சந்திரமுகி பாத்தாச்சு....

சந்திரமுகி தலைவர் படமல்ல. நல்ல படம்.

தலைவரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், பட்டாசு, தலைவர் திரையில் தோன்றுகிற நிமிடத்தில், திரைக்கு முன்னால் சூடம் காட்டி, தேங்காய் உடைத்தல், ஒன்ஸ் மோர் கேட்பது, மேடையிலே ரசிகர் கூட்டத்தின் நடனம், என்ற வழக்கமான கலாட்டாக்களின் இடையே படத்தைப் பார்த்தேன்.

ரசிகர்களைத் திருப்தி படுத்துவதற்காக, பஞ்ச் வசனங்கள், தேவையில்லாத அரசியல் குறியீடுகள்., தத்துவ வசனங்கள், துதிபாடல்கள் எதுவும் இல்லாமல், அனைவரும் ரசிக்கும் படியான ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்ததற்கு பி.வாசுவுக்கு ஒரு பெரிய 'ஓ'

தலைவர் திரைப்படத்தை, அங்கீகாரம் பெற்ற ரசிகர்கள், முதல் ஏழு நாட்களுக்குள் பார்த்து முடித்து விடுவார்கள். மீதம் தொண்ணுற்று மூன்று நாட்களும், படத்தை ஓடவைத்து நூறு நாள் வெற்றிப் படமாக ஆக்குபவர்கள், பொது மக்கள், அவர்களை ஏமாற்றாமல் நல்ல படம் கொடுத்திருக்கிறார் தலைவர். என்னதான் மணிசித்திரதாழை சுட்டிருந்தாலும், இத்தனை திறமையாக காப்பியடிக்கவும், நம் ஊருக்கும், ரஜினிகாந்த்தின் ஆளுமைக்கும் ஏற்ற மாதிரி, மாற்றங்கள் செய்யவும் ஒரு தனித்திறமை வேண்டும். கத்திமேலே நடக்கிற மாதிரியான திரைக்கதை. கொஞ்சமும் குழப்பமில்லாமல், தெளிவாக, இயக்கி இருக்கிறார், பி.வாசு.

க்ளைமாக்ஸ் காட்சி மிக விறுவிறுப்பாக அமைந்திருந்தது. அருமையாக நடித்த ஜோதிகாவும், கலக்கலான நகைச்சுவை கொடுத்த வடிவேலுவும், ஸ்வர்ணாவும், நாசரும் குறிப்பிடத்தகவர்கள்.

ஒன்றிரண்டு ·ப்ரேம்கள் தவிர்த்து, திரையில் முழுக்க முழுக்க தலைவர் தான். படத்தில் பிரபு இருப்பதே முடிந்து வந்த பின்புதான் நினைவுக்கு வந்தது.

படம் பார்க்கும் போது எழுந்து நின்று ஆடவும், ஓயாமல் விசிலடிக்கவும் அதிகம் ஸ்கோப் இல்லை என்கிற வருத்தம், ரசிகர்களிடையே அப்பட்டமாகத் தெரிந்தது. அதையும் மீறி படம் நன்றாக ஓடும் என்று பட்சி சொல்கிறது.

தான், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு கலக்கலான எண்டர்டெயினர் ( மட்டுமே ) என்பதை, தலைவர் புரிந்து கொண்டுவிட்டார் என்பது சந்திரமுகி படத்தில் இருந்து தெரிகிறது....

இதே போல வருஷத்துக்கு ஜாலியா ரெண்டு படம் குடுங்க தலைவரே...

Comments

Dear Prakash,

I am thinking of seeing this movie in a theatre (will be after a loooooong time!!!) after seeing your positive comments about chandramuki :-)

enRenRum anbudan
BALA
SnackDragon said…
நல்லது.
அப்படீன்னா, இந்த "மாடு ஓடி வந்து சடன் ப்ரேக் போடுவது", "வேல் எக்ஸ் ஆக்ஸிஸ்-ல வேகமா போய்
ஒய்-ஆக்ஸிஸ்-ல தரையில குத்தி நிக்குறது", "தடியைத் தட்டி விட்டவுடனே தரையிலே தனியா கோடு போட்டு ரோடு போடுவது", "நாலு குதிரைகளோட ஒரு மலையிலேருந்து இன்னொரு மலைக்கு டைவ் அடிக்குறது", இது மாதிரி காட்சிகள் எல்லாம் கிடையாதா? என்ன தலைவர் படமோ?

எப்படியோ தலைவர் வாழ்க! :) வந்தவுடனே முதல் ஷோ போவதாய் உத்தேசம்.
Mookku Sundar said…
//தான், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு கலக்கலான எண்டர்டெயினர் ( மட்டுமே ) என்பதை, தலைவர் புரிந்து கொண்டுவிட்டார் என்பது சந்திரமுகி படத்தில் இருந்து தெரிகிறது....//

படத்தைப் பற்றிய கமெண்ட்டுகள் எல்லாத்தையும் படிச்சுட்டு, சத்தியமா நானும் இதைத் தான் நினைச்சேன்.

என்ன இருந்தாலும் "ரூம் மேட்"
ர்ர்ர்ர்ரூம் மேட் தான். :-)
ஆ? ப்ரகாஷ்!! நீங்களுமா?

சென்னைல இந்தப்படம் பார்க்காதது நான் மட்டும்தான் போல்ருக்கே!
க்ருபா,
இருங்க, அவசரப்படாதீங்க, திருட்டு விசிடி வந்துரும்; பாப்போம். :-)

அப்போ படம் ஓடும்கீறீங்க?!
பிரகாசரு சொன்னா சரிதான்!

எம்.கே.
Raja said…
உங்களைப் போல நானும் வருடத்திற்கு ஒரு படமாவது எதிர்ப்பார்க்கிறேன். சில அருடங்களாக கொண்டாடாத திபாவளி ,பொஙகல் எல்லாவற்றையும் தலைவர் படம் வெளியான அன்று தான் கொண்டாடினேன்.

ரஜினி எப்பவுமே மக்களின் என்டெர்டய்னர் என்பதில் எப்பொழுதும் சந்தேகமில்லை.
ரசிகர்களையும் திருப்திபடுத்தும் படம்
Mookku Sundar said…
http://www.coolgoose.com/go/song?id=175739&get=bin

ரா,,ரா பாடலின் தெலுங்கு பதிப்பின் mp3 வடிவம் - இறக்கிக் கொள்ள

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்