அப்துல் ஜப்பார்

இந்த மாதிரி niche வலைப்பதிவுகளில் இருக்கிற ஒரு பெரிய சிக்கலே, அது ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே எழுதப்பட்டு, சின்ன வட்டத்துக்குள்ளேயே படிக்கப்பட்டு, பின்னர் மறந்து விடும் என்பதுதான். கிரிக்கெட் கூட்டுவலைப்பதிவு, பெரும்பாலும் நடந்த ஆட்டத்தைப் பற்றிய வர்ணனையாகத்தான் இருக்கும் என்பதாலும், தன்னை மறந்து பார்த்து ரசிக்கிற ஆட்டத்தின் finer aspect கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் அத்தனை ஈடுபாடு இல்லை என்பதாலும் கவனமாகப் படிப்பதில்லை. அப்படி தள்ளிவிட்டு போக இருந்த நேரத்திலே, பா.விஜயின் 'உடைந்த நிலாக்கள்' என்று ஒரு பதிவு துவங்க, என்னடா இது புதுசா என்று உள்ளே போய் பார்த்தால், கிரிக்கெட் பற்றிய 'அப்துல் ஜப்பார்' எழுதிய ஒரு நல்ல கட்டுரையை, ஆசீப் மீரான் வலைப்பதிவில் போட்டிருக்கிறார்.

சென்னையில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களின் போது, பள்ளிக்கு கண்டிப்பாக லீவு போடக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுக்கு பயந்து, சிங்கப்பூரில் இருந்து ரேடியோவும், இயர் ·போனும் இருக்கிற வாட்சை வைத்திருந்த நண்பனுடன் ஒட்டிக் கொண்டு கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 89 ரிலையன்ஸ் கப்பின் போது வீட்டுக்கு டீவி வந்து விட்டதால், ரேடியோ கேட்கிற வழக்கம் போய்விட்டது. அவர் பேசி அதிகம் நான் கேட்டதில்லை. ராஜ் டிவியிலே என்று நினைக்கிறேன், 'வார்த்தை விளையாட்டு' என்ற நிகழ்ச்சியை நடத்திய போதும், யூகி சேதுவின் நையாண்டி தர்பாரில் விருந்தாளியாக வந்த போதும் பார்த்திருக்கிறேன். இத்தனை அழகாக எழுதுவார் என்று தெரியாமல் போனது. ( கிரிக்கெட் தொடர்பில்லாமல், வேறு ஒரு கட்டுரையை மரத்தடியில் படித்திருக்கிறேன்)

அனேகமாக சமீபத்தில் கிரிக்கெட் தொடர்பாக நடந்த அனைத்து விஷயங்களையும் போகிற போக்கில் தொட்டு, வர்ணனை செய்கிற பாணியிலேயே, எழுதியிருக்கும் அக்கட்டுரை சிறப்பானது.

கிரிக்கெட் ஆட்டத்தை பற்றி தமிழில் எழுதுபவர்கள் மிகவும் குறைவு. personal touch சேர்த்து, நயமாக எழுதுபவர்கள் கிட்டதட்ட இல்லை என்று சொல்லலாம், with few exceptions like பி.ஏ.கிருஷ்ணன், அசோகமித்திரன்..

அப்துல் ஜப்பார் நேரம் கிடைக்கிற போது, தொடர்ந்து எழுதவேண்டும் :-)

Comments

நானும் கிரிக்கெட் கூட்டுப்பதிவு படிக்கிறதில்ல. சுட்டி கொடுத்துச் சொன்னதற்கு நன்றி. இப்படி ஏதாவது குறிப்பிட்ட இடுகை வரும்போது ஒரு குரல்(தனிமடலிலாவது) குடுங்க பிரகாஷ்.

நான் படித்த கட்டுரையொன்றின் சுட்டி.

http://keetru.com/puthiyakaatru/nov05/ganguly.html


-மதி
மதி :கண்டிப்பா சொல்றேன்..

கீற்று கட்டுரை வாசிச்சிட்டேன்..நன்றி

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்