எக்ஸிஸ்டென்ஷியலிஸம் - சுஜாதா- சண்முகம் சிவலிங்கம்

சுஜாதா விகடனில் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி எழுதி, அதன் தொடர்பாக வந்த ரவிஸ்ரீனிவாஸ் வலைப்பதிவில் எழுந்த விவாதம் வந்த நாள் முதலாக, "இருப்பியல் அல்லது இருத்தலியல் என்று அழைக்கப்படும் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்றால் என்ன ?" என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அது நேற்றைக்குத் தான் கிடைத்தது.

தத்துவங்களில் ஊறித் திளைத்தவர்கள், அந்தத் தத்துவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க முயலும் போது, சில அபாயங்கள் நிகழும். அவற்றில் ஒன்று, பெரும்பான்மையானோரைச் சென்றடையும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, எளிமையான, பொருத்தமற்ற உதாரணங்கள் மூலம் விளக்கி, தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வது. இரண்டு, தத்துவங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான அகழிகளில், இன்னும் அதிகம் கூரிய பற்கள் கொண்ட முதலைகளை விட்டு, அருகே அண்டவிடாமல் செய்வது, முடிந்தால் கடிக்கவும் விடுவது.

இவ்விரு அணுகுமுறைகளையும் தவிர்த்து, ஒரு புதிய நடையில், விளங்கும் வண்ணம் எழுதிய சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு நன்றி.

எடுத்து இட்ட மதிக்கும் நன்றி.

Comments

பிரகாஷ், இதே விஷயத்தை கி.பி.அரவிந்தன் தன் பதிவில் எழுதி, அப்பால் தமிழலும் எடுத்துப் போட்டிருக்கிறார்.
நன்றி நாராயண். இதை முன்பு கவனிக்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறேன்.
அதை விடுங்க. இதைப் படிங்க. இதுக்கும் தமிழலக்கியத்திற்கும் ஸ்தானப்ராப்திக் கூட கிடையாது ;-)
http://www.wired.com/wired/archive/13.08/intro.html
தத்துவங்களில் ஊறித் திளைத்தவர்கள், அந்தத் தத்துவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க முயலும் போது, சில அபாயங்கள் நிகழும். அவற்றில் ஒன்று, பெரும்பான்மையானோரைச் சென்றடையும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, எளிமையான, பொருத்தமற்ற உதாரணங்கள் மூலம் விளக்கி, தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வது.

this does not apply to Sujatha.
-----------------------------------
தனக்குத் தெரியாத அல்லது புரியாத விஷயத்தைப் பற்றி தெரிந்தது போல் தப்பும் தவறுமாக சொல்வது, ஜல்லியடிப்பது, பெயர்களை உதிர்ப்பது, அப்படியே யாராவது பிழையைச் சுட்டிக்காட்டினால் அதைக் கண்டு கொள்ளாமல் விடுவது.

As a hardcore Sujatha fan you may not like to write that this is true in case of Sujatha even if you know that this is a fact.
"தத்துவங்களில் ஊறித்திளைத்தவர்கள்" என்ற பிரயோகம் தான் உங்கள் ஆட்சேபணைக்குரியதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். சுஜாதாவின், 'கற்றதும் பெற்றதும்' என்கிற, தற்போது இயங்குகிற அச்சு ஊடகக் கட்டமைப்பில் முக்கிய இடம் வகிக்கும் ஆனந்த விகடன் என்கிற நிறுவனத்தில் எழுதுகின்ற ஒரு சில கருத்துக்கள் மூலமாகவே , சுஜாதாவின் அறிவின் பரப்பளவையும், வாசிப்பின் வீச்சையும் , உங்களால் அளந்து விட முடியும் என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை. ஆனால், வெளியே படிக்கக் கிடைக்கிற அவரது எழுத்தை மட்டுமே வைத்து, அவர் உசத்தியாக எழுதுகிறார் என்றோ உளறுகிறார் என்றோ என்னால் சொல்லி விட முடியாது. சுஜாதாவின் முகம் என்பது , உங்களுக்கும் எனக்கும் படிக்கக் கிடைக்கிற அவரது எழுத்துக்கள் மட்டுமல்ல.

அவர் குற்றங்குறைகளுடன் எழுதியிருக்கிறார் என்பதில் ( அதிலும் சண்முகம் சிவலிங்கம் கட்டுரையை வாசித்த பிற்பாடு ) எனக்கு மாற்றுக்கருத்தும் இல்லை. அதைத்தான் நான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். இது தெரிந்த விஷயம் தான், அதற்கான பல்வேறு தரப்பினரும், வித விதமான தீர்ப்புக்களை அளித்த பின்னர், அதிலே சொல்ல எனக்கு ஏதும் விஷயமில்ல. என் பதிவில் நான் முக்கியமாகச் சொன்னது,

...... இரண்டு, தத்துவங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான அகழிகளில், இன்னும் அதிகம் கூரிய பற்கள் கொண்ட முதலைகளை விட்டு, அருகே அண்டவிடாமல் செய்வது, முடிந்தால் கடிக்கவும் விடுவது.....

இதைத்தான்.
I agree with Prakash.

What I posted in Ravi's pathivu ( http://ravisrinivas.blogspot.com/2005/07/blog-post_25.html ) reproduced here !!!!!
**********************************
ரவி,
இந்த பதிவின் மூலம் இருத்தலியல் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

சில கருத்துக்கள்:

சுஜாதா இருத்தலியல் குறித்து மேம்போக்காக (உங்கள் அளவில் கொஞ்சம் தப்பும் தவறுமாக!) ஆ.வி யில் எழுதியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், அவர் அதைப் பற்றி விஸ்தாரமாக படித்தறிந்தவர் அல்லர் என்று அவசரமாக தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை (by Giving him the benefit of doubt!). ஆ.வி, குமுதம் போன்றவற்றுக்காக எழுதும்போது சமரசம் செய்து கொண்டு, எளிமையாக எழுதுவதாக எண்ணி கொஞ்சம் சொதப்பியிருக்கலாம். மற்றபடி, இதனால் 'தவறான புரிதல்' ஏற்படும் என்பதை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில்,

1. ஆ.வி யை படிப்பவர்களில் 95% பேர்கள் சுஜாதா எழுதியிருப்பதை மேய்ந்து விட்டுப் (மறந்து!)போய் விடுவார்கள். அவர்களுக்கு இருத்தலியல் குறித்து இன்னும் தெரிந்து கொள்ள அவசியமும் கிடையாது, ஆர்வமும் கிடையாது என்பதே உண்மை.

2. உங்களைப் (உங்களோடு, வெங்கட், ரோசா, மாண்டியையும் சேர்த்துக் கொள்ளலாம்!) போன்று (சுஜாதாவை தாண்டி) அடுத்த லெவல் வாசிப்பனுபவத்தில் திளைப்பவர்களுக்கு (by giving you the SAME benefit of doubt!) சுஜாதா இப்படி எழுதியதால் எந்த பாதிப்பும் கிடையாது. இதைக் கிண்டலாகவோ, முகஸ்துதியாகவோ சொல்லவில்லை !!!

3. ஆ.வி யை படிக்கும் (என் போன்ற!) மீதி 5% பேருக்கு, சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" படிப்பதால் பயனே! அவர் passing-இல் குறிப்பிடும் பல விஷயங்கள் குறித்து, இணையத்தில் தேடியோ, புத்தகங்கள் படித்தோ நிறைய (விளக்கமாகவும், சரியாகவும்) அறிய முடிகிறது !

அதே போல், விமர்சிப்பது / மறுத்தெழுதுவது தங்கள் உரிமை என்பதையும் உணர்கிறேன். நன்றி.

**********************************
என்றென்றும் அன்புடன்
பாலா
பிரகாஷ்,

தத்துவங்களில் ஊறித்திளைப்பவர்கள் என்று சுஜாதாவைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால் நீங்கள் சுஜாதாவை பொறுப்பற்றவர் என்று குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றாகிறது. :-))))

ஏனெனில் இருத்தலியம் என்கிற தத்துவத்தை பின்பற்றுபவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் என்பது சுஜாதாவின் 'எளிய' விளக்கம். ஆக.. அந்தத் தத்துவத்தில் ஊறித் திளைப்பவரான சுஜாதா பொறுப்பில்லாமல் இருப்பதின் அடையாளமே இருத்தலியத்தைப் பற்றி பொறுப்பில்லாமல் எழுதியிருக்கிறார் என்பதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

கட்டுடைத்தல் என்றால் என்ன? என்கிற சுஜாதாவின் அடுத்த கட்டுரையை ஆவவோடு எதிர்பார்க்கிறேன். :-)

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்