கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத் தடை செய்திருக்கின்றன . வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா விசாரித்த போது , அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது. இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள். தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன. பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இர...
Comments