Hutch : The Boy and the Pug

ம் poor man's Shunu Sen பக்கம் கொஞ்சம் தலை காட்டலாம் என்று எண்ணம்.

பிரபலங்களை மையமாக வைத்து விளம்பரங்கள் செய்வது ( celebrity endorsement) பற்றிய பல்வேறு கருத்துக்களை, சமீபமாக நாளிதழ்களில் படித்து வருகிறேன். பிரபலங்களின் , பிராபல்யத் தன்மை குறைவதும், அதிகமாவதும், அவர்கள் விளம்பரம் செய்யும் பிராண்ட் களை பாதிக்கும் என்பது ஒரு சாரார் சொல்வது. அது அப்படி அல்ல, என்று சில விளம்பர உலகின் தாதாக்கள், புள்ளிவிவரக் கணக்கை வைத்துக் கொண்டு, படம் காட்டி நிருபிக்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மாதிரி பிரபலங்கள் இல்லாமலேயே சக்கை போடு போட்ட ஹட்ச் நிறுவனத்தின் விளம்பரம் பற்றி சில வார்த்தைகள்.

இந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். படு அழகான ஒரு குட்டிப் பையனும், அதை விட அழகான ஒரு நாயும் தோன்றும் ஒரு விளம்பரத் தொடர். இந்த விளம்பரத்தின் பயனாக, ஹட்ச் செல்பேசி சேவைகளின் விற்பனை கூடியிருக்கிறது, brand awareness உம் கூடியிருக்கிறது என்று செய்திகள் சொல்கின்றன. இந்த விளம்பரத்தின் மாஸ்டர் மைண்ட், O & M நிறுவனத்தின் "national creative director [ இதைத் தமிழ் படுத்தினால் தேசிய படைப்பு இயக்குனர் என்று வினோதமாக இருக்கிறது என்பதால் ஆங்கிலத்திலெயே இருக்கட்டும் :-) ] பியுஷ் பாண்டே.

கடந்த சில மாதங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய விளம்பரம் இது. ஒரு pug வகை நாய்க்குட்டி, ஒரு சின்னப் பையன் எங்கே போனாலும் கூடவே வந்து கொண்டிருக்கிறது. குளிக்கும் போது, விளையாடும் போது, ஊஞ்சலாடும் போது என்று எங்கே போனாலும் அவனைத் தொடர்கிறது. வசனம் எதுவும் இல்லாமல், " wherever you go our network follows " என்ற voice over உடன் விளம்பரம் முடியும். ஹட்ச் நிறுவனம், இதே கருத்தில், வெவ்வேறு பல விளம்பரங்களை தொடர்சியாக ஒளிபரப்பியது. ஆனால் இந்த விளம்பரத்தின் தொடர்ச்சியாக சில வாரங்களுக்கு முன்பு வந்த விளம்பரம், சின்ன சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த விளம்பரத்தில், அதே சின்னப் பையன் நடந்து பாத்ரூமுக்குள் வருகிறான். வழக்கம் போலவே அந்த நாய்க்குட்டியும் அவனைப் பின் தொடர்கிறது. அந்தப் பையன் தன் நிஜாரைக் கழட்டிக் கொண்டே திரும்பப் பார்க்கிறான். அந்த pug அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவன் முகத்தில் சலிப்பு, அதைக் கொண்டு போய் வெளியே விட்டு விட்டு, அறைக்குள் செல்கிறான். வழக்கம் போல ஒரு வாய்ஸ்- ஓவரில், " wherever you go our network follows " .

எங்கே போனாலும் எங்கள் இணைப்பு உங்களைத் தொடரும்... சரி.. ஒத்துக்கிறேன். ஆனால், . எனக்கு வேண்டாத இடத்தில் கூடவே வந்து என்னைத் தொல்லைப் படுத்துமா உங்கள் சேவை? என்று விளம்பர அனலிஸ்ட்டுகள், வணிக நாளிதழ்களின் சப்ளிமெண்டுகளில் பத்தி பத்தியாக எழுதி மாய்கிறார்கள். இதைத்தான் back-fire என்பார்கள்.

நியாயம் தானே அவர்கள் சொல்வதும்?

Comments

I think too much is read into the ad. நாய் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அதற்கு இவ்வளவு அதிகபட்சமாய் அர்த்தம் கற்பித்துக் கொள்வது, கடைசியில் பாரபட்சமாய் முடிந்து விடுகிறது. தேவையற்ற இடம் என்பதை வரையறை செய்வதும், அங்கு செல்போனை எடுத்துச் செல்லாமல் இருப்பதும், பயன்படுத்தும் மனிதர்களின் சாமர்த்தியத்தில் இருக்கிறது. நெட்வொர்க்கைக் குறை காணுவதில் என்ன அர்த்தமுண்டு?
Santhosh Guru said…
பிரகாஷ், நீங்கள் பதிந்திருக்கும் இதே கருத்தினை எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வரும், "கார்ப்பரேட் தாஸியே (Corporate Dossier)" விலும் சொல்லியிருக்கிறார்கள் (சுட்டி கொடுக்க முயன்றேன்.. முடியவில்லை :()
Santhosh Guru said…
ஆகா...நீங்க கடைசி பத்தியில் சொல்லியிருப்பதை அவசரத்தில் பார்க்காமல் கமெண்ட்டி விட்டேன்... எச்கூச் மீ:)
மீனாக்ஸ் : you have a point. இதை ஒரு நாளிதழின் சப்ளிமெண்ட்டில் படித்தேன். அட இப்படியுமொரு கோணம் இருக்கிறதா என்று இங்கே எழுதினேன்.

சந்தோஷ் குரு : நான் கூட இணையத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். brand equity யா அல்லது corporate dossier ஆ என்று சரியாக நினைவில்லை

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்