உசிலி உப்புமா
தேவையான பொருட்கள்
செய்முறை
* அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய், கடலை எண்ணை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
* கடுகு வெடித்து வந்த உடன், குக்கரில், தண்ணீரை ஊற்றி, பச்சரிசி நொய், பயற்றம் பருப்பு, தாளிதம் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
* நான்கு விசில் வரும் வரை பொறுத்திருக்கவும். நான்காவது விசில் வந்த உடன் அடுப்பில் இறந்து குக்கர் பாத்திரத்தை இறக்கி, ஆவி வெளியேறும் வரை பொறுத்திருந்து குக்கரின் மூடியைத் திறக்கவும் ( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ). நன்றாகக் கிளறி, ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாகப் பறிமாறவும் அல்லது நீங்களே சாப்பிடவும்.
* இதற்கு என்று சைட்-டிஷ் என்று எதுவும் தேவையில்லை. ஆர்லிக்ஸ் பையன் போல அப்படியே சாப்பிடலாம்.
பச்சரிசி நொய் - ஒரு ஆழாக்கு
பயற்றம் பருப்பு - அரை ஆழாக்கு
தண்ணீர் - மூன்று ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - ஆறு
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கடலை எண்ணெய் - நூறு கிராம்
செய்முறை
* அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய், கடலை எண்ணை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
* கடுகு வெடித்து வந்த உடன், குக்கரில், தண்ணீரை ஊற்றி, பச்சரிசி நொய், பயற்றம் பருப்பு, தாளிதம் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
* நான்கு விசில் வரும் வரை பொறுத்திருக்கவும். நான்காவது விசில் வந்த உடன் அடுப்பில் இறந்து குக்கர் பாத்திரத்தை இறக்கி, ஆவி வெளியேறும் வரை பொறுத்திருந்து குக்கரின் மூடியைத் திறக்கவும் ( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ). நன்றாகக் கிளறி, ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாகப் பறிமாறவும் அல்லது நீங்களே சாப்பிடவும்.
* இதற்கு என்று சைட்-டிஷ் என்று எதுவும் தேவையில்லை. ஆர்லிக்ஸ் பையன் போல அப்படியே சாப்பிடலாம்.
Comments
Definitely more than 100 comments expected.
( நாமே சொல்லிட்டு comments ஏறறதுக்கு ஹெல்ப் செய்யாட்டி எப்படி?)
;)
Kalakkunga!
.:dYNo:.
வாலிப வயோதிக அன்பர்களே,அன்பிகளே...
குரோர்பதி நிகழ்ச்சியில கலந்துக்க ஆசையா இருக்கா??
இப்பவே இங்கே வந்து பாருங்க....
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_112238520675418920.html
சுதர்சன்.கோபால்
சரியாச் சொன்னீங்க. ஆவி வெளியேறுனா இறந்து போயிரும்:-)))
//( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ). //
:-)))))))))
இன்னிக்கு உசிலி உப்புமாதான்
செய்யப்போறேன்.
கடவுள் என்னைக்காப்பாற்றுவாராக.
பிரகாஷ், எழுதும்போது நடு நிசியா? :-)
சிலருக்கு ஜாதக ராசி !!!! எதைப்பத்தி எழுதினாலும், கமெண்ட் குவியுது ;-) பாருங்க, நானே "வேணாம், வேணாம்"ன்னு
இருந்துட்டு, ஓடியாந்து பின்னூட்டம் குடுத்துட்டேன் :)
அப்றம், என்னோட சந்திரமுகி பதிவுக்கு நீங்க
பின்னூட்டம் இடவில்லை என்றால் எப்படி ? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல, சொல்லிப்புட்டேன் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
ரொம்ப அழுத்தி பரிமாறிட்டிங்க போல ;-)
1. உசிலி உப்புமா என்ற தலைப்பிற்கு பதிலாக
"உத்திரத்தில் உயிர் அல்லது உப்புமா "
என்ற தலைப்பை வைத்திருந்திருக்கலாம்.
2. தேவையான பொருட்களில் ஒன்று விடுபட்டு விட்டது - சுய நினைவுடன், நல்ல நடமாட்டத்துடன் இருக்கும் திடகாத்திரமான, உத்திரத்தில் உசிலி உப்புமா சாப்பிட கூடிய நபர் - 1 நம்பர்.
3.எப்படியும்.. உங்களது இந்த ரெசிபி படித்து அதை முயற்சித்த நாங்கள் உயிரோடு இருக்கவே போவதில்லை - ஏனென்றால் " அடுப்பில் இறந்து, பின்பு ஆவி எல்லாம் வெளியேறிய பின் " - இறந்து விட்ட நாங்கள், அந்த உசிலி(!!!!!....?)யை சாப்பிட்டும்(!?) தற்கொலை செய்துகொல்லவும் வேண்டுமா என்ன.
உங்களது உசிலி உப்புமாவை சமைக்காத்தால் இன்னும் உயிரோடு இருக்கும் - பத்ம ப்ரியா
ப்ரியா : ஆமா..எதுக்கு ரிஸ்க்கு? .வெஷப் பரீட்சை வேணாம்...... சமைச்சி ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போவுது....... கதை வேற பாதில நிக்கிது.. :-):-):-) :-)