இணையத்தில் ரசித்தது.

இந்த வாரத் திண்ணையில் ரோசா வசந்த் என்கிற ஒரு அன்பர் எழுதிய , சுத்தமாக ஒரு மண்ணும் புரியாத ஒரு நீண்ண்ண்....ட கட்டுரையில் ( மடல்) எனக்கு பிடித்த ஒரு
பகுதி.

நன்றி: திண்ணை


.........." இந்த அசட்டு நகைச்சுவை என்பதை பார்போம். அதற்கு ஒரு சரியான உதாரணமாய் நம்ம நடிகர் Y. G. மகேந்திரனை சொல்லலாம். சோ கூட பெரும்பாலும் அசட்டு நகைச்சுவைதான் செய்வார் என்றாலும், 'தேன்மழை', 'கலாட்டா கல்யாணம்' என்று அவ்யப்போது அதிலிருந்து சற்று மீறியும் இருப்பார். ஆனால் பொதுவாக சோவின் நகைச்சுவையை (அவரின் அரசியல் நையாண்டிகளையும் சேர்த்து) இந்த அசட்டு நகைச்சுவைக்கு உதாரணமாய் சொல்லலாம். கிரேஸி மோகனின் நாடகங்களை பார்த்தால் அது ஏதோ மாம்பலம், மைலாப்பூரில் வாழ்பவர்களுக்காகவே எழுதபட்டது போல் தோன்றும். (சொன்னது நானில்லை, எனக்கு பிடிக்காத VHPயில் இருந்தாலும் நான் சில நேரம் ரசிக்கும், அசட்டு நகைச்சுவையிலிருந்து மீறீ இருக்கும் S. V. ஷேகர் சொன்னது). கிரேஸி மோகனின் நாடகங்கள் அசட்டு நகைச்சுவையையே கொண்டிருந்தாலும் அவரும் 'மைக்கேல் மதன காமராஜன்', 'தெனாலி' வசனங்களில் குத்தல் நக்கல் வசனங்களை கையாண்டு கொஞ்சம் அதிலிருந்து வெளிவந்திருப்பார். அசட்டு எழுத்து என்பதில் ஒரு சாதனை படைத்த இலக்கிய மேதையாக தேவனை சொல்லலாம்.

இதற்கு நேர்மாறான நகைச்சுவையும் உண்டு. எனக்கு எல்லா வகை எழுத்தும், எல்லா வகை நகைச்சுவையும் வேண்டும் என்றாலும், இந்த வகை நகைச்சுவை கொஞ்சம் டீஸன்ஸி கம்மியாக ஒரு எண்ணம் நமக்குள் வந்துவிட்அது. அதாவது நம்ம கவுண்டமணி, செந்தில். இவர்கள் செய்யும் நக்கலும் குத்தலும் பார்த்தீர்களானால், இந்த அசட்டுதனம் இருக்காது. நக்கல், நையாண்டி போன்றதை அடிப்படையாய் கொண்டிருக்கும். தமிழில் இது கொஞ்சம் ஃபேமஸ். இதை தொடங்கி வைத்த்து நம்ம மதிப்பிர்குரிய நடிகவேள் ( என்ன விவாதித்தாலும் இந்த பட்டமெல்லாம் மறக்கமாட்டேனென்கிறது.) M. R. ராதாதான். ஒரு மொனொடானஸா நடித்து கொண்டிருந்த சமயத்தில் இவர்தான் எல்லாவற்றையும் நையாண்டி செய்யும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்தாதாக என் சிற்றறிவின் முடிவு. (கலைவாணர் அவர் வேறு வகை). இதான் பிரச்னை, பேச்சு ட்ராக் மாறி என்கேயோ போய்விட்டது.

எங்க திருநெல்வேலி மதுரை பக்கம் வந்தால் ( ஸாரும் அந்த பக்கம்தானோ?) குசும்பு, குதர்க்கம் இல்லாம பொதுவா எவனுக்கும் பேச வராது. வடிவேல் கிட்ட இந்த குசும்புதான் அலாதியாய் வெளிபடுகிறது. என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்த அசட்டு நகைச்சுவைக்கு எதிரான இது போன்ற (லாஜிக்கை கலைத்து போடும்) நகைச்சுவைக்கு மவுசு உண்டுன்னாலும், அது குறித்து மரியாதை குறைவா பலருக்கும் எண்ணம். எனக்கு தூத்துகுடி இஞ்சி மீதுள்ள பற்று போல் இந்த வகை நக்கல் கலந்த நகைச்சுவை மீதுதான் பற்று அதிகம்......."


Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

9 weird things about prakash

மிக்ஸர் - I