ET Awards - Entrepreneur of The Year
இந்த வருட "Economic Times - Entrepreneur of The Year" விருது, கெவின்கேர் சி.கே.ரங்கநாதனுக்குக் கிடைத்திருக்கிறது.
1983 இல், வெறும் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய, ஒரு சின்ன நிறுவனம் , இன்றைக்கு 350 கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. இன்றைக்கு மிகப் பெரிய ரீடெயில் முதலைகள், rural marketing பக்கம் திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, ரங்கநாதன், அதை 15 வருடங்களுக்கு முன்பே செய்து சந்தையைப் பிடித்தவர். இவரை price player என்று வர்ணிப்பார்கள் அல்லது குற்றம் சாட்டுவார்கள். மார்க்கெட்டில் ஷாம்பூக்கள் பாட்டிலில் அடைத்து 40 ரூபாய் அளவில் விற்ற போது, அதிரடியாக, ஒரு சாஷேயில் பாக் செய்து, 50 காசுக்கு விற்று, ஷாம்பூ போன்ற நகர மக்கள் உபயோகப் படுத்தும் பொருளை குட்டி நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றவர். [ தற்போதைய விலை ஒரு ரூபாய்.]வெல்வெட் ஷாம்பூ, சிக் ஷாம்பூ என்று சாஷேயில் ஒரு குட்டி புரட்சியை நிகழ்த்தியவர். நான்கு காலி கவர்களைக் கொடுத்து விட்டு, ஒரு ஷாம்பூ பாக்கெட்டை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற டெக்னிக்கையும் அறிமுகப் படுத்தியவர் இவர்தான்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழையும் போது, லோக்கல் தாதாக்களை ( நிறுவனங்களை ) ஸ்வாஹா செய்து விடும். [ஒரு infamous உதாரணம், ரமேஷ் சவுஹானின்[பார்லே] , சா·ப்ட் ட்ரிங்க்ஸ் பிசினஸ்). ஆனால், சி.கே.ரங்கநாதன் , செலவைக் கட்டுக்குள் வைத்து, வினியோகத்தில் முழுத்திறமையையும் காட்டி, விலையை குறைச்சலாக வைத்து எல்லோருக்கும் தண்ணி காட்டினார். இவருடைய பொருட்கள் இந்தியா முழுதும் பத்து லட்சம் கடைகளில் விற்கப்படுகின்றன. காஸ்மெடிக் பொருட்களில், ·பேர் & லவ்லி க்கு அடுத்த படியாக இருப்பது, இவருடைய ·பேரெவெர் ·பேர்னஸ் க்ரீம் தான். கெவின் கேர் நிறுவனத்தின் வளர்ச்சியால், அதிக அளவில் மார்கெட்டை இழந்தது, பன்னாட்டு நிறுவனமான ஹிந்துஸ்தான் லீவர். contract manufacturing என்ற முறைப் படி, பொருட்களின் தயாரிப்பு முழுவதையும் வெளி ஆட்களிடம் கொடுத்து விட்டு, விற்பனை விநியோகம் ஆகியவற்றை மட்டும் செய்கின்ற இவரது முறையை, இன்றைக்கு பலரும் பின் பற்றுகிறார்கள்.
நகரங்களில் பிறந்து , மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் படித்து விட்டு, மிகுந்த அறிவும், தொழில் நுட்பத் திறனும், பணமும், [இல்லாவிட்டால் பணத்தை 'உஜார்' செய்கின்ற திறமையும்], ஆங்கில அறிவும் கொண்டு பிசினஸ் துவக்கி வெற்றி பெறுபவர்கள் பலரை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இளங்கலைப் படிப்பு ( பி.எஸ்ஸி, வேதியியல்) மட்டும் படித்து விட்டு ( பள்ளியில் தமிழ் மீடியம்) படித்து விட்டு, தொழில் துவங்கி, வெற்றிகளைப் பெற்ற , பெறுகின்ற , கடலூரில் பிறந்து வளர்ந்த இந்த இளைஞர் சி.கே.ரங்கநாதனுக்கு அடியேனின் வாழ்த்துக்கள்.
2012 இல், தன் நிறுவனம் 5000 கோடி ரூபாய் நிறுவனமாக வளர வேண்டும் என்பதுதான் இவருடைய லட்சியமாம்.
பார்க்கலாம்.

Comments