Prakash's Chronicle

ஜாகை மாத்தி ரொம்ப நாளாச்சு... புது வீட்டுக்கு வாங்க

Tuesday, June 07, 2005

 

Book Meme

இணையத்தில் ஒரு ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. செந்தில் என்னையும் இதிலே இழுத்து விட்டுட்டார்.

ஆகவே என்னோட லிஸ்ட்

என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை

சுமார் 150-200

கடைசியாக வாங்கிய புத்தகம்

அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதி ( இரண்டு பாகங்கள் )

கடைசியாக வாசித்த புத்தகம்.

Red Tape Guerilla by N.Vittal

எனக்கு மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள்

ஆங்கிலம்

Pappilon - Henri Charriere
Fourth Protocol - Frederick Forsyth
Kane & Abel - Jeffry Archer
Mr.Sampath - R.K.Narayan
Indira Gandhi, An Intimate Biography- Pupul Jayakar

தமிழ்

காகித மலர்கள் - ஆதவன்
வாஷிங்டனில் திருமணம் - சாவி
நைலான் கயிறு - சுஜாதா
ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர.ராமசாமி
தேர் - இரா.முருகன்

இந்த ஆட்டத்தை இவர்களும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ஐந்து பேர்

மதி
ராஜ்குமார்
நிர்மலா
கே.வி.ராஜா
மூக்கு சுந்தர்

Comments:
பிரகாஷ்ஜி,

அதென்ன அஞ்சுபேர் மட்டும்?
 
எனக்கும் தெரிலேப்பா... என்னை tag பண்ணவர் , அஞ்சு பேரைச் சொல்லி இருந்தார். ஆகவே நானும் அஞ்சு பேர். :-)
 
Thanks Prakash, for immediate action. It is not restricted to 5, it is minimum 5. Some people have added another category, 'Books you want to throw out'. Aaana Tamil Blogsla serious prachanai aayidumnu I skipped that question :-).
 
ஆட்டத்தில் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி பிரகாஷ். பதிவிட்டிருக்கிறேன்.

http://mathy.kandasamy.net/musings/2005/06/07/209

மதி
 
உங்க ஆசையைக் கெடுக்க முடியுமா? ம்ம் போட்டாச்சு...

http://kvraja.blogspot.com/2005/06/book-meme.html
 
நன்றி மதி, கேவிஆர்

//Thanks Prakash, for immediate action//

செந்தில் , YW. தூக்கிப் போட வேண்டிய புஸ்தகத்தை ஏன் உட்டுடீங்க? தெரிஞ்சிருந்தால் நான் சேர்த்திருப்பேன். தமிழ் வலையுலகத்திலே சண்டைக்கெல்லாம் பஞ்சமே இல்லை. அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது.. :-)
 
தலீவா, இதே மாதிரி Music Batonன்னு ஒண்ணு லேட்டஸ்ட்டா சுத்திக்கினு இருக்கு. உங்க கணியில எவ்வளவு பாட்டு சேர்த்து வைச்சிருங்கிங்க, கடைசியா வாங்கின சி.டி எது. பிடிச்ச 5 சிடி, பிடிச்ச 5 பாட்டு, பிடிச்ச 5 பாடகர்கள், பிடிச்ச 5 இசையமைப்பாளர்கள்ன்னு ஒடும்.

இன்னா ரெடியா?
 
செந்தில் சொன்னபடி நானும் முறைவாசல் பண்ணிட்டேன்.

காகித மலர்கள் இந்த வார இறுதியில் சென்னை வரும் போது வாங்கிர வேண்டியது தான். பல பேர் சொல்றாங்கப்பா.
 
ஆரம்பிங்க... வந்து ஜாய்ன் பண்ணிக்கிடுறேன்... வலிப்பதிவுங்கோ கெடக்கற கெடப்புலே, ஏதோ கொஞ்சம் temporary releif ...என்ன நாஞ்சொல்றது...?
 
//காகித மலர்கள் இந்த வார இறுதியில் சென்னை வரும் போது வாங்கிர வேண்டியது தான். பல பேர் சொல்றாங்கப்பா.//

அவசியம் படிங்க... படிச்சு முடிச்சோடனே, ஒடம்பு அப்படியே வெலெவெலன்னு ஆயிரும். அந்த மாதிரி யோசிக்கிறதுலே, ஆதவன் மாதிரி ஒருத்தரைப் பார்த்ததில்லை. சமீபத்துலே அவரோட ஒரு சிறுகதைத் தொகுதி கூட வந்திருக்கு
 
இப்போது தான் பார்த்தேன் ப்ரகாஷ். நாளைக்குப் போடறேன். நன்றி.
 
அண்ணாச்சி,

கொஞ்சம் டயம் குடுங்க. போட்ருவம்.

வேலை டைட்டு. இந்த வாரம் ஒரே இம்சை வாரமா இருக்கு. :-(
 
நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களின் அஞ்சு "பேர்"

என் அப்பா, அம்மா, இல்லத்தரசி கீதா, மூத்த மகள் தமிழ்நிலா, இளையமகள் சூர்யா தேவி :-))
 
போட்டாச்சு ப்ரகாஷ்.

http://nirmalaa.blogspot.com/2005/06/book-meme.html
 
பிரகாஷ்,

ஏதோ ..என்னாலானது.

http://mynose.blogspot.com/2005/06/blog-post_08.html

தேங்க்ஸ் வாத்யாரே.
 
காகித மலர்களையும், தேரையும் படிக்கவேண்டும். மற்ற 3 புத்தகங்களைப் படித்திருக்கிறேன், ஜெ.ஜேயை படிக்கும் போது மிகவும் விரும்பி வாசித்தேன். அதில் பயன்படுத்தப்ப்ட்டிருக்கும் உவமைகள், இன்றும் மனதில் தோன்றிக்கொன்டே இருக்கும். கிணற்றில் மீன்கள் எழும்பிவருவதுபோல ஒரு சிந்தனை மெல்ல மேலெலும்பி துலக்கம் பெரும் என்று ஒரு உவமை (நன்றாக எழுதியிருப்பார்) இன்றும் காட்சிப்பூர்வமாக மனதில் வரும். நன்றிகள்.
 
மாண்ட்ரீஸரின் பதிவில் நீங்கள் வாஸவேச்வரம் பற்றி கேட்டது ஞாபகம் வந்தது. எழுத்தாளர் திலீப் குமார் பற்றி இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, வாஸவேச்வரம் பற்றிய இந்த குறிப்பு கிடைத்தது. பிரகாஷ், உங்களுக்கும் உபயோகப்படலாம்.
 
ரொம்ப நன்றி சந்தோஷ்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< HomeMoved to here