சா இல்ல கோயும்புத்தூர்ல நீங்க கெட்டிங்களா ங்குற கதையை எழுதுங்க.
 
ம்..என்சாய் ராசா...:-)
 
அங்கெ கத்துக்கிட்டு வந்தவிவரம் எல்லாம் எழுதுவீங்கெல்லெ?
 
pirapalya ........ (nirappikkoLka) uruvaakukinRAr ;-)
 
பொறாமையா இருக்கு ப்ரகாஷ்..டிசம்பர்லே சென்னையிலே நடத்துவாங்களா??
 
Prakash,

Welcome to Kovai. If there is sufficient interest, we can have a bloggers' meet in Kovai during your visit. Any takers?
 
பயிற்சி பட்டறைய சரியா முடிச்சிட்டு வாங்க ப்ரகாஷ்

தமிழ்-லதான்ன்னு அங்கயும் வாக்கு குடுத்துட்டு
முழிக்காம வந்து சேருங்க

அங்க நடந்த விஷயம் எங்களுக்கும் தெரியணும்ல

காசியையும் நலம் விசாரிச்சதாய் சொல்லுங்க
 
Prakash,
Can any one attend that பயிற்சி பட்டறை?
if so pls let us know that address and timings.
 
and also date
 
"எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி போல"

Napolean can do action role not only in cinema, real life also...

BTB, i meant actor "Napolean"!
 
கார்த்திக், சுந்தர் நன்றி
 
துளசிகோபாலக்கா : அவசியம் எழுதுவேன். புகைப்படங்களோட
 
// -/பெயரிலி. said...
pirapalya ........ (nirappikkoLka) uruvaakukinRAr ;-)
//

ரமணி : பிரபல்ய 'வெத்துவேட்டு வீராச்சாமி' உருவாகிறார். நீங்க விட்ட இடைவெளியை சரியா நிரப்பினேனுங்களா? :-)
 
//Ramya Nageswaran said...
பொறாமையா இருக்கு ப்ரகாஷ்..டிசம்பர்லே சென்னையிலே நடத்துவாங்களா??
//

ரம்யா : சென்னை வரீங்களா? அவங்க கிட்ட நிச்சயம் கேட்டுப் பார்க்கிறேன். கொஞ்சம் உருப்படிகளைச் சேர்த்து தரேன், இங்க ஏற்பாடு பண்றீங்களா ன்னு கேக்கலாம்னு ஏற்கனவே நினைச்சிட்டு இருந்தேன். கூடி வந்தா கண்டிப்பா தெரிவிக்கிறேன்
 
//Welcome to Kovai. If there is sufficient interest, we can have a bloggers' meet in Kovai during your visit. Any takers?
//

காசி : ஏற்கனவே பேசினாப்போல, அவசியம் சந்திக்கிறோம். எனக்கு கோவைலே வேற யார் இருக்காங்கன்னு தெரியலை. அப்படி யாராவது கோவையிலே இருந்தா, அவங்க எனக்கு ஒரு மடல் தட்டிவிடணும்னு கேட்டுக்கிறேன். சந்திப்போம்.
 
//காசியையும் நலம் விசாரிச்சதாய் சொல்லுங்க //


மதுமிதா : நன்றி. காசியை விசாரிச்சேன்னு சொல்றேங்க..
 
//Prakash,
Can any one attend that பயிற்சி பட்டறை?
if so pls let us know that address and timings. //

ஐனோமீனோ : உங்களோட மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க இல்லாட்டி icarus1972us@yahoo.com அப்படிங்கற முகவரிக்கு ஒரு வெத்து மடல் ஒண்ணு தட்டி விடுங்க.. விவரம் தரேன்.
 
// Ramki said...
"எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி போல"

Napolean can do action role not only in cinema, real life also...//

ராம்கி : நெப்போலியனை அத்தனை சுளுவா எடை போட்றாதீங்க.. உள்ள போனார்னா...கதை கந்தல் தான்... அதிரடி எல்லாம் கிடையாது பேரிடி... சும்மாச் சொல்லலை... அனுபவம் பேசுது... இருங்க இருங்க... நீங்க நடிகர் நெப்போலியன் பத்திச் சொல்றீங்களா? நான் என்னமோ... ஏதோன்னு நெனைச்சு...
 
ப்ரகாஷ் கண்டிப்பா கேளுங்க. நான் நவம்பர் கடைசி வாரத்திலிருந்து 5 வாரங்கள் சென்னையிலே இருப்பேன்.
டிசம்பர்லே நடத்தினா இந்த 'உருப்படி' உண்டு! :-)

இந்தப் பட்டறை பற்றி காலச்சுவடுலே விளம்பரம் பார்த்தேன். இங்கிருந்தே போயிட்டு வரலாம்னு கூட ஆசையா இருந்திச்சு.
 
If you had informed in advance, I could have attended in Coimbatore itself. Please inform me if you are able to organise something in Chennai.
 
மீனாக்ஸ், எனக்கு கொஞ்சம் லேட்டாத்தான் தெரிய வந்தது. அவசர அவசரமா கிளம்பிட்டேன். சென்னையிலே இதே போல ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யறதாகச் சொல்லி இருக்காங்க.. அந்த சமயத்துலே, போதிய நேர அவகாசம் இருக்கிற மாதிரி முன் கூட்டியே தெரிவிக்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< HomeMoved to here