சென்னையில் வெள்ளம் - updates

1. சென்னையில் உள்ள சில ஏரிகள் உடைத்துக் கொண்டு விட்டன. சில ஏரிகள் நீர் வரத்து அதிகமானதால் திறந்து விடப்பட்டன.நகரில் பல பகுதிகளில் நீர் புகுந்து கொண்டிருக்கிறது

2. புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

3. அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, சின்மயாநகர், கே.கே.நகர், விருகம்பாக்கம், அமைந்தகரை, எம்.எம்.டி.ஏ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள், மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

4. இன்று முழுதும் மழை இல்லை. இப்போது லேசாக தூறல் அடிக்கிறது. சென்னையின் முக்கிய பகுதிகள் பல இடங்களில் மார்பளவுக்கும், இடுப்பளவுக்கும் நீர் இருக்கிறது.

5. வானிலை அறிக்கையின் படி இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்துக்கு மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

6. நாங்கள் இருக்கும் பகுதி மேடான பகுதி என்பதால், நீர் இங்கே வராது என்று பேசிக் கொள்கிறார்கள். வந்தாலும், அக்கம் பக்கத்தில் இருக்கும் மேல் மாடி குடியிருப்புகளுக்குச் தஞ்சம் அடைய முடிவு செய்திருக்கிறோம்.

7. போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது.

8. புறநகரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

update :

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

9 weird things about prakash

மிக்ஸர் - I