மாயாபஜார்
சமீபத்திலே, ராஜ் வீடீயோ விஷனில், ஒரு பத்து நாட்களுக்கு தள்ளுபடி விற்பனை வைபவம் நடைபெற்றது. நான் தேடிச் சென்ற திரைப்படங்கள் கிடைக்காவிட்டாலும், அங்கே இருந்ததில், சில முத்துக்களும், ரத்தினங்களும் மாட்டின. இவரைத் தாண்டி ஒரு நடிகை இல்லை என்று நான் நினைக்கும் ஒரே ஒருவர் நடிகையர் திலகம் சாவித்திரி
. அவர் நடித்த பல படங்களைப் பொறுக்கி வந்தேன். அதில் ஒன்று, மாயா பஜார். மகாபாரதத்தின் ஒரு கற்பனைக் கிளைக்கதையான மாயாபஜார் ( 1957 ), ஒரு wholesome entertainer.
பாண்டவர்களுடைய உற்ற துணையான கிருஷ்ணனின் ( என்.டி.ராமாராவ்) மூத்த சகோதரன், பலராமனின் ( டி.பாலசுப்ரமணியன்) செல்ல மகள் வத்சலா ( சாவித்திரி) . அர்ஜுனன் சுபத்திரை தம்பதியரின் மகன் அபிமன்யு ( ஜெமினி கணேசன்). பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் சகோதரி சுபத்திரை. அபிமன்யுவுக்கு வத்சலா மீது இளம்பிராயத்தில் இருந்தே காதல். பெரியவர்களும் அப்படியே முடிவு செய்துவிடுகின்றர்.
ஆண்டுகள் கழிந்த பின்னர், ஒரு காலகட்டத்தில், பாண்டவர்கள், சகுனியின் ( நம்பியார்) சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தோற்று வீடு நாடு ஆகியவற்றை இழந்து விடுகின்றனர். இதைக் கேள்விப்பட்டதும்,. பலராமன், தன் சிஷ்யன் தான் சொல்வதைக் கேட்பான் என்று எண்ணி, துரியோதனனிடம் நியாயம் கேட்கச் செல்கிறார். முகத்துதிக்கு பலியாவது பலராமனுடைய
முக்கியமான பலவீனம் . இந்த பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, துரியோதனனும், சகுனியும் நாடகமாடி, வரவேற்பு, பரிசுகள், பண்டிதர்களின் சாற்றுக்கவிகளில் மயங்கிக் கிடக்கும் நேரத்தில், பலராமனிடம், துரியோதனுடைய மகன் லக்னகுமாரனுக்கு ( கே.ஏ.தங்கவேலு ) , வத்சலாவை மணம் முடிக்க வேண்டும் என்று வரம் கேட்க, பலராமனும் அளித்து விடுகின்றான். பலராமனுடைய மனைவி ரேவதிக்கும், நாட்டை இழந்து பரதேசிகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் பாண்டவர் குடும்பத்தில் பெண் தருவதை விடவும், தன் மகளை, துரியோதனன் மகனுக்கு பட்டமகிஷி ஆக்குவதில் தான் விருப்பம்.
ஆனால், இளம்பிராயத்தில் இருந்தே அபிமன்யு மீது மையல் கொண்டிருக்கும் வத்சலா, லக்னகுமாரனை கல்யாணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறாள். கிருஷ்ணரும் ருக்மிணியும் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், பலராமனும் ரேவதியும், அங்கே வரும் சுபத்திரையையும், அபிமன்யுவையும் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்கள். நாட்டை இழந்தது மட்டுமில்லாமல், சகோதரனே கைவிட்ட துக்கம் தாங்கமல், சுபத்திரை, தன் மகன் அபிமன்யுவுடன் ஊரைவிட்டுச் செல்கின்றனர். அவர்கள் இருவரும் ஊரை விட்டுச் செல்லும் போது, ரதத்தின் சாரதி, கிருஷ்ணரின் ஆணைப்படி, கடோத்கஜனின் ( எஸ்.வி.ரங்காராவ்) ராஜ்ஜியம் இருக்கும் வழியாகச் செல்கிறான்.
கடோத்கஜன், பீமனுடைய குமாரன். மாயா வித்தைகள் கற்றுத் தேர்ந்தவன். தன்னுடைய அனுமதி இல்லாமல், ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிப்பவர்களை துவம்சம் செய்வான். அப்படி, அபிமன்யு, சுபத்திரையுடன் சண்டைக்குப் போகும் போது, அவர்கள் யார் என்று தெரிந்து, உடனே, அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தன்னுடைய இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்கிறான்.
அபிமன்யு வத்சலா காதல், சுபத்திரையை சகோதரன் பலராமனே அவமானப்படுத்தியது, எதிரிக் குடும்பத்தில் சம்மந்தம் வைத்துக் கொள்ள முடிவு செய்தது ஆகியவற்றைக் கேள்விப்பட்டு, கடோத்கஜன், உடனே கௌரவர்கள் மீது படையெடுக்க வேண்டும் என்று ஆவேசம் கொள்ள, சுபத்திரை, அவனைச் சமாதானம் செய்கிறாள். போர் புரிவதை விடவும், தந்திரமாக அந்த திருமணத்தை முறியடிக்க வேண்டும் என்றும், உடனடியாக சென்று கிருஷ்ணரைப் பார்க்கும் படியும் சொல்கிறாள். பின்னர் கிருஷ்ணரின் யோசனைப்படி, கடோத்கஜன், வத்சலாவைக் கடத்திக் கொண்டு வந்து சுபத்திரையிடம் ஒப்படைத்து விட்டு, தான், வத்சலாவின் வேஷத்தில், அங்கே புகுந்து விடுகிறான்.
வத்சலாவின் வேஷத்தில் இருக்கும் கடோத்கஜன் அடிக்கும் கூத்துக்களும், மாய வித்தைகள் மூலமாக திருமணத்தை தடுத்து நிறுத்துவதும், இறுதியில், பலராமனும் ரேவதியும் , சகுனி, துரியோதனனின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்வதுதான் மீதிப் படம்.
படத்தின் நாயகனாக இருந்தாலும், ஜெமினி கணேசன் வருவது கொஞ்ச நேரம் தான். மொத்தப் படமுமே, சாவித்திரி , ரங்காராவின் ராஜ்ஜியம் தான். காதல் மன்னனைப் பார்த்த நேரத்தில் முகத்தில் வெளிப்படுத்தும் நாணமும், அதற்கு முற்றிலும் contrast ஆக, கடோத்கஜனாக இருக்கும் சாவித்திரி, செய்யும் சேஷ்டைகளும், அவர் எப்பேர் பட்ட நடிகை என்பதைக் காட்டுகிறது.
லாஜிக் எல்லாம் பார்க்காமல், பாட்டி சொல்கிற கதை என்று நினைத்துக் கொண்டு பார்க்க வேண்டிய படம். இதை ஜார் old classic என்ற வகையில் தாராளமாகச் சேர்க்கலாம். பொதுவாக, சில பெருசுகள், " ஹ¥ம்ம்ம்ம் அந்தக் காலத்திலே என்னமா படம் எடுத்தாங்க... இப்பவும் எடுக்கிறான்களே...? " என்று பெருமூச்சுவிட்டால், அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிடுவேன். ஆனால், மாயாபஜார் திரைப்படத்தை எத்தனையோ முறை பார்த்த பிறகும், மீண்டும் ஒரு முறை பார்க்கும் போது, அந்தப் பெருசுகள் சொல்வதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அடுத்ததாக மிஸ்ஸியம்மாவையும், சபாஷ் மீனாவையும் எடுத்து வைத்திருக்கிறேன். முதலில் எது என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

Comments
Mayabajarle andha kambalam appadiyum, ippadiyum suruttikkara scenekku vizundhu vizundhu sirichadhoru kaalam!
Reg Savithri acting, Navaraathiri is her excellent piece. Especially the way she reacts to Dr's Questions!
தமிழிலே சிறந்த நடிகர்களாகச் சொல்லச்சொன்னால்,
எஸ். வி. ரங்கராவ்,
நாகையா,
எஸ். வி. சுப்பையா (நாகேஷிலே ஒரு தனிப்பட்ட பிடிப்பு இருக்கின்றது) என்றே பட்டியல் போடுவேன். (சிவாஜி கணேசனை அநியாயமாக அதீதமானநடிப்புக்காட்டும் நடிகர் என அடையாளம் காண்கின்றோமென்ற ஆதங்கமும் அண்மைக்காலத்திலே பழைய படங்களைப் பார்க்கும்போது எழுகின்றது).
மாஜாபஜாரிலே, ஓ. ஏ. கே தேவரின் "கல்யாணசமையல் சாதம்" கடோற்கசனும் கறுப்பு-வெள்ளை-வெள்ளியிலே சந்திர ஒளிமயக்கத்திலே மின்னும் படகிலே "ஆஹா இன்ப நிலாவினிலே" உம் ஞாபகத்திலே நிற்கும்.
இப்படியாக கறுப்பு-வெள்ளை-வெள்ளியிலே படக்கூடச்செயற்கைச்சந்திர ஒளிமயக்கத்திலே மின்னும் சில பாடல்கள் கவர்ந்ததுமாதிரியாக, வண்ண ஜிகினாமின்னும் அண்மைய பாடற்காட்சிகள் கவரவில்லை.
நானும் சமீபத்திலேதான் அந்தப் படத்தைப் (எத்தனையாவது முறை? கணக்கு வச்சுக்கலே)
பார்த்தேன்.
அருமையான படம். கல்யாண சமையல் சாதம்ம்ம்ம்ம்ம்!
என்றும் அன்புடன்,
துளசி.
*******
இன்னாபா திடீர்னு இம்புட்டு துரை, துரைசானில்லாம் நம்மாளுங்க சைட் பக்கம் வர ஆரம்பிச்சுட்டாங்க?? இதை எப்படி ச்ச்ச்டாப் பண்ணுறது??
இந்தப் படத்தை இது வரை நான் துண்டுக் காட்சிகளாகத்தான் பார்த்திருக்கிறேன். முழுப்படம் பார்த்ததில்லை. சஸ்பென்ஸை உடைத்து விட்டீர்களே! :-)
Just kidding, ரசமான கதைச்சுருக்கத்துடன் சுவையான பதிவு. நன்றி.
உள்ளது சொன்னீர்கள் பிரகாஷ்!
ரம்யா சொன்னதுபோல, குழந்தைகளுக்குக் காட்டவேண்டிய படமும் தான். "கல்யாண சமயல் சாதம்" என் சிறுவயது நினைவுகளிலிருந்து அழிக்க முடியாதது.
// அடுத்ததாக மிஸ்ஸியம்மாவையும், சபாஷ் மீனாவையும் எடுத்து வைத்திருக்கிறேன். முதலில் எது என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. //
குழப்பமென்ன? மிஸ்ஸியம்மாவேதான்!
நானும் இந்த ராஜ் டிவி சிடி விநியோக/விற்பனை விழாவில், மாயாபஜார் வாங்கியுள்ளேன். பல சமயங்களில் குழந்தைக்கு சாப்பாடு உள்ளே போக, 'கல்யாண சமையல் சாதம்' சீன் காண்பிக்கப்படுகிறது :-) மேலும், உத்தம புத்திரன், கந்தன் கருணை 2 படங்கள் வாங்கியுள்ளேன். திருவிளையாடல் கிடைக்கவில்லை
- அலெக்ஸ்
I suggesst you to see Sabash meena first.
Anbudan
Rajkumar
சில நேரங்களில் சில மனிதர்கள்,
கப்பலோட்டிய தமிழன்,
எம்.ஆர்.ராதா நகைச்சுவை
சந்திரபாபு நகைச்சுவை
- Suresh Kannan
அருண் : சந்தேகமே இல்லை. கலக்கலான நடிப்பு
ரமணி : அந்த எண்ணத்தை ரொம்ப நாள் முன்னாலேயே மாற்றிக் கொண்டேன். அனேகமாக, சில வருஷங்களுக்கு முன்பு, பாலசந்தர் இயக்கி, சிவாஜி நடித்த எதிரொலி என்ற படத்தை தனியாக உட்கார்ந்து பார்த்த போது என்று நினைவு. ஓவர் ஆக்டிங் என்பதெல்லாம் சப்பை கட்டு..
//தமிழிலே சிறந்த நடிகர்களாகச் சொல்லச்சொன்னால்,
எஸ். வி. ரங்கராவ்,
நாகையா,
எஸ். வி. சுப்பையா //
எஸ்.வி.ரங்காராவ், சுப்பையா, சித்தூர் நாகையா பற்றி எல்லாம் தனியாக எழுத வேண்டும்.
//மாஜாபஜாரிலே, ஓ. ஏ. கே தேவரின் "கல்யாணசமையல் சாதம்" கடோற்கசனும் //
ஓ.ஏ.கே. தேவர்?
//சில பாடல்கள் கவர்ந்ததுமாதிரியாக, வண்ண ஜிகினாமின்னும் அண்மைய பாடற்காட்சிகள் கவரவில்லை. //
உண்மை
ஈஸ்வர் : ஏன் என்ன பிரச்சனை? நல்லாத் தேறுமே....
Your post brought back memories of my "good old" days !!!!!
Nostalgia, really :)
தவறுதான். எஸ்.வி. ரங்கராவ்