IIPM vs Gaurav Chabnis & fellow bloggers

1. Arindam Chaudary என்கிற ஒரு டுபாகூர் ஆசாமி, ஒரு எம்பிஏ பட்டங்கள் விற்கும் கடை ( Indian Institute of Planning Management) ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கல்வி நிறுவனம், பலரது விமர்சனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. சமீபத்திலே,
economic times ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின் படி, இவர் விளம்பரங்களுக்காக செலவு செய்தது 5.1 கோடி ரூபாய்கள். இத்தனைக்கும், இவரது கல்வி நிறுவனம் வழங்கும் பட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றவை அல்ல.

2.பொதுவாக, தேசிய நாளிதழ்களில் முழுப்பக்கத்திலே விளம்பரங்கள் வரும். அவருடைய claims நம்பமுடியாதவையாக இருக்கும். பட்டங்களில் விலை சில லட்சங்கள். அதை வைத்து நாக்கு வழிக்கக் கூட முடியாது என்று படித்து முடித்த பின்புதான் தெரியும். இதிலே சம்பாதித்த பணத்தை வைத்து, அரிந்தாம்,சன்னிதியோல் நடித்த படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஆனது

3. மும்பையில் இருந்து வெளிவரும்
JAM என்கிற ஆங்கிலப் பத்திரிக்கையை நடத்துபவரும், business world ஆங்கிலப் பத்திரிக்கையில், பத்தியாளருமான ( columnist) ரஷ்மி பன்சால், தன்னுடைய பத்திரிக்கையிலே, IIPM பற்றிய தில்லுமுல்லுகளை ஆதாரத்தோடு அம்பலம் செய்தார். தன்னுடைய
வலைப்பதிவிலும் மறுபதிப்புச் செய்தார்.

4. இதனைத் தொடர்ந்து, கவுரவ் சாப்னிஸ் என்ற ஆங்கில வலைப்பதிவாளர்,
தன்னுடைய பதிவிலும், இந்த விவகாரம் குறித்து எழுதினார். ஆங்கில வலைப்பதிவாளர்கள் பலரும், இதற்கு ஆதரவாக மறுமொழி அளித்தனர். IIPM குறித்து தங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதினர்.

5. இது நடந்த சில நாட்களில், IIPM நிர்வாகத்தில் இருந்து கவுரவ் சாப்னிஸ¤க்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் ஈமெயில் மூலம் வந்தது. அதிலே IIPM நிர்வாகம், ஏகப்ப்பட மிரட்டல்கள் விடுத்திருந்தது. 25 கோடி ரூபாய்கள் நஷ்ட ஈடும் கேட்டிருந்தது. சம்மந்தப் பட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கட்டளை இட்டது.

6. கவுரவ் சாப்னிஸ் அதனை ஏற்கவில்லை.

7. IIPM, கவுரவ் பணியாற்றும் ஐபிஎம் நிறுவனத்துக்குப் புகாரை எடுத்துச் சென்றது. மேலதிகாரிகள், கவுரவை கூப்பிட்டு விசாரித்த போது, தன்னுடைய வலைப்பதிவு , தன் சொந்தக் கருத்துக்களைப் பதிவு செய்வதற்காகத்தான் என்றும், தேவை என்றால், அந்தக் கருத்துக்களுக்கும், தான் பணியாற்றும் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்றும் ஒரு disclaimer ஐ
வலைப்பதிவிலே சேர்த்து விடுவதாகவும் சொல்லி இருக்கிறார். IBM நிறுவனம் அது தேவை இல்லை என்றும், நடந்து கொண்டிருக்கும் விவகாரத்தை தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த விசாரணை என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் மேலதிகாரி.

8. அதனைத் தொடர்ந்து, IIPM கடை, பல பொய்ப்பெயர்களில், ரஷ்மியின் பதிவுகளில், பின்னூட்டம் அளித்திருக்கிறது. கவுரவ் சாப்னிஸ் என்ற பெயரிலேயே ஒரு வலைப்பதிவுவைத் தொடங்கி, எழுதி வந்திருக்கிறது.

9. IIPM, இந்த விவகாரத்திலே, IBM க்கு மேலும் தொல்லை கொடுத்திருக்கிறது. IBM கவுரவ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தங்கள் வளாகத்தில் இருக்கும் IBM கணிணிகளை எல்லாம் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்ப்பு தெரிவிப்போம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறது.

10. இந்த விவகாரத்திலே, தன்னுடைய employer இன் பெயர் இழுக்கப்படும் தர்ம சங்கடத்தைத் தவிர்க்க வேண்டி,

கவுரவ் சாப்னிஸ் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

வாழ்க ஜனநாயகம்!
வாழ்க கருத்துச் சுதந்திரம்!

இது குறித்து எழுதியவர்களின் அனைத்துப் பதிவுகளும் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
சுட்டி முகவரி இதோ :

http://sambharmafia.blogspot.com/2005/10/join-fight-against-iipm-and-string-of.html

Comments

Chenthil said…
Thanks Prakash for bringing this to Tamil blogs. IIPM wanted 125 crs from Gaurav. Probably Pony tail thought he can take the money and retire :-). Amma Veerapanukke 5 crs than koduthaanga :-)
there have been incidents elsewhere where bloggers have suffered because of steps taken
by their employers. It is assumed
that one blogs in personal capacity
unless stated otherwise. The existing laws offer adequate protection to freedom of expression. But not many can afford to fight cases in courts.the
situation is no different in USA
where litigation is prohibitively
expensive.
ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தகவலுக்கு நன்றி.
அரசியல் சக்திகளும், பணம் படைத்தவர்களும், பத்திரிக்கைகளும் வகுத்த விதிகளின்படி வாழ வேண்டும் என்றெதுவும் சட்டம் இயற்றப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது... :-(

அதுவும் 125 கோடிக்கான நீதிமன்ற நோட்டிஸ் மின்னஞ்சல் மூலம் வந்தது ஹைடெக் காமெடி..

குற்றச்சாட்டுகளை மறுப்பதின்றி, அடக்க முயற்சிப்பதிலிருந்த்தே இதில் விவகாரம் இருப்பது புரிகின்றது...

வலைத்தளம் பதிப்பவர்கள் அனைவரும் ஒர் அணியில் திரண்டு.. உண்மை பரப்புவோம்..
பிரகாஷ்,
இதே கூத்து அமெரிக்காவிலும் நிகழ்கின்றது. CBS தொலைக்காட்சியின் 60 Minutes ABC தொலைக்காட்சியின் 20/20 ஆகியன இது குறித்து 'புலனாய்வுச்செய்திகளை' அவ்வப்போது தரச்செய்கின்றன. ஒரு நிறுவனத்தை (பல்கலைக்கழகத்தை என்று வாசிக்கவும்) மூடினால், இன்னொரு பெயரோடு இன்னோரிடத்திலே முளைக்கிறது. தமிழ்மணத்தின் வாசகர்பக்கத்தின்மேலே தோன்றும் விளம்பரங்களினைக் கொஞ்சம் ஆய்ந்து பார்த்தால், இப்பல்கலைக்கழகங்களின் கூத்து புலப்படும்.

சென்ற வாரம் பொஸ்ரனின் பழைய ஆடையவிழ்ப்பு நடனக்காரியொருவர் இப்படியான கொன்கோர்டியா பல்கலைக்கழகத்திலே மனச்சிகிட்சைநிபுணராகி வைத்தியம் பார்த்து கைது செய்த செய்தி வந்தது. சனம்கூடிய நாடுகளிலே இதைத முற்றாகத் தடுப்பது கடினம். ஆனால், நீங்கள் தந்திருக்கும் மேற்படி செய்தியிலே IIPM திமிர் அதிகமே.
http://www.ojr.org/ojr/stories/050315glaser/

இதையும் பாருங்க.. இவரைப் பற்றி சன்னாசி ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Thanks Prakash, will blog in detail in 2-3 days. Btw, thanks for the drop in call taxi.
செந்தில், 125 கோடி ரூபாயா? நான் சரியாகக் கவனிக்க வில்லை. குதிரே வாலு கொண்டைக்கு ஆனாலும் ஆசை ரொம்ப அதிகம் :-). ஒட்டுமொத்தமாக அனைவரும் திரண்டு நிற்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரவி , கொஞ்ச காலமாக இது போல அங்கே இங்கே படித்து வருகிறேன். ஆனால், இதிலே ஒரு வித்தியாசம் இருக்கிறது. தான் பார்க்கும் வேலைக்கு நேரடியான தொடர்பு இருக்கிற விஷயத்தை பற்றி எழுதி, அதனால் வேலை போனதுண்டு. இங்கே நிலைமை வேறு.

பின்னூட்டம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

நாராயண், yw:-). கொறஞ்சது ஆறுமாசத்துக்கு ஒருதரமாவது இது மாதிரி, ஒரு ரீசார்ஜ் தனியாவர்த்தனம் போடணும்..
Prakash, miga thulliyamaagavum rasikkum padiyaagavum ezhudhi irukkireergal. Mikka nandri!
Mookku Sundar said…
அந்தப் புறம் பேசுகிறது.!!! - தப்பும் தவறுமாக


http://nanopolitan.blogs
pot.com/2005/10/hey-guess-what.html

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்