1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ?
2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்?
3. எல்லாரும் சடுதியில் முடித்து விட்டுப் போக, எனக்கு முன்னால் நிற்கிறவன் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம்
'உச்சா' போவது ஏன்?
4. நாளை மற்றுமொறு நாளே என்ற குட்டி புஸ்தகத்தை நாற்பது நாளாகப் படித்தும் இன்னும் முடிக்க
முடியாமல் இருப்பது ஏன்?
5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்?
6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்?
7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்?
8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்?
9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்?
...
[ ஸ்பாய்லர் உண்டு ] நிஜ வாழ்க்கை நாயகர்கள் மீது மணிரத்னத்துக்கு இருக்கும் பிரேமை அலாதியானது. வேலுநாயக்கர், ஆனந்தன், தமிழ்ச்செல்வன் என்று நிழல் உலகத்தில், வரதராஜ முதலியார்,எம்ஜி.ஆர்.கருணாநிதி போன்ற்வர்களுக்கு அச்சு அசலான பிரதியை உருவாக்குவதில் மணிரத்னம் சில சமயங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். குரு படத்தில், அவர் முயன்றிருப்பது, இந்திய வர்த்தக உலகத்தில் கொடிகட்டிப் பறந்து மறைந்த தீரஜ்லால் ஹீராலால் அம்பானியின் செலூலாய்ட் பிரதியை. கட்டுபடுத்தப்பட்ட பொருளாதாரத்தில் வர்த்தகத்தைத் துவக்கி, வெற்றிகரமாக நடத்தி, பின்னர் தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திலும், வெற்றி வாகை சூடியவர் அம்பானி. அவர், 'நல்லவை' என்று அகராதி குறிப்பிடும் அர்த்தத்துக்கு ஈடான கொள்கைகளை வைத்திருந்தவர் இல்லை என்றாலும், அதே அகராதி, 'சாமர்த்தியம்' என்று குறிப்பிடும் அர்த்ததுக்கு ஈடாக குணங்களைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட, நல்லவரா கெட்டவரா என்று எளிதிலே கணிக்க முடியாத அம்பானியை, கதையை வைத்து கதை பின்னுவது, அப்படி ஒன்றும் கம்பசூத்திரமல்ல, மணிரத்னத்துக்கு, நிஜத்திலே, ஏடன் செல்லும் அம்பானியை, திரையில் துருக்கிக...
சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு - 2005 வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி, மாலை ஐந்து மணியளவில், கடற்கரையில், காந்தி சிலை அடிவாரத்தில், வலைப்பதிவாளர்கள் அனைவரும் சந்தித்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். இது கூட்டமோ மாநாடோ அல்ல. வெறும் சந்திப்பு மட்டுமே. இதற்கென்று நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை. இந்தக் கூட்டத்தை நெறிப்படுத்தி நடத்துபவர் என்று யாரும் கிடையாது. வரவேற்புரை, தலைமை உரை, நன்றி நவிலல் என்ற சம்பிரதாயங்கள் கிடையாது இந்தச் சந்திப்பிற்கு, சென்னை, மற்றும் சுற்றி இருக்கும் நகரங்களில் இருப்பவர்கள், தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். யார் யார் எல்லாம் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்? 1. சென்னையில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் 2. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் வலைப்பதிவாளர்களும், அண்டை மாநில வலைப்பதிவாளர்களும் 3. அயல்நாட்டில் இருந்து சென்னைக்கு விடுப்பில் வந்திருப்பவர்களும், வர இருப்பவர்களும் 4. வெளிநாட்டில் இருப்பவர்கள், தத்தம் முதலாளிகளுக்கு, " as i am suffering from fever... " என்று தொடங்கும் விடுப்புக் கட...
Comments