கில்லி - திரைப்படமல்ல..

கில்லின்னா என்ன? இதைக் கொஞ்சம் பாருங்க , அதுக்குப் பிறகு, இதையும் பாருங்க...

இப்ப ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும்...

A personal filter for tamil blogs and blogs in english with a distinct tamil flavour.

இன்றைக்கு, ஆங்கில வலைப்பதிவுகளுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையில் இருப்பது, தமிழ் வலைப்பதிவுகள் தான். இன்னும் இன்னும் சொல்லப் போனால், இந்திய மொழிகளில், அதிக எண்ணிக்கையில் இருப்பது தமிழ் வலைப்பதிவுகள். நல்ல பதிவுகளைத் தொடர்ந்து படித்து, பாதுகாத்து, பிறருக்குக் காட்ட, ஒரு கிட்டங்கி வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் பதிவு முழுக்க முழுக்க, நானும் இன்ன பிற பங்கேற்பாளர்களும் (தற்போதைக்கு பாலாஜி மட்டும் ) ரசிக்கிற பிற சுட்டிகளின் சேகரம் மட்டுமே.

இதிலே original content ஒரு சதவீதத்துக்கும், குறைச்சல் என்பதாலும், நாளொன்றுக்கு பதினைந்து முதல் இருபது பதிவுகள் இடம் பெறும் என்பதாலும், தமிழ்மணத்திலோ, நந்தவனத்திலோ சேர்ந்து ஓசியாக site traffic பெறுவது போங்காட்டம். பட்டியல் முழுக்க கில்லி பதிவுகளே இருந்தால், கோவையில் அனேகமாக இன்னொரு குண்டு வெடிக்கலாம் :-)

ஆகவே, கில்லியை எப்படி தொடர்வது, பின்னூட்டங்கள் அளித்து விட்டு எப்படி டிராக் செய்வது, நம்ம பின்னூட்டங்களுக்கு யாராவது பதில் சொல்லி இருந்தால், அதை எப்படி தெரிந்து கொள்வது? ( மதுமிதா... இந்த பிரச்சனைக்கு தீர்வு கெடைச்சுதா ? :-) ) என்பது போன்ற அதிமுக்கியமான பிரச்சனைகளை எல்லாம் கழட்டி வெச்சுட்டு இங்கே வாங்க.. ஒரு நாளைக்கு ஏதாச்சும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து பார்த்தீங்கன்னா, 25 அல்லது 30 சுட்டி கிடைக்கும். புடிச்சா படிங்க.. சுட்டுகிற பதிவு மேலே, உங்களுக்கு ஏதாச்சும், விமர்சனமோ கேள்வியோ இருந்தா, நீங்க அங்கேயே போய் சொல்லலாம்.

இப்போதைக்கு பாலாஜியும் நானும் மட்டுமே , சுட்டிகளைத் தேர்வு செய்வதால், கில்லியின் முகம் கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரிதான் இருக்கும்... கொஞ்ச நாளைக்குப் பிறகு நீங்க எதிர்பார்க்காத இன்னும் சிலர் உள்ளே வர இருக்காங்க..

அதுவரைக்கும்...

சொல்லி அடிச்சா.....கில்லி

Comments

rajkumar said…
பிரகாஷ்,

இது புதுவிதமான சுவையான முயற்சி.உருப்படியான பதிவுகளை படிப்பதற்கு கண்டிப்பாக உதவும்.

பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்ப, எங்க பார்க்கலாம்?

அன்புடன்

ராஜ்குமார்
செட்டு சேந்துட்டாங்கப்பா!! : ))))
Mookku Sundar said…
சூப்பர் ஐடியா பிரகாஷ்.

ஃபில்டர் தரமா இருக்கும்னு நம்பறேன் ;-)
ராஜ்குமார்... அவசியம் பார்ப்போம்.. சனிக்கிழமை அன்னிக்கு, புள்ளைங்களாம், கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கூடறாங்க போலிருக்கே... நான் தான் வரமாட்டேன்..ஊர்ல இல்லை :-)

நாராயண் : :-)

சுந்தர் : நன்றி.. ( டைனமிக் என்கோடிங் எப்படி பண்றதுன்னு தெரியலை )

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I